search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமுகையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை
    X

    சிறுமுகையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை

    • ஜன்னலை உடைத்து கடைக்குள் இருந்த அரிசியை ருசித்து தின்றது
    • ஊருக்குள் யானை நடமாட்டம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

    கோவை,

    கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி மலையடிவார த்தையொட்டி குடியி ருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருவதை வாடி க்கையாக வைத்துள்ளது.

    அவ்வாறு வரும் யானை கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்க ளை சேதப்படுத்து வதோடு, பொருட்களையும் சூறை யாடி செல்கிறது.

    தொடர்ந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சிறுமுகை அடுத்த சம்பூரவள்ளிபுதூர் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சம்பூரவள்ளி புதூருக்குள் நுழைந்தது.

    அந்த பகுதியில் வெகு நேரமாக சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை, ரேஷன் கடை அருகே சென்றது. பின்னர் ரேஷன் கடையின் ஜன்னலை உடை த்து, துதிக்கையை உள்ளே விட்டு அரிசியை எடுத்து ருசித்து சாப்பிட்டது.

    தொடர்ந்து அங்கிருந்து காட்டு யானை சென்று விட்டது. இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள், ரேஷன் கடையின் ஜன்னல் உடைக்க ப்பட்டு இருந்ததை பார்த்து பணியாளர்களுக்கு தெரிவித்தனர்.

    அவர்களும் வந்து பார்த்தனர்.அப்போது அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, ஜன்னலை உடைத்து அரிசியை சாப்பிட்டு சென்றது தெரியவந்தது.

    யானை நடமாட்டம் இருப்பது பற்றிய தகவல் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படு த்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×