என் மலர்
நீங்கள் தேடியது "worker arrest"
- போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- குடிபோதையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த சுதன் (வயது 30) என்பவர் வசித்து வந்தார்.
அவர் மாணவியின் தந்தையுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அப்போது சுதன் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வந்து செல்வார்.
சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வங்கிக்கு சென்று இருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். குடிபோ தையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
பின்னர் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
பெற்றோர் வந்ததும் மாணவி நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவிக்கு கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணகுமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. மாணவியை சரவணகுமார் திருமண ஆசை காட்டி தனியாக அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். எதையும் வெளியே சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டினார். மேலும் அடிக்கடி மாணவியை மிரட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இதனால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி அங்குள்ள கழிப்பறைக்கு சென்று பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியின் பெற்றோர் அவரிடம் எதற்காக தற்கொலை செய்ய முயன்றாய் என விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணகுமார் அடிக்கடி தன்னை அழைத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை மிரட்டி கற்பழித்த சரவணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேல்பாண்டி. இவர் மேலஇலந்தகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுண்டன்குறிச்சியை சேர்ந்த தொழிலாளி பசுபதி (வயது 45) என்பவர் சட்டவிரோதமாக சாக்குமூட்டையில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை தலைமை காவலர் பிடிக்க சென்றார். அப்போது பசுபதி திடீரென்று மதுபாட்டிலை உடைத்து வேல்பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பசுபதியை கைது செய்தனர்.
ஆத்தூர்:
செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது25). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித்தொழிலாளி. இவரும் சிலம்பரசனும் உறவினர்கள்.
சம்பவத்தன்று சிலம்பரசன் அப்பகுதியில் ஆட்டோவில் சவாரி சென்று விட்டு பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் சிலம்பரசனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
இதுபற்றி சிலம்பரசன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
செம்பட்டி பகுதியில் போலி மது விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தக்கலை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாதம் 19-ந்தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார்.
ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவியை தேடி பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர்.
எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
மேலும் மாணவியை கண்டு பிடிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்களும் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியை மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் ராஜகுமார்(வயது22). தொழிலாளி என்பவர் மாணவியை கேரளாவுக்கு கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று ஜெஸ்லின் ராஜகுமார் மற்றும் கடத்தப்பட்ட மாணவியையும் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் இருவரையும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ஜெஸ்லின் ராஜகுமாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் அருள் (40). இவர் சேவூரில் உள்ள இந்தியன் உணவுக்கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேதாஜி நேற்று இரவு 8 மணியளவில் சேவூரில் உள்ள பொது இடத்தில் வைத்து மது அருந்தினார்.
அப்போது அங்கு வந்து அருளும் மது அருந்தி உள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.
அப்போது நேதாஜி மதுபோதையில் அருளின் கையில் கடித்தார். அதனால் வலியில் துடித்த அருள் ஆத்திரம் அடைந்து நேதாஜியை சரமாரியாக கைகளால் தாக்கினார்.
பின்னர் அவரின் தலையை பிடித்து அருகேயுள்ள சுவரில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த நேதாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அருளை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 55). இவரது மகன் பிரகதீஸ்வரன்(20). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றார். நேற்று மாலை 4 மணியளவில் பிரகதீஸ்வரன் ஒட்டலில் இருக்கும் போது நத்தம் கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம்(42) என்பவர் பிரகதீஸ்வரினிடம் டிபன் கேட்டார். அதற்கு டிபன் இல்லை என அவர் கூறினார்.
இதன் காரணமாக திருவேங்கடம் பிரகதீஸ்வரனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த பிரகதீஸ்வரன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து திருவேங்கடத்தை கைது செய்தனர். #tamilnews
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனியைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 37), கூலி தொழிலாளி. இவர் சைகை மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராஜபாண்டி கைது செய்யப்பட்டார்.
வால்பாறை கக்கன் காலனியை சேர்ந்த அஜிஸ் என்கிற மஸ்தான் என்ற தொழிலாளி அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் அஜ்மிகா(10), அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மல்(6) ஆகியோரை அழைத்துக்கொண்டு வால்பாறை காந்தி சிலை முன்பு இன்று திடீர் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஆசிரியர்கள் போராட்டத்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கூறினார். இதனையடுத்து வால்பாறை போலீசார் மஸ்தான் மற்றும் மாணவர்களை கைது செய்தனர். இந்த தகவல் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவருக்கு தெரியவந்ததும் அவர் வால்பாறையில் கைது செய்யப்பட்ட மஸ்தான் மற்றும் மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார். #tamilnews