search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman dead"

    • நடுவூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென ரோட்டின் குறுக்காக வந்த காட்டு எருமை தேவியை முட்டி கீழே தள்ளியது.
    • தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு பட்டிபாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேவி (வயது 37).

    இவர் நேற்று ஏற்காடு டவுன் பகுதிக்கு வந்து விட்டு தனது ஊரான பட்டி பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். நடுவூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென ரோட்டின் குறுக்காக வந்த காட்டு எருமை தேவியை முட்டி கீழே தள்ளியது.

    இதில் தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் தேவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண்ணுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. பெண் பக்தர்கள் வேப்பிலையை அணிந்து கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரை சேர்ந்த காந்திமதி (வயது 58) என்பவர் வேப்பஞ்சேலை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    அவர் கோவிலை சுற்றி வலம் வந்த போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது.
    • இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார்.

    இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.

    மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • உடல் முழுவதும் பரவிய தீயால் தேவகி அலறி துடித்தார்.
    • அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருவெங்கடபுரத்தை சேர்ந்தவர் தேவகி(60). இவர் கடந்த 12-ந்தேதி குளிப்பதற்காக விறகு அடுப்பில் வெந்நீர் வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தேவகியின் சேலையில் தீப்பிடித்தது.

    இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக பொன்னேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.
    • அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை பம்மல் அடுத்த பொழிச்சலூர் பாபு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (35). இவரது கணவர் செந்தில். லோடு வேன் டிரைவராக உள்ளார்.

    நேற்று இரவு செந்தில் வேலைக்கு சென்ற நிலையில் லட்சுமி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.

    அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை கண்ட உறவினர்கள் லட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சங்கர்நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

    சேரன்மகாதேவியில் கடனை கட்ட முடியாததால் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    சேரன்மகாதேவியில் உள்ள யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது35). இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் தேவியால் அந்தக் கடனை கட்ட முடியவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்தார்.

    இந்த நிலையில் தேவி நேற்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்தார். அலறல் சத்தம் கேட்டு தங்கராஜ் விரைந்து சென்று தீயை அணைத்து காப்பாற்றினார். இதில் அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தேவி பரிதாபமாக இறந்தார். தங்கராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காக்கிநாடாவில் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்ற கூட்டத்தில் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    காக்கிநாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று அவர் காக்கிநாடாவில் உள்ள மாண்டபேட்ட பகுதியில் பிரசார கூட்டத்தில் பேசினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது ஒரு கட்டிடத்தில் இருந்த சாரம் சரிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது.

    இதில் பலர் சிக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பில்லி ராமுலம்மா (60) என்ற பெண் இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக்காதல் மோகத்தினால், கணவர் தன் கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #punjabwomankilled
    ராய்ப்பூர்:

    ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ரவ்னீத் கவுர் ஆவார். இவர் கடந்த மார்ச் 14ம் தேதி பிரசவத்திற்காக பஞ்சாப்பில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அன்றிரவு வீட்டின் உள்ளே இருந்து செல்போனில் கணவர் ஜஸ்பிரீத்துடன்  வீடியோ காலில் பேசிக் கொண்டே வெளியே வந்துள்ளார். அப்போது அவரை யாரோ கடத்தியுள்ளனர்.

    இதையடுத்து அவரது அண்ணன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பெண்ணின் சடலம் பெரோசிபூர் மாவட்டத்தின் பக்ரா பகுதியில் உள்ள வடிகாலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    அப்பெண்ணின் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இது திட்டமிட்டு நடந்த கொலை என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘ரன்வீத்தின் கணவர் ஜஸ்பிரீத்திற்கு ஆஸ்திரேலியாவில் கிரண்ஜீத் கவுர் எனும் திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கொன்றால் சந்தேகம் ஏற்பட்டு விடும் என்பதற்காக, பஞ்சாப்பிற்கு வந்ததை பயன்படுத்திக் கொண்டுள்ளான். ஜஸ்பிரீத், மனைவியைக் கொல்ல கிரண்ஜீத்தை அனுப்பி வைத்துள்ளான்.

    கிரண்ஜீத் தன் தங்கை மற்றும் உறவினருடன் இணைந்து ரவ்னீத்தை கடத்திச் சென்று கொன்று, வடிகாலில் வீசியுள்ளார். இதையடுத்து கணவர் ஜஸ்பிரீத் கவுர், கிரண்ஜீத் கவுர், டிரண்ஜீத் கவுர் மற்றும் சந்தீப் சிங் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’ என தெரிவித்துள்ளனர். #punjabwomankilled

     



     
    குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் துப்பாக்கி வெடித்தபோது, குண்டு பாய்ந்ததில் ஒரு பெண் பரிதாபமாக பலியானார். #SuratCelebratoryfiring
    அகமதாபாத்:

    வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள் நம்மூர் திருவிழாக்கள் போல் களை கட்டும். ஆட்டம், பாட்டு, நடனம் என வெகு உற்சாகமாக திருமண நிகழ்ச்சிகள் அங்கு சிறப்பாக இருக்கும். உற்சாக மிகுதியில் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வேடிக்கை காட்டுவதுண்டு.

    இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் உள்ள வராச்சா பகுதியில் திருமண ஊர்வலம் இன்று மதியம் நடைபெற்றது. அதில் இருந்தவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் இருந்து சாவித்ரி பென் வட்ஜுகர் என்ற 47 வயது பெண்மணி திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென துப்பாக்கியில் இருந்த குண்டு சாவித்ரி பென் மீது பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சாவித்ரி பென் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டத்துக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuratCelebratoryfiring
    பெல்காம் பகுதியில் ஜீப்-டிராக்டர் மோதி 6 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சவுகத்தி பகுதியை சேர்ந்த 14 பேர் கோகாத் பகுதிக்கு ஜீப்பில் வந்தனர். அங்கு அவர்கள் தங்களது உறவினர் ஒருவருக்கு இறுதி சடங்கு காரியம் செய்துவிட்டு மீண்டும் ஜீப்பில் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது ஹீரேனந்தி பகுதி அருகே வந்தபோது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று எதிரே வந்து மோதியது.

    இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை கோகாத் மற்றும் பெல்காம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோகாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 6 பெண்களின் உடல்களை கைப்பற்றி கோகாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலியானார். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    மதுரை:

    மதுரை மற்றும் சுற்றப்புற மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

    சிவகங்கை மாவட்டம், அரியக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா (வயது 50). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். காய்ச்சல் குணமாகவில்லை.

    இந்த நிலையில் சித்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 128 பேர் வைரஸ் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பொது காய்ச்சல் வார்டு பிரிவில் உள்நோயாளியாக இருப்பவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்த போது இடிதாக்கி பெண் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்தது. சுட்டெரித்த வெயிலால் வெளியே நடமாட முடியாத நிலை இருந்தது.

    வெயிலால் வாட்டி எடுத்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக சத்தியமங்கலம் பகுதியில் 42 மி.மீ.மழை கொட்டியது.

    இந்த மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதியில் மழை நீர் ஓடியது.

    இதே போல் பவானியில் 38 மி.மீ.மழை பெய்தது. இந்த மழையால் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேலும் கவுந்தப்பாடி, கோபி, ஒலப்பாளையம், சிவகிரி ஆகிய பகுதிகளிலும் ஓரளவு கனமழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையால் வெயிலின் ஆதிக்கம் குறைந்திருந்தது.

    பவானிசாகர் அருகே பசுவபாளையத்தில் உள்ள தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பிரியா (வயது 30) என்ற பெண் இரவு 8 மணி அளவில் மல்லிகை பூ பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது லேசாக மழை பெய்தது. தொடர்ந்து அந்த பெண் பூ பறித்துக் கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் ஒரு இடி பிரியாவை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவர் உடல் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ×