சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு

நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு அளித்தனர். இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு.
நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு.
Published on

வத்திராயிருப்பு

நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகளான விஷாலி (18), சக்தி பிரியா (17) ஆகியோர் பங்கேற்றனர். இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

இருவரும் நேற்று காலை சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பினர். பதக்கம் வென்ற சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இருவரையும் கிராம மக்கள் பேரணியாக அழைத்து சென்றனர். பதக்கம் வென்ற சகோதரிகள் கூறுகையில், நாங்கள் யாரிடமும் யோகா பயிற்சி பெறவில்லை. யூடியூப் மூலமாக பயிற்சி செய்ய கற்றுக்கொண்டோம். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு தமிழக அரசு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com