கூடச்சேரி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூடச்சேரி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். 
கூடச்சேரி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். 
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில், உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்தல். இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், சுகாதாரத் துறையினர், மருத்துவத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், வேளாண்மை துறையினர், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட ஏராள மான கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com