என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youth threat"
ஆத்தூர்:
செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது25). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித்தொழிலாளி. இவரும் சிலம்பரசனும் உறவினர்கள்.
சம்பவத்தன்று சிலம்பரசன் அப்பகுதியில் ஆட்டோவில் சவாரி சென்று விட்டு பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் சிலம்பரசனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
இதுபற்றி சிலம்பரசன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
செம்பட்டி பகுதியில் போலி மது விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை கக்கன்புதூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கவிதா (வயது 39). இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் தற்போது நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
எனது 2-வது மகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்தபோது கக்கன்புதூரைச் சேர்ந்த வசந்தராஜன் (21) என்ற வாலிபர் எனது மகளை பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறி உள்ளார். எனது மகளையும் காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார்.
இதனால் நான் அந்த வாலிபரையும், எனது மகளையும் கண்டித்தேன். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்ற பிறகும் எனது மகளை அவர் பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்தார். திருமணம் செய்வதாகவும் கூறினார்.
மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உனது குடும்பத்தோடு உன்னை வாழ விட மாட்டேன் என்றும் எனது மகளை மிரட்டி வந்தார்.
இந்தநிலையில் கடந்த வாரம் வசந்தராஜனும், அவரது நண்பர் ஒருவரும் எனது வீட்டுக்கு வந்து எனது கணவரிடம் மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டனர். அப்படி திருமணம் செய்து கொடுக்காவிட்டால் எனது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாக அவர் மிரட்டினார். இதனால் கடந்த 8-ந் தேதி எனது மகள் வீட்டு கழிவறையில் வைத்து விஷம் குடித்து விட்டார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அதன்பிறகும் வசந்தராஜனும், அவரது நண்பரும் தொடர்ந்து எனது மகளிடம் தகராறு செய்து வருகிறார்கள். எனவே வசந்தராஜன் மற்றும் அவரது நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதுபற்றி இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வசந்தராஜன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்