search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vice President"

    • மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • இளையராஜாவுக்கு, மத்திய இணை மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்து வாழ்த்து.

    விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். 

    பாராளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்ற பிறகு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது அழைப்பின்பேரில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இளையராஜா சந்தித்தார். 

    முன்னதாக பாராளுமன்ற அலுவலகத்தில் இளையராஜாவிற்கு சால்வை அணித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட, இசைஞானி இளையராஜா சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தமது டுவிட்டர் பதிவில், மந்திரி எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.  

    இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி முரளிதரனும் உடன் இருந்தார்.

    • பழமையான மதிப்புகளைப் பாதுகாக்க ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம்.
    • சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை முக்கியம்.

    பகவத் கீதையின் போதனைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஸ்ரீல பிரபுபாதர் குறித்த புத்தக வெளியீட்டு விழா குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:

    ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது. இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம்.

    சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து இந்திய இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம்.

    ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம்,பண்டைய காலங்களிலிருந்து ஆன்மீகமே நமது தேசத்தின் ஆன்மாவாகவும், நமது நாகரிகத்தின் அடித்தளமாகவும் உள்ளது.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நெறிமுறைகள்அடிப்படையில் ஒரு லட்சிய வாழ்க்கையை நடத்த மக்களை வழிநடத்தும் கையேடுகளாக நமது வேதங்கள் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்குகிறது.

    இந்தியா பக்தி பூமி, இந்தியர்களின் நாடி, நரம்புகளில் பக்தி பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் பல ரிஷிகள், முனிவர்கள் மற்றும் ஆச்சார்யர்கள், மதச்சார்பற்ற, உலகளாவிய வழிபாட்டு முறையின் மூலம் மக்களை உயர்த்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • அரசியல் சட்ட விதிமுறைகளால் ஒரு மொழியை பாதுகாத்து விட முடியாது.
    • கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

    பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:

    சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும்.

    அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசுஉதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது. குடும்பம் குடும்பமாக, சமுதாய அளவில் மற்றும் கல்வி நிறுவனங்களால் தான் அந்த மொழி உயிர்ப்புடன் திகழும். சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது செம்மொழிகளைப் பாதுகாத்து, அதனை பரவச் செய்வதற்கு, தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது.

    பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சமஸ்கிருத கட்டுரைகளின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை புத்தகங்களாக வெளியிடுவது தான், சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும்.

    இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்துகொள்ள சமஸ்கிருதம் நமக்கு உதவுகிறது. இந்தியா குறித்து அறிந்து கொள்ள ஒருவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வுக்கு இடமில்லை.
    • இந்தியர்கள் அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள்.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா  நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது:

    மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உலக அமைதி மிகவும் முக்கியமானது. நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை.

    இந்தியர்கள் தங்களது கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதுடன், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள். உலகமே ஒரே குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

    உலகில் இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. யாராக இருந்தாலும் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இந்தியாவின் மிக உயர்ந்த அரசியல் சாசன பதவியை அடைய முடியும்.

    இந்திய நாகரீகத்தின் முக்கிய பண்பு பகிர்தல் மற்றும் கவனம் செலுத்துதல் என்பதாகும். எந்தவொரு மதத்தையும், மதத்தை சார்ந்த தலைவர்களையும் அவமரியாதை செய்வது, இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது.

    எந்த மதத்துக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சையோ, அவதூறு கருத்துக்களையோ வெளியிடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஜனநாயக உரிமைக்காக போராடும் போது வன்முறையைத் தூண்டுவது நாட்டு நலனுக்கு பாதகமானது.

    பாராளுமன்றம், சட்டமன்றங்களில் விவாதித்து முடிவெடுத்தலே முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். பாராளுமன்றங்களில் நடைபெறும் அமளிகளைப் பெரிய அளவில் வெளியிடுவதைக் கைவிட்டு, ஊடகங்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோமா அல்லது பலவீனப்படுத்துகிறோமா என்பதை கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். மாணவர்கள் பொதுவாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதுடன், மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து குடிமக்களிடம் பெருமித உணர்வை இந்த அருங்காட்சியகம் ஏற்படுத்துகிறது.
    • அனைத்து மக்களும் டெல்லியில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை காண வேண்டும்

    தலைநகர் டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தில் முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜவஹர்லால் நேரு தொடங்கி, மன்மோகன்சிங் வரையிலான 14 பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளையும், அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதையும் இந்த அருங்காட்சியகம் சித்தரிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி பொது மக்கள் பார்வைக்காக இது திறக்கப்பட்டது.

    இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவரது மனைவி உஷா ஆகியோர் இன்று முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    இந்தியாவின் அரசியல் பயணம் குறித்த ஒலி-ஒளி காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, பிரதமர்களின் அருங்காட்சியகம் அனைத்து குடிமக்களிடமும் பெருமித உணர்வை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

    பின்னர் அங்கிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் அவர் தமது கருத்துக்களை பதிவிட்டார். அதில் நமது தேசிய தலைமையில் பன்முகத்தன்மை மதிக்கப்பட்டதை இந்த அருங்காட்சியகம் வெளிப்படுத்துகிறது.

    நமது தேசத்தின் வறுமையை, எழுத்தறிவின்மையை எதிர்த்த போராட்டத்தில் இருந்து விண்வெளி ஆய்வு புதிய உச்சங்களை தொட்டது வரையிலான மாற்றங்களின் அனுபவத்தை குடிமக்கள் உணரும் வகையில் இதில் உள்ள கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளர்.

    அனைவரும் இந்த அருங்காட்சியகத்தை காண வேண்டும் என்றும் அதன் மூலம் ஊக்கத்தையும், பெருமிதத்தையும் உணர வேண்டும் என்றும் பிரதமர்களின் அருங்காட்சியக அனுபவம் குறித்து தமது முகநூலில் வெங்கையா நாயுடு பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம்.
    • இந்திய கலாச்சாரத்தை எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வது அவருக்கு செலுத்தும் அஞ்சலி

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை குறித்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

    எஸ் பி பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகவும் திகழ்ந்தார். அவர் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு எப்போதும் உந்துசக்தியாக இருப்பார்.

    இந்திய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வதும் வழிகாட்டுவதும்தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

    புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதற்கும் அப்பால் அவர் இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, நடிகராகத் திகழ்ந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமது ஊக்கமளிக்கும் வார்த்தைகளாலும், அன்பாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தவர்.

    எஸ் பி.பி.மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் எளிமையையும் கொண்டவர். அவரது குணங்களால் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இவரது ஆளுமையைக் கட்டமைப்பதில் இவரின் தந்தை சாம்பமூர்த்தி மிக முக்கிய பங்கு வகித்தார்.

    இந்தியாவை மென்மையான சக்தியாக முன்னிறுத்தியதில் இந்திய கலாச்சாரத்திற்கும், இசைக்கும், திரைப்படங்களுக்கும், நூல்களுக்கும் மிகப்பெரும் பங்கு உண்டு. இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், எஸ்பிபி சகோதரியும், பாடகியுமான எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பி.சரண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கத்தாருக்கு பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு, அந்நாட்டு பிரதமரை சந்தித்தார்.
    • இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்கிறது.

    தோஹா:

    குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக கத்தார் சென்றுள்ளார். நேற்று கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் அப்துல்அஜிஸ் அல் தானியுடன் வெங்கையா நாயுடு பேச்சு நடத்தினார்.

    அப்போது பேசிய அவர், இந்தியாவில் கத்தாரின் முதலீடு மார்ச் 2020ல் இருந்து ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாராட்டினார். கத்தாரில் சுகாதாரத் துறையில் இந்திய சுகாதார வல்லுநர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

    இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை வழங்குகிறது என்றும், பாரம்பரிய மருத்துவத் துறையில் கத்தாருடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியாவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்ட அவர், எரிசக்தி பாதுகாப்பில் கத்தாரின் பங்கை இந்தியா ஆழமாக மதிக்கிறது என்றார்.

    இதை தொடர்ந்து தோஹாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது, மேலும் அது வளமடைந்து வருகிறது என்றார்

    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
    புதுடெல்லி:

    மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இரண்டாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.



    இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட துணை ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக அடுத்த பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு வாழ்த்து தெரிவித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவருடன் சிற்றுண்டி அருந்தியபோது நாட்டின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது மற்றும் பாராளுமன்ற அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்’ என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
    நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நிலையான அரசு அமைவதற்காக தெளிவான தீர்ப்பை வழங்கிய மக்களை வாழ்த்துவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நிலையான அரசு அமைவதற்கு தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பை தேர்தலில் வழங்கிய இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல, இந்த தேர்தலை திறம்படவும், சுமுகமாகவும் நடத்தியமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை பெற்று இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    எந்த கட்சியை சார்ந்திருந்தாலும் செழுமைமிக்க ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையை மேலும் ஆழமாக்கி வளர்ச்சி, சீர்திருத்தம் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகிய லட்சியங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்ப வேண்டாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
    குண்டூர்:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

    எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. துணை ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, ஒரே நாளில் 16 தேர்தல் கூட்டங்களில் நான் பேசுவது வழக்கம். இப்போது மக்களிடம் இருந்து விலகி விட்டேன். ஆனால், மதிக்கத்தக்க பதவியில் இருக்கிறேன். இப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாட் போலை (நிஜ தேர்தல்) நம்புங்கள்.

    சாதி, மதம், பணம் பார்த்து தேர்தலில் ‘சீட்’ கொடுப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெற கோடிக்கணக்கில் செலவளிப்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து, தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருவதாக மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    சமீபத்தில் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் ஆற்றிய உரையினை பிரிவினையை தூண்டுகின்ற சில அரசியல் அமைப்புகள் முற்றிலுமாக திரித்தும், திசை மாற்றியும் வி‌ஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.



    கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து அதன் மூலமாக தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருகின்றனர்.

    கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பேசும்போது தீவிரவாதம் எந்த மதத்தினாலும் எந்த வடிவில் முன்னெடுக்கப்பட்டாலும் அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்திருந்தார்.

    அவரது உரையில் அவர் ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்தும் ஒன்றிணைந்தும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சமூகமாக இருந்திட வேண்டும் என்கிற தன்னுடைய எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தி பேசி உள்ளார்.

    அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இந்தியர் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வுடன் தொடர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு, மக்களின் பேராதரவோடு நடைபோட்டு கொண்டிருக்கின்ற மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கருத்தினை வலியுறுத்தி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து கொண்டே இருக்கும்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தனது இந்த நிலைப்பாட்டினை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை வலியுறுத்தி கொண்டே இருக்கும். மக்கள் நீதி மய்யம் நீதி மன்றங்கள் மீதும், சட்டத்தின் மீதும் பெரும் மரியாதையும், மதிப்பும் கொண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர். #Modi #MissionShakti #RamNathKovind #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “மிஷன் சக்தி, இந்தியாவின் பெருமைமிகு தருணம். இந்த சோதனை, இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்“ என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளால் நாம் பெருமைப்படுகிறோம்“ என்று கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன், சுரேஷ் பிரபு, ஸ்மிரிதி இரானி, முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MissionShakti #RamNathKovind  #VenkaiahNaidu
    ×