search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welcome"

    • முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    காளையார் கோவில்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் வழியாக சென்றார்.

    இந்த நிலையில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பெரிய கருப்பன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாவட்ட எல்லையான திருப்பு வனத்தில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 8.35 மணி அளவில் திருப்புவனம் பகுதிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருக்கு பட்டாடை கொடுத்து அமைச்சர் பெரியகருப்பன் வரவேற்றார்.

    தொடர்ந்து நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், மாவட்ட தி.மு.க அவை தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார், துணை அமைப்பாளர் பொற்கோ, நகர செயலா ளர்கள் குணசேகரன், துரை ஆனந்த், பொன்னுச்சாமி, பெரி.பாலா, நகர் மன்ற தலைவர் முத்து துரை, முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் வசந்தி சேங்கை மாறன், கடம்பசாமி, நிர்வாகிகள் மோகன்ராஜ், பழனி, அண்ணாமலை, சேகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-அமைச்சரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

    • தேவர் குருபூஜைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோ சனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செய லாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சந்தன தாஸ் கலந்து கொண்டார்.மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர செயலாளர் வர வேற்றார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் சரீப் நன்றி கூறினார்.

    வருகிற 30-ந் தேதி பசும்பொன்னில் நடைபெற இருக்கிற தேவர் குருபூஜை அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் தலைமையில் 50 வாக னங்களில் சென்று அழைத்து வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், மாவட்ட மாணவர் சங்க அமைப்பா ளர் கபில், நகர அமைப்பு செயலாளர் கார்த்திக், மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம், மாவட்ட துணை அமைப்பா ளர் இஸ்மாயில், நகர துணை செயலாளர் பாலா, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் கூறுகையில், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தேவரின் நினைவிடத்தில் நடைபெற உள்ள குருபூஜை விழாவில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். அதற் காக வருகிற 30-ந் தேதி மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அன்புமணி ராமதாசுக்கு எனது தலைமையில் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகி கள், தொண்டர்கள் பாரதி நகரில் இருந்து 50 அனுமதிக் கப்பட்ட வாகனங்களில் ராமநாதபுரம் எல்லை பார்த்திபனூர் சென்று உற்சாக வரவேற்பு கொடுக் கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • விருதுநகருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.

    விருதுநகர்

    தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (25-ந் தேதி) தேனி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு விருதுநகருக்கு வருகிறார். ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், மறுநாள் (26-ந்தேதி) ராமமூர்த்தி ரோட்டில் நடைபெறும் பிரமாண்ட இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    அதனை தொடர்ந்து கல்லூரி சாலையில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க.வை சேர்ந்த 2 ஆயிரம் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மதியம் மருத்துவ கல்லூரி கலைஞரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநதி ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

    விருதுநகர் மாவட்டத் திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் சீனிவாசன் எம்.எல்.ஏ., இளைஞரணி நிர்வாகிகள், கட்சியினர் செய்து வருகின்றனர்.

    • பெண் குழந்தைகள் காப்போம் திட்ட விழிப்புணர்வு பயண குழுவினருக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
    • கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் படையின் வீராங்கனைகள் நேற்று பெரம்பலூர் வந்தனர்.பெரம்பலுார் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து வைத்து வழியனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், கல்லூரி செயலாளர் விவேகானந்தன், இந்திய ரிசர்வ் படையின் .டி.எஸ்.பி. கார்த்திகேயன், ரோட்டரி சங்க பெரம்பலூர் மாவட்ட கவர்னர் கார்த்திகேயன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நாடு முழு வதும் வெகு விமரிசையாக நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடை பெற்றது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பண்ருட்டி ராஜாஜி சாலை யில் இருந்து இந்து முன்னணி யினரும், பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து இஸ்லாமிய, கிறிஸ்துவ பெரியோர்களை அழைத்து சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரி மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருக்க மதத் தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் இளை ஞர்களுக்கு சரியான வழிகாட்டலை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறி யிருந்தார். 

    இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, இஸ்ஸாமிய, கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பெரியோர்கள் மத நல்லிணக் கத்தை போற்றும் வகையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வந்த இந்து அமைப்பினரை வரவேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.பண்ருட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சி மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது என பொது மக்கள் அனைவரும் பாராட்டினர்.

    • கீரனூரில் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்பு
    • என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர் ஆகியோருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்று வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூரில் நின்று சென்று வந்தது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரெயில் இயக்கப்பட்ட அட்டவணையில் கீரனூரில் நிறுத்தம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் கீரனூர் ரெயில்வே நிலையத்தில் ஒரு நிமிடம் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டது. இதையடுத்து மகிழ்ச்சிடைந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதையடுத்து அந்த ரெயில் கீரனூர் நிலையம் வந்ததும் மலர் தூவி வரவேற்றனர். மேலும் என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர் ஆகியோருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். பின்னர் புதுக்கோட்டை வரை டிக்கெட் எடுத்து அவர்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.

    • நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.
    • 4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    கடலூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    • ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
    • மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு  7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    மதுரை

    மதுரை விமான நிலையத் தில் துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளி–நாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள் நாட்டு விமான சேவை–யும் அளிக்கப்பட்டு வருகி–றது.

    குறிப்பாக மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங் கள் மட்டுமே தொடர்ந்து சேவைகைைள வழங்கி வருகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகளை ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங் களும், இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு சேவையையும் வழங்கி வந் தது.

    இதில் ஸ்பைஸ்ஜெட் நிறு–வனம் கொரோனாவிற்கு பிறகு வெளிநாட்டு சேவை மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது மீண் டும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமான சேவையை ெதாடங்கியுள் ளது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    மதுரையில் இருந்து சென்னை வழியாக கோவா செல்வதற்கு விமான சேவையை அளிக்க தற் போது ஸ்பைஸ்ஜெட் நிறுவ–னம் திட்டமிட்டுள்ளது. இன்று (8-ந்தேதி) முதல் ஸ்பைஸ்ஜெட்-2981 விமா–னம் மதுரையிலிருந்து மதி–யம் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று, சென் னை–யில் இருந்து கோவா–விற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் கோவாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட்-2983 விமானம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து, சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு மதுரை வந்த–டையும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் நாளை மறுநாள் (10-ந்தேதி) முதல் வருகிற 19-ந்தேதி வரை ஸ்பைஸ் ஜெட்-2705 விமானம் ஐத–ராபாத்தில் இருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப் பட்டு மதுரை விமான நிலை–யத்திற்கு பகல் 12.15 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையும். அதே போல் கொழும்புவி–லிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.

    பின்னர் மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்ற–டையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித் துள்ளது.

    • மீன்சுருட்டி தடகள வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
    • சர்வதேச போட்டியில் 3 தங்கம் வென்றுள்ளார்

     அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்,உமாபிரியா தம்பதியின் மகன் ஆகாஷ்.தடகள விளையா ட்டுகளில் தீவிர பயிற்சி மேற்கொண்ட இவர், மாநில அளவிலான போட்டிக்கு தயாரானார். நிகழாண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்ப தக்கங்கள் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்ற அவர், தொடர்ந்து நேபாளம், பொக்காரா சர்வதேச தடகள ஸ்டேடியத்தில் இந்தோ-நேபால் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார்.போட்டிகளில் இந்தியா, நேபால், இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வீரர்க ள்கலந்து கொண்டனர். இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு ஆகாஷ் தங்கப் பதக்கங்களை வென்றார்.

    இந்நிலையில், பதக்கம் வென்ற ஆகாஷ், செந்த ஊருக்கு திருபினார். அங்கு அவருக்கு வர்த்தக சங்கத் தலைவர் ராஜா ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பட்டாசு வெட்டித்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சொந்த கிராமமான முத்துசேர்வா மடத்துக்கு சென்றார்.அங்கு அவரது உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளி த்தனர். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய ஆகாஷ், இந்திய ராணுவத்தில் பணிபுரிவதே தனது வாழ்நாள் லட்சியமாகும். இதற்காக தொடர்ந்து உடல் தகுதி மற்றும் திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுத்த போது விளையா ட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக மாநில தேசிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை பெற்று திரும்பியு ள்ளேன். எதிர்காலத்தில் ஆசியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறேன் என்றார்.

    ஊட்டி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இதில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார். அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது.

    • தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் புதுமுக வரவேற்பு விழா நடைபெற்றது
    • முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் இனிப்புக்களை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) முதலாம் ஆண்டு மாணவிகள் புது முக வரவேற்பு விழா தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் புதுமுக மாணவிகள் குத்து விளக்கேற்றினர். தொடர்ந்து விநாயகர் பூஜை நடைபெற்றது. இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், புதுமுக மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் இனிப்புக்களை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். விநாயகர் பூஜை முடிந்தவுடன் புதுமுக மாணவிகள் அனைவரும் கல்லூரி மைதானத்தில் புதிய முயற்சி, புதிய சிந்தனை, பெற்றோர்களின் நம்பிக்கை போன்றவற்றை மனதில் நிறுத்தி, பலூன் காற்றில் உயர பறப்பது போல கல்வி பயணத்திலும், வாழ்விலும் தன்னம்பிக்கையுடன் உயர வேண்டும் என்ற உயர் சிந்தனையோடு உற்சாகத்துடன் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். அதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்பறைக்கு சென்று தனது கல்லூரி பயணத்தை இனிதே தொடங்கினர்.

    • ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தா
    • மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.6-

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9- ம் ஆண்டு சங்கமம் ,முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சிஏ.வி.பி கலையரங்கத்தில் நடைப்பெற்றது.ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஏ.வி.பி கல்லூரி முதல்வர் டாக்டர் லீலாவதி வரவேற்று பேசினார்.

    கல்லூரி செயலாளர் லதா கார்த்திகேயன் பாராட்டுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மோட்டி வேசன் அகாடமி சி.இ.ஓ., முனைவர். ஜெகன் கலந்து கொண்டு மாணவர்கள் முயற்சியுடன் வெற்றி பெறுவதற்குரிய எளிய கருத்துகளையும், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் ,மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும்.

    மாணவிகள் கல்லூரி காலத்தில் தங்களின் எல்லா தனித்திறமைகளையும் வெளிகாட்ட வேண்டும் என்றார். முடிவில் ஏ.வி.பி கல்லூரி ஆங்கிலத்துறை தலைவி மகாலட்சுமி நன்றி கூறினார். 

    ×