காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளியில் கலைநிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது.மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர்.
குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்த காட்சி.
குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்த காட்சி.
Published on

திருப்பூர் : 

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன்,பள்ளி முதல்வர் டயானா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்திமிருதுளா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கல்வியின் முக்கியத்துவத்தையும்,ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com