search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village"

    • சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர்.
    • அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.

    சேலம்:

    சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், திராவிட புலிகள் இயக்க தலைவர் சுப்பிர மணி தலைமையில் கிராம மக்கள் சுமார் 20 பேர், கலெக்டர் அலுவலக வாசல் அருகே அமர்ந்து பட்டா வழங்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், மாவட்ட வருவாய் அதிகாரி 3 மாதத்தில் பட்டா வழங்குவதாக கூறினார். ஆனால் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். எனினும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வடவன்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மயில்ராயன்கோட்டை நாடு வடவன்பட்டி கிராமத்தில் முனிநாதர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    முன்னதாக இப்பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனி நாதர் பொட்டலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஓடிய காளைகளை வீரத்தோடு அடக்க முற்பட்டனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.

    • திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும்.
    • பூதலூரில் பிரச்சார வாகனம் மேற்கொள்ளப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா பூதலூர் வட்டாரத்தில் பூதலூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரமாபிரபா, கோமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத் தலைவர் ரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

    தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் பிரச்சார வாகனம் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும். திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் வரவேற்று, நன்றி கூறினார்.

    இதேபோல பூதலூரில் பிரச்சார வாகனம் பிரச்சாரம் மேற்கொண்டது.

    • ஜி-20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.
    • 22 கிராமங்களை சேர்ந்த 35 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 2.75 கோடி கடனுதவி.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவன த்தில் டாக்டர் அம்பேத்கரின் 132 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா ஜி20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.

    வருகை தந்த அனைவரையும் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் வரவேற்றார்.மதுரை பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி தஞ்சாவூர், கரந்தை, திருச்சென்னம்பூண்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி, மாத்தூர் உள்ளிட்ட 22- கிராமங்களைச் சார்ந்த 35 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ2.75 கோடி வங்கி மதிப்பிலான கடனு தவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் பூண்டி வெங்கடேசன், பூதலூர், தங்க.கென்னடி, திருப்பூந்துருத்தி சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    விழா நிகழ்ச்சியை கவ்டெசி நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கவ்டெசி நிறுவன பணியாளர்கள் கோமதி, சுபாஷினி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 4 வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
    • இதனால் சாலைகளின் அருகில் இருந்த ஊரல் குளங்கள் மூடப்பட்டு பாதி இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    புதுச்சேரி:

    புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 4 வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

    இதனால் சாலைகளின் அருகில் இருந்த ஊரல் குளங்கள் மூடப்பட்டு பாதி இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. திருவாண்டார் கோவில் பஞ்சநாதீஸ்வரர் சிவன் கோவில் அருகில் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஊரல் குளம் அமைந்துள்ளது.

    இந்த குளத்தின் நீர் திருவண்டார்கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையினை போக்கி வந்தது. தற்போது இந்த குளத்தை பாதியாக மூடி மண் நிரப்பி கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    மழைக்காலங்களில் மழை நீர் மதகடிப்பட்டு வளவனூர் வாய்க்கால், வழியாக திருபுவனை ஏரியை அடைந்து. பின்னர் திருவாண்டார் கோவில் ஊரல் குளத்தில் தண்ணீர் நிரம்பி பின்னர் வழிந்து ஆழியூர் ஏரிக்கு வாய்க்கால் மூலமாக தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நீர் அமைப்பு முறை கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை போக்கி சுத்தமான குடிநீர் கிடைக்க மன்னர்கள் காலத்தில் இந்த ஊரல் குளங்கள் முக்கிய பங்கு அளித்து வந்த நிலையில், தற்போது இந்த குளத்தை பாதி அளவில் முடி சாலை அமைத்து வருவது, வருகின்ற காலங்களில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    • முகாமில், 3000-க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பை ஆதாருடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.
    • வரும் வாரத்தில் விடுபட்டுள்ள கிராமங்களில் முகாம் நடைபெறும்.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி-பூதலூர் சாலையில் புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வழியாக மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் பூதலூர் வட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் நடைபெற்றது. இம்முகாமில் கிராம மக்கள் 3000-க்கும் மேற்பட்டோர் தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.

    முகாமில் கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர்.ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்.குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அறிவுமணி, கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் கருப்பையா, பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஆகியோர் முகாம் சிறப்புற நடைபெற உதவி புரிந்தனர்.அனைத்து ஊர்களிலும் உள்ள பஞ்சாயத்து தலைவ ர்கள் முன்னிலையில் முகாம் தொடங்கிநடந்தது.

    வரும் வாரத்திலும் விடுபட்டு உள்ள கிராமங்களில்முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    • 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்ைல.
    • 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது.

    அபிராமம்

    நாடு சுதந்திரம் அடைந்தபின் முதன் முதலாக 1952-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த முதுகுளத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அபிராமம் அருகே உள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது சொந்த ஊரான பாப்பனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளாக சரியான சாலை வசதி செய்து தரவில்லை என அந்தப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    1952-ம் ஆண்டு பாப்பனம் கிராமம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது சாலை வசதி செய்ய புறம்போக்கு நிலம் ஊர்ஜிதம் செய்து 1958ம் ஆண்டு செட்டில்மெண்ட் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலைகள் அமைக்க தடை ஏற்பட்டது.

    தற்போது தொகுதி மறுசீரமைப்பில் பாப்பனம் பகுதி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குள் வந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை பாப்பனம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது அரசு அதனை சீரமைத்து தரவில்லை. மக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்களே பழுதாகி காணப்பட்ட சாலையை செப்பனிட்டு சரி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாப்பனம் கிராமத்தில் சாலை வசதிகள் முழுமையாக செய்துதரவில்லை. இதனால் மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பாப்பனம் ஊராட்சியில் 450 மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள 1550 மீட்டர் நீளமுள்ள சாலையில் தார்சாலை அமைக்க அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை அமைத்துக்கொள்ள அபிராமம் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இதன்மூலம் பாப்பனம் முதல் அபிராமம் வரை உள்ள சாலையை போர்க்கால நடவடிக்கை எடுத்து தார்சாலையாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பிற தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசுப்பணிக்கு செல்பவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.

    • 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டு படகுகள் உள்ளது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    பேராவூரணி:

    வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

    இதனை தொடர்ந்து 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    துறைமு கத்தில் பாதுகா ப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன.

    மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.

    கொள்ளுக்காடு புதுப்பட்டினம், மல்லிப ட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிபட்டினம், அண்ணாநகர் புது தெரு, கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டுப் படகுகள் உள்ளது.

    விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சனிக்கிழமை 3 -வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்தல். இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், சுகாதாரத் துறையினர், மருத்துவத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், வேளாண்மை துறையினர், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட ஏராள மான கலந்து கொண்டனர்.

    • மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டமானது மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடை வளாகத்தில் நடைபெற்றது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ,திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி, திருப்பூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது எனவும், மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.
    • மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் கிராமப்புறங்களில் மாணவா்கள் இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் கடந்த 2006ஆம் ஆண்டுதி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

    இந்த விளையாட்டு சாதனங்கள் ஊராட்சி நிா்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மைதானங்கள் பராமரிக்கப்படவில்லை.

    பின்னா் கடந்த 2020ம் ஆண்டில் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிராமம்தோறும் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

    தற்போது, அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதா் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டன. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது, விளையாட்டில் சாதிக்க நினைப்பவா்களுக்கு கிராமங்களில் எவ்வித வசதியும் இல்லை. எனவே கிராமப்புற மைதானங்களை பராமரித்து உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். இதற்கு சிறப்புக் குழு அமைத்து மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமம்வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இளைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    வெள்ளமலையில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் அம்பலக்காரன்பட்டி அருகே உள்ளது வெள்ள மலை. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிட்கோஅமைப்பதற்காக அரசு அதிகாரிகள் இடத்தை பார்வையிட வந்த போது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புதெரிவித்தனர்.

    இதுகுறித்து மேலூர் தாலுகா அலுவலகத்தில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் இன்று காலை சென்னையிலிருந்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், செயற்பொறியாளர் இணை இயக்குனர் மற்றும் உயரதிகாரிகள் அவ்விடத்தில் சமத்துவபுரம் அமைப்பதற்காக இடத்தை பார்வையிட வந்தனர்.
     
    அப்போது அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இப்பகுதியில் அதிகளவு மான்கள் வாழ்கின்றது. மற்றும் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. எனவே இங்கு சமத்துவ புரம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து அதிகாரிகள் உங்கள் கருத்தை அரசுக்கு தெரிவிப்பதாக கூறி அங்கி ருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அவருடன் மேலூர் வட்டார வளர்ச்சி அலு வலர் பாலச்சந்தர், அம்பலக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ராமையா மற்றும் யூனியன் அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.
    ×