search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட நிர்வாகம்"

    • அணை, குளங்களில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
    • கால இடைவெளியில் போதியளவு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.

    திருப்பூர் :

    கோடை முழுமையாக துவங்குவதற்கு முன்னரே, உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மற்ற பருவங்களை காட்டிலும் கோடை காலத்தில் நீரின் தேவை அதிகரிக்கும்.அதேநேரம் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தும், அணை, குளங்களில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு திட்டங்கள் வாயிலாக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போதியளவு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.அவ்வகையில் கோடை நெருங்கும் சூழலில், சவால்களை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் சாமிநாதன் தலைமையில் குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் வினியோகப்பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் புதிய குடிநீர் திட்ட பணிகளின் நிலை, கோடை கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

    • 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்ைல.
    • 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது.

    அபிராமம்

    நாடு சுதந்திரம் அடைந்தபின் முதன் முதலாக 1952-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த முதுகுளத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அபிராமம் அருகே உள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது சொந்த ஊரான பாப்பனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளாக சரியான சாலை வசதி செய்து தரவில்லை என அந்தப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    1952-ம் ஆண்டு பாப்பனம் கிராமம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது சாலை வசதி செய்ய புறம்போக்கு நிலம் ஊர்ஜிதம் செய்து 1958ம் ஆண்டு செட்டில்மெண்ட் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலைகள் அமைக்க தடை ஏற்பட்டது.

    தற்போது தொகுதி மறுசீரமைப்பில் பாப்பனம் பகுதி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குள் வந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை பாப்பனம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது அரசு அதனை சீரமைத்து தரவில்லை. மக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்களே பழுதாகி காணப்பட்ட சாலையை செப்பனிட்டு சரி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாப்பனம் கிராமத்தில் சாலை வசதிகள் முழுமையாக செய்துதரவில்லை. இதனால் மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பாப்பனம் ஊராட்சியில் 450 மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள 1550 மீட்டர் நீளமுள்ள சாலையில் தார்சாலை அமைக்க அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை அமைத்துக்கொள்ள அபிராமம் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இதன்மூலம் பாப்பனம் முதல் அபிராமம் வரை உள்ள சாலையை போர்க்கால நடவடிக்கை எடுத்து தார்சாலையாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பிற தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசுப்பணிக்கு செல்பவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.

    • விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

    கோவை

    விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களி மண்ணால் செய்யப்பட்டது, பிளாஸ்டா் ஆப் பாரிஸ், தொ்மாகோல் போன்ற கலவையில் தயாரிக்கப்பட்ட சிலைகளை தவிர சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

    சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுா்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×