search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman police"

    ஐதராபாத் அரசு மருத்துவமனை அருகே பசி தாங்காமல் துடித்து கொண்டிருந்த அனாதை கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ் பிரியங்காவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #HyderabadwomanPolice #WomanPolice
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர் நின்றிருந்தபோது, மிதமிஞ்சிய போதையில் அவ்வழியாக வந்த ஒரு பெண் தன் கையில் இருந்த குழந்தையை இர்பான் கையில் திணித்தார்.

    சற்று நேரம் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், இதோ வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்ற அந்தப் பெண் சிலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதற்குள் இர்பான் கையில் இருந்த அந்த இரண்டுமாத பெண் குழந்தை பசி தாங்காமல் அழ ஆரம்பித்தது.

    குழந்தையின் அழுகை அதிகரிக்கவே அருகாமையில் உள்ள தனது வீட்டுக்கு அதை தூக்கிச் சென்ற இர்பான், புட்டிப்பால் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அதை குடிக்க மறுத்த குழந்தையின் கதறல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதற்குள் இரவு நெருங்கி விட்டதால், என்ன செய்வது? என்று புரியாமல் தவித்த இர்பான் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

    குழந்தையை தூக்கிக்கொண்டு அருகாமையில் இருக்கும் அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இரவுநேரப் பணியில் இருந்த தலைமை காவலர் ரவீந்திரனிடம் நிலைமையை கூறி, பசியால் துடித்து அழும் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார்.

    அழுதழுது சோர்ந்து பலவீனமாக காணப்பட்ட அந்த குழந்தையின் தவிப்பையும் பசியையும் உணர்ந்த ரவீந்திரன், மகப்பேறு முடிந்து பிரசவ விடுமுறையில் வீட்டில் இருக்கும் தனது மனைவி பிரியங்காவை கைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

    பேகம்பேட் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றும் பிரியங்காவிடம் விபரத்தை கூறினார். கணவன் கூறிய தகவல்களின் இடையே பசியால் துடித்து கதறும் குழந்தையின் அழுகுரல் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த பிரியங்காவின் இதயத்தை பிழிந்தது.

    சற்றும் தாமதிக்காமல் வாடகை கார் பிடித்து அப்சல்கஞ்ச் காவல் நிலையம் வந்துசேர்ந்தார், பிரியங்கா. அங்கு கணவர் ரவீந்திரன் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்ததை கண்ட அவர், உடனடியாக குழந்தையை வாரி அணைத்து, தாய்ப்பால் புகட்ட தொடங்கினார்.



    இந்த தகவலை அறிந்த ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார், தலைமை காவலர் ரவீந்திரனின் கடமை உணர்வையும், பெண் காவலர் பிரியங்காவின் தாய்மை உணர்வையும் பெரிதும் பாராட்டினார். பெற்றோர் தேடிவரும் வரை அந்த பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும் பிரியங்காவிடம் ஒப்படைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உரிய நேரத்தில் அரியதொரு உதவியை செய்த பெண் போலீஸ் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரவீந்திரனுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

    இதற்கிடையில் தெருக்களில் குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் அந்த குழந்தையின் தாயாரை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர். #HyderabadwomanPolice #WomanPolice #WomanPolicePriyanka
    போலீஸ் நிலையத்தில் பெண் ஏட்டை கட்டிப்பிடித்து முத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் ‘லீலை’ வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில போலீசார் மீதும் நடவடிக்கை பாய்கிறது.

    திருச்சி:

    திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு ஒருவரை அதே போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன் (வயது 53) என்பவர் இரவுப்பணியின் போது கட்டிப்பிடித்து முத்தமிட்ட சம்பவம் நடந்தது.

    அப்போது திடீரென அங்கு வந்த உளவுப்பிரிவு ஏட்டு இதைபார்த்து திடுக்கிட்டார். உடனே அந்த பெண் போலீஸ் ஏட்டு, தன்னை சப்-இன்ஸ்பெக்டர் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறினார்.

    இது குறித்து பெண் போலீஸ் ஏட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டிடம் அந்த பெண் போலீஸ் ஏட்டு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் திடீரென கட்டிப் பிடித்ததை எதிர்பார்க்காததால் ஆத்திரத்தில் அவரை தான் அணிந்திருந்த காலணியால் அடித்ததாகவும் கூறினார்.

    இந்த நிலையில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே லீலை நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ஒரு தகவல் வந்தது.

    உடனே போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைப்பார்த்த போது அதில் இரவு 10 மணிக்கு வெளியில் ரோந்து பணிக்கு செல்ல வேண்டிய பாலசுப்பிரமணியன் 10.29 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வருகிறார்.

    அப்போது கம்ப்யூட்டர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் பெண் போலீஸ் ஏட்டு அருகில் சென்று பேசுகிறார். பிறகு அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார். பிறகு உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடுகிறார்.

    இந்த காட்சி 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடுகிறது. இதை பார்த்த உயர் அதிகாரிகள் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே இது நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் காம லீலை நடத்திய சிறப்பு சப்-இன்பெக்டர் பாலசுப்பிரமணியன் மீதும் பெண் போலீஸ் ஏட்டு மீதும் அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் ஏற்கனவே திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து சர்ச்சையில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.

    அதேபோன்று சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு வந்தது முதல் சக போலீசாருடன் கருத்து வேறுபாட்டிலேயே இருந்துள்ளார். இரவு ரோந்து பணி கொடுக்கப்பட்டாலும் அவர் ரோந்து செல்லாமல் போலீஸ் நிலையத்திற்கு வந்து விடுவார்.

    இதற்கிடையே பெண் போலீஸ் ஏட்டு வேறு போலீசாருடனும் பழக்கத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட போட்டியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் பொறி வைத்து சிக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை தொடர்ந்து மேலும் சிலர் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அங்குள்ள காமிராவில் பதிவான காட்சிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் நடந்தது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முதலில் பெண் போலீஸ் ஏட்டு புகார் தெரிவிக்க மறுத்துள்ளார். புகார் கொடுத்தால் அனைத்தும் அம்பலமாகி விடும் என நினைத்து பயந்துள்ளார்.

    ஆனால் அவரை மட்டும் காப்பாற்றி விடலாம் என நினைத்து அவரை அழைத்து சென்று புகார் கொடுத்ததால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு இன்று அனைத்து குட்டுகளும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனால் அந்த பெண் போலீஸ் ஏட்டு கலக்கத்தில் உள்ளார்.

    இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் மற்ற போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர். அதே போல் போலீஸ் நிலையத்தில் பதிவான வீடியோக காட்சிகள் வெளியே கசிந்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. 

    வேலூரில் காதலை ஏற்க மறுத்த ஆயுதப்படை பெண் போலீசை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கொண வட்டத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், வேலூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (வயது 24) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    திலீப்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலை, அந்த பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார். அவரின் காதலை, அவர் ஏற்க மறுத்துள்ளார். திலீப்குமார் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் அணுகுச்சாலையில் அந்தப் பெண் போலீஸ் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குக் குடும்பத்துடன் வந்த திலீப்குமார் திடீரெனப் பெண் போலீசை வழிமறித்து மீண்டும் காதலிக்கும் படி கூறி உள்ளார். அப்போதும் அந்தப் பெண் போலீஸ், அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது திலீப்குமார், அவரது தந்தை பாலசந்தர், தாய் ரஜிலா மற்றும் அவரது குடும்பத்தினர் பானுபிரியா, அபினயா, விக்கி ஆகியோர் சேர்ந்து பெண் போலீசை தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வேலூர் வடக்குப் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திலீப்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கிழக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கோமதி என்ற பெண் போலீஸ் நேற்று பணியில் இருந்தார்.

    அப்போது எண்ணூரை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு அங்கு வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றியதுடன் மனைவி, குழந்தைகள் உடலிலுல் ஊற்றினார். பின்னர் திடீரென தீப்பெட்டியை எடுத்து தீயை பற்ற வைத்து தீக்குளிக்க முயன்றார்.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கோமதி பாய்ந்து சென்று தீப்பெட்டியையும், மண்எண்ணை கேனையும் பறித்தார். இதனால் ஒரே குடும்பத்தில் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெண் போலீஸ் கோமதியை அழைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். குறித்த நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்ட கோமதி நேற்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். #tamilnews
    புளியம்பட்டியில் ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் போலீஸ் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
    பு.புளியம்பட்டி:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி புஞ்சை புளியம் பட்டி பகுதியில் சுமார் 40 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    அந்த சிலைகள் அனைத்தும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பகுடுதுறை பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. புஞ்சை புளியம்பட்டி அவ்வை வீதியிலும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல சரக்கு ஆட்டோ தயார்படுத்தப்பட்டது. அதில் விநாயகர் சிலையை ஏற்றி பவானி ஆற்றை நோக்கி எடுத்து சென்றனர்.

    சரக்கு ஆட்டோவை கார்த்தி (வயது 25) என்பவர் ஓட்டி சென்றார்.ஆட்டோவில் அந்த பகுதியை இளைஞர்கள் பலர் ஏறி இருந்தனர்.

    பாதுகாப்புக்காக பவானிசாகர் போலீஸ் நிலைய பெண் காவலர் லட்சுமியும் (32) அந்த ஆட்டோவில் இருந்தார். அவரது சொந்த ஊர் சேலம், வடுகம்பட்டி, பிச்சம்பாளையம் ஆகும்.

    நள்ளிரவில் கணக்கரசம் பாளையம் அருகே சென்ற சரக்கு ஆட்டோ அங்குள்ள வளைவில் திரும்பும்போது திடீரென விநாயகர் சிலையுடன் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த பெண் காவலர் லட்சுமி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    வசந்த் (29), அருண் (22), தினேஷ்குமார் (22), சஞ்சய் (15), சக்திவேல் (21), காசி (26), சூர்யா (17), பிரனீத் (16), பிரபஞ்ச் (17), சுரேஷ் கிருஷ்ணா (19), அருண் பிரசாத் (17), டிரைவர் கார்த்தி, பெண் காவலர் லட்சுமி.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ஊர்க்காவல்படை பெண் போலீஸ் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ராஜலட்சுமி (34). இவர் ஊர்க்காவல் படையில் போலீசாக உள்ளார்.

    இவருக்கும், இவரது கணவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி அருகே உள்ள விவசாயி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டனர்.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவரை காப்பாற்ற கயிற்றை கிணற்றுக்குள் போட்டனர். இந்த கயிற்றை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து ஓமலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஓமலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜன், தீயணைப்பு வீரர்கள் சரவணன், சாரங்க பாணி, கேசவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ராஜலட்சுமியை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த பெண் போலீசின் கணவரை உறவினர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரை அடுத்த மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது32). இதே ஊரை சேர்ந்தவர் திருப்பதி (35). இவரின் அக்காள் மகள் முத்துநாகவள்ளி. இவர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாக உள்ளார். முத்துநாகவள்ளிக்கும் மாரீஸ்வரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 

    இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெரியவர்கள் பேசி முடிவு செய்து இருவருக்கும் திருமணம் நடந்தது. முத்துநாகவள்ளியை திருப்பதி திருமணம் செய்ய விரும்பினாராம். ஆனால் வள்ளி அதற்கு மறுத்துவிட்டார்.  இது தொடர்பாக மாரீஸ்வரனுக்கும் திருப்பதிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. 

    இந்நிலையில் நேற்று மாலை மாரீஸ்வரன் தெற்கு மலையடிப்பட்டி அருகில் உள்ள பாலத்தின் அருகில் அமர்ந்து தனது மனைவி வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த திருப்பதி இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். அவர் தான் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி  ஓடி விட்டாராம். அரிவாள் வெட்டில்  பலத்த காயம் அடைந்த மாரீஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    பெண் போலீசார் வள்ளி கண்முன்னே அவரது கணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய திருப்பதியை தேடி வருகின்றனர்.
    குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு விரலை அவரது கணவர் கடித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை தல்லாகுளம் ஆயுதப்படை குடியிருப்பில் வசிப்பவர் நாகராஜன் (வயது39). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி இந்திரா (34). ஆயுதப்படையில் ஏட்டாக உள்ளார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் மோதலாக மாற, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    நாகராஜன் ஆத்திரத்தில் மனைவி இந்திராவின் கை விரலை கடித்து விட்டதாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை தேடி வருகின்றனர்.

    பணத் தகராறில் பெண் போலீசின் கன்னத்தில் அறை விட்ட போலீஸ்காரர் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் மாலா (வயது38). இவர் அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் உக்கிரபாண்டியிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நிலையில் மாலா 6 மாதம் மருத்துவ விடுப்பில் சென்றார். நேற்று இரவு பணிக்கு வந்த மாலாவிடம் உக்கிரபாண்டி, கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் உக்கிரபாண்டி மாலாவின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்டார். அதன் பின்னர் மாலா தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    ×