என் மலர்
நீங்கள் தேடியது "marriage procession"
குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் துப்பாக்கி வெடித்தபோது, குண்டு பாய்ந்ததில் ஒரு பெண் பரிதாபமாக பலியானார். #SuratCelebratoryfiring
அகமதாபாத்:
வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள் நம்மூர் திருவிழாக்கள் போல் களை கட்டும். ஆட்டம், பாட்டு, நடனம் என வெகு உற்சாகமாக திருமண நிகழ்ச்சிகள் அங்கு சிறப்பாக இருக்கும். உற்சாக மிகுதியில் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வேடிக்கை காட்டுவதுண்டு.
இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் உள்ள வராச்சா பகுதியில் திருமண ஊர்வலம் இன்று மதியம் நடைபெற்றது. அதில் இருந்தவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் இருந்து சாவித்ரி பென் வட்ஜுகர் என்ற 47 வயது பெண்மணி திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென துப்பாக்கியில் இருந்த குண்டு சாவித்ரி பென் மீது பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சாவித்ரி பென் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டத்துக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuratCelebratoryfiring






