கள்ளக்காதலியின் தங்கையான 11-ம் வகுப்பு மாணவியை 3 ஆண்டுகளாக சீரழித்த தொழிலாளி கைது

கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விவேகானந்தன் மாணவியை சீரழித்து வந்து உள்ளார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர்.
கள்ளக்காதலியின் தங்கையான 11-ம் வகுப்பு மாணவியை 3 ஆண்டுகளாக சீரழித்த தொழிலாளி கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன (52). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பிரிந்தார்.

இந்தநிலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் ஒருவருடன் விவேகானந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இளம்பெண்ணுடன் விவேகானந்தன் கணவன்-மனைவி போல் வாழ்ந்தார். அவர்களுடன் அந்த இளம்பெண்ணின் தங்கையும் தங்கி இருந்தார். அவர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே விவேகானந்தன் கள்ளக்காதலியின் தங்கையான பிளஸ்-1 மாணவியையும் மிரட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக அவர் மாணவியை சீரழித்து வந்து உள்ளார். பயந்து போன மாணவி இதுபற்றி தனது அக்காளிடம் சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி விவேகானந்தன் தனது அத்துமீறலை தொடர்ந்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேகானந்தன் தனது தங்கையையும் சீரழித்து இருப்பது அறிந்து இளம்பெண் அதிர்ந்தார். இதுகுறித்து அவர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com