கோத்தகிரி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.
கோத்தகிரி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
Published on

அருவங்காடு:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெரடா மட்டம் வெற்றி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). கூலித்தொழிலாளி.

அதே பகுதியில் 10 வயதான பள்ளி மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். ஒரே இடத்தில் வசிப்பவர்கள் என்பதால் ரவிச்சந்திரனும், சிறுமியின் பெற்றோரும் நட்பாக பழகி வந்தனர். அவ்வப்போது மாணவிக்கு ரவிச்சந்திரன் இனிப்புகளும் வாங்கி கொடுத்தார்.

சமீபகாலமாக ரவிச்சந்திரன், இனிப்பு வாங்கி கொடுத்து தனது வீட்டுக்கே சிறுமியை அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியிடம் அத்துமீறி அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

பல நாட்களாக இந்த பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் விசாரித்துள்ளார். அப்போது ரவிச்சந்திரன் தனக்கு செய்த கொடுமையை கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதைக் கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்த னர்.

உடனடியாக அவர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர். தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவிச்சந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதேபோல கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

அந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேளாங்கண்ணி உதயரேகா, 18 வயது வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com