search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild elephant"

    • ஜன்னலை உடைத்து கடைக்குள் இருந்த அரிசியை ருசித்து தின்றது
    • ஊருக்குள் யானை நடமாட்டம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

    கோவை,

    கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி மலையடிவார த்தையொட்டி குடியி ருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருவதை வாடி க்கையாக வைத்துள்ளது.

    அவ்வாறு வரும் யானை கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்க ளை சேதப்படுத்து வதோடு, பொருட்களையும் சூறை யாடி செல்கிறது.

    தொடர்ந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சிறுமுகை அடுத்த சம்பூரவள்ளிபுதூர் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சம்பூரவள்ளி புதூருக்குள் நுழைந்தது.

    அந்த பகுதியில் வெகு நேரமாக சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை, ரேஷன் கடை அருகே சென்றது. பின்னர் ரேஷன் கடையின் ஜன்னலை உடை த்து, துதிக்கையை உள்ளே விட்டு அரிசியை எடுத்து ருசித்து சாப்பிட்டது.

    தொடர்ந்து அங்கிருந்து காட்டு யானை சென்று விட்டது. இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள், ரேஷன் கடையின் ஜன்னல் உடைக்க ப்பட்டு இருந்ததை பார்த்து பணியாளர்களுக்கு தெரிவித்தனர்.

    அவர்களும் வந்து பார்த்தனர்.அப்போது அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, ஜன்னலை உடைத்து அரிசியை சாப்பிட்டு சென்றது தெரியவந்தது.

    யானை நடமாட்டம் இருப்பது பற்றிய தகவல் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படு த்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.
    • வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாலபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.

    அப்பகுதியில் மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்து சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.
    • யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சமயபுரம், சுக்கு காபிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    இவை அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.

    இதனிடையே குடியிருப்பு பகுதியில் ஒரு காட்டு யானை சுற்றி வருகிறது. அத்துடன் ஒரு குட்டி யானையும் சுற்றுகிறது. இந்த யானையானது நடந்து செல்லாமல் மின்னல் வேகத்தில் செல்கிறது. அதனுடன் செல்லும் குட்டி யானை சிட்டாக நடமாடி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரிய யானைக்கு மின்னல் என்றும், சின்ன யானைக்கு சிட்டு என்றும் பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மின்னல் மற்றும் சிட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சுக்கு காபிக்கடை பகுதிக்குள் நுழைந்தது.

    அங்குமிங்கும் சுற்றி திரிந்த காட்டு யானைகள், அங்குள்ள பாலாஜி என்ப வரது வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்ப ட்டி ஆட்டோ வையும் சேதப்படுத்தியது.

    இதில் ஆட்டோவின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. வீடு மற்றும் ஆட்டோவை சேதப்படுத்தி விட்டு யானை அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

    இதை பார்த்த வீட்டு உரிமையாளர் உடனடியாக சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியை விட்டு வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதா வது:-

    இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த மின்னல், சிட்டு காட்டுயானைகள் எங்களது பகுதிக்குள் புகுந்து வீட்டின் சுற்றுச்சு வரை இடித்து தள்ளியதோடு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

    காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் நாங்கள் அச்சத்துடனேயே வசித்து வருகிறோம்.

    மேலும் தூக்கமின்றி நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். எனவே வனத்துறையினர் ஒற்றைக்காட்டு யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென்று அங்கு வந்த கிராம மக்கள் வண்டியை சிலர் வழி மறித்தனர்.
    • வனகாப்பாளர் ரகுராமன் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் 3 காட்டு யானைகள் வனத்துறையினருக்கு உலா வருவதாக தகவல் கிடைத்தது.

    உடனே மாவட்ட வனசரக வனகாப்பாளர் ரகுராமன் (வயது35) தலைமையில் பிரதிவ்ராஜ், ராமலிங்கம், அய்யண்ணன், ராஜபதி, செல்வம் ஆகிய வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனத்துறையினர் பென்னாகரம் அருகே தேவனூரை அடுத்த பூதிபட்டி பிரிவு சாலையில் ஜீப்பில் ரோந்து சென்றபோது திடீரென்று அங்கு வந்த கிராம மக்கள் வண்டியை சிலர் வழி மறித்தனர்.

    அப்போது கிராம மக்கள், மீண்டும் இந்த பகுதியில் யானைகள் வந்தால், அந்த யானைகளை சுட்டு கொல்லுவோம் அல்லது மின்சாரம் பாய்ச்சி கொல்லுவோம் என்றும், வனத்துறையினரை ஆபாசமாக திட்டியும், மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து வனகாப்பாளர் ரகுராமன் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் போலீசார் வனத்துறையினரை மிரட்டியதாக பூதிபட்டியைச் சேர்ந்த அல்லிமுத்து (50), ராம சந்திரன் (45) உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • யானை அங்குள்ள வெங்கடேஷ் என்பவரின் மளிகை கடையின் ஷட்டர் கதவை துதிக்கையால் அடித்து உடைத்து திறந்தது.
    • கடையில் 2 குலைகளில் தொங்க விடப்பட்டிருந்த வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி, அரிசி, காய்கறி உள்பட மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை ஆசனூர் அருகே உள்ள பங்களாதொட்டி கிராமத்துக்குள் புகுந்தது.

    பின்னர் அந்த யானை அங்குள்ள வெங்கடேஷ் என்பவரின் மளிகை கடையின் ஷட்டர் கதவை துதிக்கையால் அடித்து உடைத்து திறந்தது.

    கடையில் 2 குலைகளில் தொங்க விடப்பட்டிருந்த வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி, அரிசி, காய்கறி உள்பட மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்து பார்த்த போது, மளிகை கடைக்குள் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது.

    அதேபோல் ஓங்கல்வாடி கிராமத்தில் ராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்துக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பை தின்று சேதம் செய்துவிட்டு சென்றது. இதில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதம் அடைந்தது.

    • தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    • சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காயம் அடைந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    வடவள்ளி,

    கோவை மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில வாரங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி.காலனி, கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழக பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருகின்றன.

    கடந்த வாரம் 24-ந் தேதி அதிகாலை நவாவூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பருப்பு மற்றும் அரிசியை ருசித்து சென்றன.

    இதேபோல் இந்த பகுதியில் காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக ஒற்றை யானை ஒன்றும் நடமாடி வருகிறது.

    இந்த யானை அண்மையில் பாரதியார் பல்லைக்கழக வளாகத்தில் உள்ள இருப்பு அறைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பருப்பை சாப்பிட்டு சென்றது.

    தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனது நண்பர்களுடன் கல்வீரம்பாளையத்தில் தங்கி கட்டி வேலைக்கு சென்று வருகிறார்.

    இன்று அதிகாலை மனோஜ்குமார், தனது நண்பர்கள் 2 பேருடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு புதர்மறைவில் காட்டு யானை ஒன்று நின்றிருந்தது. இதனை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து ஓடினர். ஆனால் காட்டு யானை விடாமல் அவர்களை துரத்தி வந்தது. இதில் 2 பேர் ஓடி விட்டனர். மனோஜ்குமார் மட்டும் ஓட முடியாமல் கீழே விழுந்தார்.

    இதையடுத்து யானை மனோஜ்குமாரை தந்தத்தால் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்று விட்டது.

    இதற்கிடையே இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காயம் அடைந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • கடந்த 1 மாதமாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக பிரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகின்றன.
    • தனியார் தோட்டங்களில் உள்ள காபி, வாழை மற்றும் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி. மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை, ஆடலூர், பெரியூர் பகுதிகளில் கடந்த 1 மாதமாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக பிரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகின்றன.

    ஆடலூர், சோலைக்காடு, நேர்மலை பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் உள்ள காபி, வாழை மற்றும் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.

    தாண்டிக்குடி, ஆடலூர், பெரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் உலாவரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன.
    • கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, மூலைக்கடை, பாதிரிமூலா, செம்பக்கொல்லி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு, எடத்தால் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன.

    கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    சில நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருக்கும் தேயிலை தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகிறார்.அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே காட்டுயானைகள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஒரு காட்டு யானை அய்யன்கொல்லி அரசு உண்டு உறைவிடப்பள்ளி இரும்பு கேட் வாயிலை உடைத்து, பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கு உள்ள பலாமரத்தில் இருந்த பலா பழங்களை தும்பிக்கையால் பிடுங்கி ருசித்து தின்றது.

    அதன்பிறகு அந்த யானை கொளப்பள்ளி அரசுதேயிலை தோட்டம், செம்பக்கொல்லி பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதேபோல் சேரங்கோடு எலியாஸ் கடை பகுதியில் காட்டு யானை சாலையோரம் நடமாட்டம் உள்ளது. அவை அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் பற்றி அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமையில் வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் சம்பவ இடத்தில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அங்கு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    • வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி சுற்றி திரிகிறது.
    • வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி பங்களாப்புதூர் வழியாக எருமைக்குட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டப்பகுதியில் விளை நிலங்கள் வழியாக சுற்றி திரிகிறது.

    இந்த தகவலறிந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் தற்போது யானையை கண்காணித்து ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என் பாளையம், விளாமுண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, கடம்பூர், கெட்டவாடி, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் யானைகள் சாலையில் நிற்பதும், கரும்புலோடு ஏற்றி வரும் லாரியை மறித்து கரும்புகளை ருசிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. யானைகள் சாலை நடுவே நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகே 3 காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். யானை கூட்டம் ஆனது சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்றது.

    இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு 3 யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன.
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்.நகர் அருகே ஒரு காட்டு யானை சாலையை கடந்து சென்றது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. இதனை வனத்துறையினர் கண்காணித்து வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி, யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்.நகர் அருகே ஒரு காட்டு யானை சாலையை கடந்து சென்றது.

    அப்போது அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள், காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் யானையை செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை திடீரென திரும்பி வந்து, சுற்றுலா பயணிகளை விரட்டியது. இதனால் அச்சம் அடைந்த அவர்கள் அலறியடித்தபடி காருக்குள் ஏறி உயிர் தப்பினர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பலாப்பழத்தை உண்பதற்காக யானைகள் வருவது வழக்கம்.
    • குன்னூர், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது.

    குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம், கேஎன்ஆா் நகா், பா்லியாறு ஆகிய பகுதிகளில் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பலாப்பழங்கள் விளைந்து தொங்குகின்றன.

    பலாப்பழத்தை உண்பதற்காக யானைகள் வருவது வழக்கம். அதன்படி தற்போது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்துள்ள காட்டு யானைகள் கே.என்.ஆா்.நகா், பா்லியாறு, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.

    அந்த யானைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையோரம் திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் வேட்டைத் தடுப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இதற்கிடையே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கூடலூா் ஹெல்த்கேம்ப் பகுதியில் போலீஸ் குடியிருப்புப் பகுதிக்குள் சம்பவத்தன்று நள்ளிரவு காட்டு யானைகள் புகுந்தன.

    அந்த யானைகள் அங்கு ஒரு வீட்டின் முன்பு இருந்த மரத்தை குலுக்கி, அதில் இருந்த பலாப்பழத்தை பறித்து ருசித்தன. அதன்பிறகு அவை நீண்ட நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன.

    ×