search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welcome"

    • திருப்பரங்குன்றம் வந்த காவடி பக்தர்களுக்கு மேலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி, கண்டனூர் ஆகிய பகுதியிலிருந்து ஒவ் வொரு ஆண்டும் திருப்பரங் குன்றம் முருகனுக்கு காவடி எடுத்து ஏராளமான பக்தர் கள் சென்று வருகின்றனர்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு பாதயாத்தி ரையாக நேர்த்திக் கடன் செலுத்த காவடி எடுத்துக் கொண்டு பாதயாத் திரையாக வந்த பக்தர்கள் மேலூருக்கு வந்தனர். அவர்களுக்கு மேலூர் பகுதி முருக பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் காவடி எடுத்து வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    பின்னர் மேலூரில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் காவடிகள் வைத்து அங்கு முருகனுக்கு சந்தனம், திருநீறு, பால், பழ அபிஷே கம் மற்றும் தீபஆராதனை நடைபெற்றது. காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.

    • உங்களது மனமும், உடலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும் என்றாா்.
    • கல்லூரியில் கற்றுத் தரும் பாடங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக அமையும்.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி தலைவா் பி.மோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:-

    கல்லூரியில் கற்றுத் தரும் பாடங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக அமையும். இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவா்கள் பெங்களூா், சென்னை, கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழில் முனைவோா்களாகவும், டிசைனா்களாகவும் பணியாற்றி வருகின்றனா். மாணவா்கள் சரியான முறையில் நேரத்தை செலவிட வேண்டும். உங்களது மனமும், உடலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும் என்றாா்.

    இதைத்தொடா்ந்து, சிலம்பம், நடனம் , ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், தொழிலதிபா் மெஜஸ்டிக் கந்தசாமி, கல்லூரி துணைத் தலைவா்கள் ஈ.பழனிசாமி, ரங்கசாமி, பொருளாளா் கோவிந்தராஜூ, நிா்வாக குழு உறுப்பினா்கள் ராமசாமி, பேஷன் அப்பேரல் மேனேஜ்மெண்ட் துறையின் துணைத் தலைவா் பி.பி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • இந்த பாடல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சையில் நடிகர் விஜய் பாடலை மாற்றி அமைத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    கடந்த 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் பாடலான நான் ரெடி தான் வரவா? அண்ணன் நான் கிளம்பி வரவா? என்ற வரிகளுடன் கூடிய பாடல் வெளியானது.

    இந்த பாடல் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று உள்ளது.

    இதனால் இந்தப் பாடல் வரிகளைக் கொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்று தஞ்சாவூர் போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக பாடல் வரிகளில் சிலவற்றை மட்டும் மாற்றினர்.

    அதன்படி நான் ரெடி தான் வரவா? போலீஸ் நான் கிளம்பி வரவா? என்று வாசகமாக மாற்றி அமைத்துள்ளனர்.

    இந்த விழிப்புணர்வு வாசகம் போதைப் பழக்கம் மற்றும் போதை பயன்பாடு குறித்து புகார் தெரிவிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

    புகார் தெரிவிக்க 9042839147 என்ற செல்போன் எண்ணும் கொடுத்துள்ளனர்.

    தற்போது இந்த விழிப்புணர்வு போஸ்டர் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    போலீசுக்கும், பொதும க்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்த்தவும் டிரெண்ட் ஆகும் திரைப்படப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் இந்த விழிப்புணர்வு வாசகம் கண்டிப்பாக போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குத்தாலத்திலிருந்து பாத யாத்திரையாக கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வருகை தந்தார்.
    • பூரண கும்பமரியாதை கொடுத்தும், மாலைகள், பொன்னாடைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

    கும்பகோணம்:

    தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலா மணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் ஆன்மீக தலங்க ளுக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு குத்தாலத்திலிருந்து பாதயாத்திரையாக கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வருகை தந்தார்.

    அவருடன் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், ஒட்டகங்கள் முன்னே செல்ல மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் ஒலிக்க தருமபுரம், சூரியனார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனங்களின் கட்டளை தம்பிரான்கள், வேத, சிவாகம மற்றும் திருமுறை பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் வருகை தந்தனர்

    குருமகா சன்னிதானத்திற்கு கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், பூரணகும்ப மரியாதை கொடுத்தும், மாலைகள், பொன்னாடைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து கோவிலுக்கு நடந்து சென்ற அவருக்கு மதுரை ஆதீனம் சார்பிலும், கோவில் நிர்வாகம் சார்பிலும் வரவேற்பு கொடுத்தனர்.

    இதையடுத்து கஞ்சனூரில் உள்ள மதுரை ஆதீனம் கிளை மடத்தில் தருமை ஆதீனம் சிவஞான கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    இதையடுத்து நேற்று காலை கோவில் தர்பார் மண்டபத்தில் சொக்கநாதர் வழிபாடு செய்த பின்னர் கற்பக விநாயகர், கற்பகாம்பாள், அக்னீஸ்வரர், சுக்கிரன் சுவாமி சன்னதிகளில்  தரிசனம் செய்தார்.

    இதை தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு கஞ்சனூரில் இருந்து பாதயாத்திரை தொடங்கி சூரியனார் கோவில் ஆதீனம் சென்றார். அங்கு கிராம மக்கள் சார்பிலும், ஆதீனம் சார்பிலும் வரவேற்பு அளித்தனர்.

    • பூக்கள் தூவியும் சந்தனம், குங்குமம் இட்டு இனிப்புகள் வழங்கினர்.
    • வித்தியாசமான வரவேற்பு செயலால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    இன்று 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. காலையில் ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

    தஞ்சை அருகே திருவையாறுஅவ்வை மழலைப் தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகள் வித்தியாச மான முறையில் வரவேற்கப்பட்டனர்.

    முதலில் அவ்வையா ருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    பின்னர் ஆசிரியைகள் திருக்குறள் கூறி அதற்கேற்றவாறு நடனமாடி மாணவ- மாணவிகளை உற்சாகத்து டன் வரவேற்ற னர்.

    பூக்கள் தூவியும் சந்தனம், குங்குமம் இட்டு இனிப்புகள் வழங்கினர்.

    ஆசிரியர்களின் இந்த வித்தியாசமான வரவேற்பு செயலால் மாணவ- மாணவிகள் மட்டுமன்றி பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பல பள்ளிகளில் வித்தியாசமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    6 முதல் 12-ம் வகுப்புகள் இன்று முதல் தொடங்கின. 1 முதல் 5-ம் வகுப்புகள் வரும் 14-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பல பள்ளிகளில் வித்தியாசமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    தஞ்சை தென்கீழ அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் பூக்கள் வழங்கியும், சாக்லேட் கொடுத்தும் இன்முகத்துடன் வரவேற்றனர்.

    இதையடுத்து மாணவ -மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    அப்போது அனைவரும் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று மேயர், ஆணையர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ரெயில் தஞ்சை ரெயில் நிலையம் வந்தது.
    • இரு மார்க்கத்திலும் 2 தடவை மட்டுமே இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    தஞ்சாவூா்:

    மும்பை- தூத்துக்குடி- மும்பை இடையே தஞ்சை, கும்பகோ ணம் வழியாக நேரடி சிறப்பு ரெயில் புதிதாக இயக்கப்பட்டது.

    இரு மார்க்கங்களிலும் இரண்டு தடவை ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி மும்பையில் இருந்து கடந்த 26-ந் தேதி கும்பகோணம், தஞ்சை வழியாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்பட்டது.

    அடுத்து ஜூன் 2-ம் தேதி இயக்கப்படுகிறது.

    இதேபோல் தூத்துக்குடி யில் இருந்து நேற்று தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு ரெயில் புறப்பட்டது.

    இந்த ரெயில் இன்று மாலை மும்பைக்கு சென்றடையும்.

    அடுத்ததாக ஜூன் 4-ஆம் தேதி ரெயில் சேவை இயங்கும்.

    இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ரெயில் மாலையில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்து ஓரிரு நிமிடம் நின்றது .

    அப்போது இந்த சிறப்பு ரெயிலை வரவேற்கும் விதமாக காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் ரெயிலை இயக்கிய ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த ரெயிலில் வந்து தஞ்சையில் இறங்கிய பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    அப்போது தூத்துக்குடி -மும்பை இடையே இரு மார்க்கத்திலும் 2 தடவை மட்டுமே இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவையை நிரந்தரப்படு த்த வேண்டும்.

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும் என்று காவிரி டெல்டா ரெயில்வே உபயோ கிப்பா ளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சி யில் சங்க பொருளாளர் வக்கீல் உமர்முக்தர், நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, கண்ணன், ரெங்கராஜ், பைசல் , வேதப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சி.ஐ.டி.யு. நடைப்பயணக் குழுவிற்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அரியலூர்:

    கடலூரிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சி.ஐ.டி.யு. குழுவினருக்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை செயல்படுத்துதலை கைவிட வேண்டும். தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.இந்தக்குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் அரியலூர் மாவட்டம் வந்தடைந்த நிலையில், அரியலூர் அண்ணா சிலை அருகே அவர்களுக்கு அரியலூர் மாவட்ட சிஐடியு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டது. பின்னர், திருமானூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு திருமானூர் கிளைச் செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர்.

    • மாணவர்களை நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
    • இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகளுக்கு வருகை புரிந்த மாணவ- மாணவிகளை வகுப்பறைகளுக்கு நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். அவர்களுக்கு காலை வணக்கம் கூறி நன்றாக படித்து முன்னுக்கு வாருங்கள் என வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

    ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் சென்று மாணவர்களை சந்தித்து வாழ்த்து கூறி அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மாணவர்களை சந்திக்க வகுப்பறைக்கு செல்லும்போது வகுப்பில் போதிய வெளிச்சம் இல்லாதை அறிந்து சொந்த செலவில் வகுப்பறைக்கு தேவையான மின்விளக்கு, மின்விசிறி வசதி விரைவில் செய்துதரப்படும்எனக்கூறினார்.

    பள்ளிக்கு என்னென்ன வசதி வேண்டுமென மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்கையில் 9,10-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை வேண்டுமென கூறினர். ஏழை எளிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் பரிந்துரையின்படி சீரூடை வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    மேலும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியும், மாணவர்கள் இருக்கை வசதியும் வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார்.

    அதனைத்தொடர்ந்து பேசிய அவர் , மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க எந்தெந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என கண்டறிந்து அவர்களது வீட்டிற்கே சென்று படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார். இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.

    மேலும் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் ராக்கேஷ் என்ற மாணவரை தமிழின் இனிமைப் பாடலை வாசிக்கச் சொல்லி வாசிப்பு திறனை கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு புதிய புத்தகங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் குணசீலன்,ஜெயலட்சுமி தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது.
    • மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன்,பள்ளி முதல்வர் டயானா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்திமிருதுளா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கல்வியின் முக்கியத்துவத்தையும்,ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். 

    • நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
    • இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

    வத்திராயிருப்பு

    நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகளான விஷாலி (18), சக்தி பிரியா (17) ஆகியோர் பங்கேற்றனர். இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

    இருவரும் நேற்று காலை சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பினர். பதக்கம் வென்ற சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் இருவரையும் கிராம மக்கள் பேரணியாக அழைத்து சென்றனர். பதக்கம் வென்ற சகோதரிகள் கூறுகையில், நாங்கள் யாரிடமும் யோகா பயிற்சி பெறவில்லை. யூடியூப் மூலமாக பயிற்சி செய்ய கற்றுக்கொண்டோம். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு தமிழக அரசு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என்றனர். 

    நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிக்கு திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    சேலம்:

    இந்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில்   முதன்மை ப்ராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் அசோசியேட்ஸ், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    இளங்கலை, முதுகலை பட்டம் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது மருத்துவம் படித்திருக்க வேண்டும்.  8 வருட அனுபவம் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை மற்றும் கல்வியில் வளர்ச்சி நிறுவனங்கள் அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 

    விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்குமாறு நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி கேட்டுக் கொண்டுள்ளது. 
    ×