என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் வீட்டு சுற்றுச்சுவர், ஆட்டோவை சேதப்படுத்திய காட்டு யானைகள்
    X

    மேட்டுப்பாளையத்தில் வீட்டு சுற்றுச்சுவர், ஆட்டோவை சேதப்படுத்திய காட்டு யானைகள்

    • உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.
    • யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சமயபுரம், சுக்கு காபிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    இவை அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.

    இதனிடையே குடியிருப்பு பகுதியில் ஒரு காட்டு யானை சுற்றி வருகிறது. அத்துடன் ஒரு குட்டி யானையும் சுற்றுகிறது. இந்த யானையானது நடந்து செல்லாமல் மின்னல் வேகத்தில் செல்கிறது. அதனுடன் செல்லும் குட்டி யானை சிட்டாக நடமாடி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரிய யானைக்கு மின்னல் என்றும், சின்ன யானைக்கு சிட்டு என்றும் பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மின்னல் மற்றும் சிட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சுக்கு காபிக்கடை பகுதிக்குள் நுழைந்தது.

    அங்குமிங்கும் சுற்றி திரிந்த காட்டு யானைகள், அங்குள்ள பாலாஜி என்ப வரது வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்ப ட்டி ஆட்டோ வையும் சேதப்படுத்தியது.

    இதில் ஆட்டோவின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. வீடு மற்றும் ஆட்டோவை சேதப்படுத்தி விட்டு யானை அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

    இதை பார்த்த வீட்டு உரிமையாளர் உடனடியாக சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியை விட்டு வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதா வது:-

    இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த மின்னல், சிட்டு காட்டுயானைகள் எங்களது பகுதிக்குள் புகுந்து வீட்டின் சுற்றுச்சு வரை இடித்து தள்ளியதோடு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

    காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் நாங்கள் அச்சத்துடனேயே வசித்து வருகிறோம்.

    மேலும் தூக்கமின்றி நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். எனவே வனத்துறையினர் ஒற்றைக்காட்டு யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×