என் மலர்
செய்திகள்

செம்பட்டி அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டல் - தொழிலாளி கைது
செம்பட்டி அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:
செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது25). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித்தொழிலாளி. இவரும் சிலம்பரசனும் உறவினர்கள்.
சம்பவத்தன்று சிலம்பரசன் அப்பகுதியில் ஆட்டோவில் சவாரி சென்று விட்டு பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் சிலம்பரசனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
இதுபற்றி சிலம்பரசன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
செம்பட்டி பகுதியில் போலி மது விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story






