search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker arrest"

    செம்பட்டி அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    ஆத்தூர்:

    செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது25). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித்தொழிலாளி. இவரும் சிலம்பரசனும் உறவினர்கள்.

    சம்பவத்தன்று சிலம்பரசன் அப்பகுதியில் ஆட்டோவில் சவாரி சென்று விட்டு பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் சிலம்பரசனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.

    இதுபற்றி சிலம்பரசன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

    செம்பட்டி பகுதியில் போலி மது விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    எனவே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    தக்கலை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    தக்கலை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாதம் 19-ந்தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவியை தேடி பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

    மேலும் மாணவியை கண்டு பிடிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்களும் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியை மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் ராஜகுமார்(வயது22). தொழிலாளி என்பவர் மாணவியை கேரளாவுக்கு கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று ஜெஸ்லின் ராஜகுமார் மற்றும் கடத்தப்பட்ட மாணவியையும் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் இருவரையும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ஜெஸ்லின் ராஜகுமாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் காவலாளியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் அருள் (40). இவர் சேவூரில் உள்ள இந்தியன் உணவுக்கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேதாஜி நேற்று இரவு 8 மணியளவில் சேவூரில் உள்ள பொது இடத்தில் வைத்து மது அருந்தினார்.

    அப்போது அங்கு வந்து அருளும் மது அருந்தி உள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.

    அப்போது நேதாஜி மதுபோதையில் அருளின் கையில் கடித்தார். அதனால் வலியில் துடித்த அருள் ஆத்திரம் அடைந்து நேதாஜியை சரமாரியாக கைகளால் தாக்கினார்.

    பின்னர் அவரின் தலையை பிடித்து அருகேயுள்ள சுவரில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த நேதாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அருளை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டியில் ஓட்டல் அதிபரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 55). இவரது மகன் பிரகதீஸ்வரன்(20). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றார். நேற்று மாலை 4 மணியளவில் பிரகதீஸ்வரன் ஒட்டலில் இருக்கும் போது நத்தம் கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம்(42) என்பவர் பிரகதீஸ்வரினிடம் டிபன் கேட்டார். அதற்கு டிபன் இல்லை என அவர் கூறினார்.

    இதன் காரணமாக திருவேங்கடம் பிரகதீஸ்வரனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த பிரகதீஸ்வரன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து திருவேங்கடத்தை கைது செய்தனர். #tamilnews
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனியைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 37), கூலி தொழிலாளி. இவர் சைகை மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராஜபாண்டி கைது செய்யப்பட்டார்.
    ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகன் மற்றும் மகளுடன் போராட்டம் நடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    வால்பாறை கக்கன் காலனியை சேர்ந்த அஜிஸ் என்கிற மஸ்தான் என்ற தொழிலாளி அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் அஜ்மிகா(10), அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மல்(6) ஆகியோரை அழைத்துக்கொண்டு வால்பாறை காந்தி சிலை முன்பு இன்று திடீர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது ஆசிரியர்கள் போராட்டத்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கூறினார். இதனையடுத்து வால்பாறை போலீசார் மஸ்தான் மற்றும் மாணவர்களை கைது செய்தனர். இந்த தகவல் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவருக்கு தெரியவந்ததும் அவர் வால்பாறையில் கைது செய்யப்பட்ட மஸ்தான் மற்றும் மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார். #tamilnews
    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர்பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது 28). இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கோபாலின் மனைவி திருவெண்ணைநல்லூரில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் கோபால் திருவெண்ணைநல்லூருக்கு வந்து செல்வார்.

    இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கோபாலின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கோபால் ஆனத்தூருக்கு வந்திருந்தார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கோபால் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்ல கூடாது என அந்த சிறுமியை கோபால் மிரட்டி சென்றார். இதில் பயந்து போன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை.

    இந்த நிலையில் சிறுமி தனக்கு அடிக்கடி வாந்தி- மயக்கம் ஏற்படுவதாக தனது பெற்றோரிடம் கூறினர். இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி சிறுமி கதறி அழுதார். அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பத்மா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தார்.
    மதகடிப்பட்டில் சமையல் மாஸ்டரை அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    மதுரையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் புதுவை மதகடிப்பட்டு கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் மதுரை விடத்தகுளத்தை சேர்ந்த குருசாமி (வயது51 ) சமையல் மாஸ்டராகவும், மதுரை தொட்டியாம்பட்டியை சேர்ந்த கண்ணன்(40) என்பவர் சப்ளையராகவும் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் நாகராஜ் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றிருந்தார். ஓட்டலை குருசாமியும், கண்ணனும் நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கண்ணன் ஓட்டல் உரிமையாளர் நாகராஜிக்கு போன் செய்து குருசாமியை அடித்து போட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் நேற்று காலை ஓட்டலுக்கு விரைந்து வந்தார். அப்போது ஓட்டலில் குருசாமி அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கண்ணன் குடிபோதையில் குருசாமியை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு மதுரைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளி கண்ணனை கைது செய்ய நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு திருமங்கலம் பஸ் நிலையத்தில் ஊருக்கு தப்பி செல்ல நின்றிருந்த கண்ணனை சுற்றி வளைத்து கைது செய்து திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு சமையல் மாஸ்டர் குருசாமியை அடித்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசாரிடம் கண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் நாகராஜின் ஓட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு குடிப்பழக்கம் உண்டு. நான் தினமும் இரவு வேலை முடிந்ததும் மதுகுடித்துவிட்டு ஓட்டலில் குருசாமியுடன் தங்கி விடுவேன்.

    நேற்று முன்தினம் ஓட்டல் உரிமையாளர் நாகராஜ் திருச்சிக்கு சென்றார். அதனால் ஓட்டலை மூடிவிடும்படி குருசாமியிடம் தெரிவித்தேன். ஆனால் இதற்கு குருசாமி மறுத்து ஓட்டலை திறந்து பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை தயாரித்தார். மேலும் என்னை குருசாமி தகாத வார்த்தைகளால் திட்டி என்னை பற்றி ஓட்டல் முதலாளியிடம் போனில் தெரிவித்தார். இதனால் குருசாமி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவரிடம் தகராறு செய்தேன்.

    பின்னர் ஓட்டலில் வியாபாரம் முடிந்ததும் இரவு மதுக்கடைக்கு சென்று மதுகுடித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பினேன். அப்போது மீண்டும் இதுதொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    குடிபோதையில் இருந்த எனக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து குருசாமியின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் குருசாமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். ஆனால் குருசாமி இறந்து போவார் என தெரியாமல் இதுபற்றி ஓட்டல் உரிமையாளர் நாகராஜிக்கு போனில் தெரிவித்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தேன். அப்போது திருமங்கலம் பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு கண்ணன் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். போலீசார் கண்ணனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    சங்கரன்கோவில் அருகே மது விற்றதை தட்டி கேட்ட போலீசாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கலிங்கப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 45). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அடித்து உடைக்கப்பட்டது. அதன் பின் அங்கு கடை திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் கோவிந்தன் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் கலிங்கப்பட்டியில் உள்ள கோவிந்தன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து 5 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    கோவிந்தன் அந்த பாட்டில்களை தான் விற்பனை செய்யவில்லை என மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். மேலும் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மதுபாட்டில்களை விற்பனை செய்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தனை கைது செய்தனர்.
    திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.380 தினக்கூலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி ஒப்பந்த ஊழியரை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    மேலும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் திருமலைபாலாஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 253 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை நங்கநல்லூரில் ஓடஓட விரட்டி குரைத்ததால் ஆத்திரம் அடைத்து நாயை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை நங்கநல்லூர் ரகுபதி தெருவை சேர்ந்தவர் ராஜா (48). கூலி தொழிலாளி. நேற்று இரவு மது அருந்தி விட்டு அங்குள்ள சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு நின்ற நாய் ஒன்று அவரை பார்த்து குரைத்தது. அவர் விரட்டினார். ஆனால் அந்த நாய் அவரை விடவில்லை. தொடர்ந்து பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. அவர் சத்தம்போட்டு விரட்டினாலும் போகவில்லை.

    நாய் ஆக்ரோசமாக ராஜாவைவிடாமல் குரைத்ததால் ஆத்திரம் அடைந்தார். அருகில் கிடந்த கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் நாய் சுருண்டு விழுந்து இறந்தது.

    இதுபற்றி புளூகிராஸ் அமைப்புக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பழவந்தாங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நாயை அடித்து கொன்றதாக ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
    உடுமலையில் 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மைவாடி கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகசாமி(48).தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் பள்ளி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி முருகசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×