என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் துதிக்கையால் பலாப்பழத்தை பறித்து ருசித்த காட்டு யானை
    X

    ஊட்டியில் துதிக்கையால் பலாப்பழத்தை பறித்து ருசித்த காட்டு யானை

    • அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன.
    • கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, மூலைக்கடை, பாதிரிமூலா, செம்பக்கொல்லி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு, எடத்தால் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன.

    கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    சில நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருக்கும் தேயிலை தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகிறார்.அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே காட்டுயானைகள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஒரு காட்டு யானை அய்யன்கொல்லி அரசு உண்டு உறைவிடப்பள்ளி இரும்பு கேட் வாயிலை உடைத்து, பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கு உள்ள பலாமரத்தில் இருந்த பலா பழங்களை தும்பிக்கையால் பிடுங்கி ருசித்து தின்றது.

    அதன்பிறகு அந்த யானை கொளப்பள்ளி அரசுதேயிலை தோட்டம், செம்பக்கொல்லி பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதேபோல் சேரங்கோடு எலியாஸ் கடை பகுதியில் காட்டு யானை சாலையோரம் நடமாட்டம் உள்ளது. அவை அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் பற்றி அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமையில் வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் சம்பவ இடத்தில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அங்கு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×