என் மலர்tooltip icon

    இந்தியா

    மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகனை குத்திக்கொன்ற தொழிலாளி
    X

    மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகனை குத்திக்கொன்ற தொழிலாளி

    • மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் 4 குழந்தைகளையும் தொழிலாளி வளர்த்து வந்தார்.
    • தந்தையின் பேச்சை கேட்காமல் சிறுவன் மழையில் விளையாட வேண்டும் என அடம்பிடித்துள்ளான்.

    டெல்லி:

    தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியை சேர்ந்த 40 வயது தொழிலாளி ஒருவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் 4 குழந்தைகளையும் தொழிலாளி வளர்த்து வந்தார். நேற்று அந்த பகுதியில் மழை பெய்தபோது தொழிலாளியின் 10 வயது மகன் மழையில் விளையாட ஆசைப்பட்டு தனது விருப்பத்தை தந்தையிடம் கூறினான்.

    அப்போது மழையில் விளையாடக்கூடாது என அவனது தந்தை கண்டித்தார். ஆனால் தந்தையின் பேச்சை கேட்காமல் சிறுவன் மழையில் விளையாட வேண்டும் என அடம்பிடித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் சிறுவன் மீது சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×