search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exit poll"

    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 21.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ஜன் கி பாத்: மி.தே.மு 10- 14, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ்: மி.தே.மு 14- 18, ஜோ.ம.இ 12- 16, காங்கிரஸ் 08- 10, மற்றவை 00- 02.

    பி- மார்க்யூ: மி.தே.மு 14- 20, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    (மி.தே.மு- மிசோ தேசிய முன்னணி, ஜோ.ம.இ- சோரா மக்கள் கட்சி)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 63.94 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 101.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    சிஎன்என் நியூஸ் 18: பாஜக- 111, காங்கிரஸ்- 74, மற்றவை-14

    ஜன் கி பாத்: பாஜக 100- 122, காங்கிரஸ் 62- 85, மற்றவை 14- 15

    பி- மார்க்யூ: பாஜக 101- 125, காங்கிரஸ் 69- 81, மற்றவை 05- 15

    பால்ஸ்டிராட்: பாஜக 100- 110, காங்கிரஸ் 90- 100, மற்றவை 05-15

    டைம்ஸ் நவ்: பாஜக 108- 128, காங்கிரஸ் 56- 72, மற்றவை 13- 21

    இதையடுத்து, ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
    • கடந்த தேர்தலில் பாஜக டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.

    டெல்லி மாநகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

    ஆஜ் தக் செய்தி நிறுவனம்:-

    ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களில் வெற்றி

    பாஜக - 69 முதல் 91 இடங்களில் வெற்றி

    காங்கிரஸ் - 3 முதல் 7 இடங்களில் வெற்றி

    நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்:-

    ஆம் ஆத்மி - 159 முதல் 175 இடங்களில் வெற்றி

    பாஜக - 70 முதல் 92 இடங்களில் வெற்றி

    காங்கிரஸ் - 4 முதல் 7 இடங்களில் வெற்றி

    டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்:-

    ஆம் ஆத்மி - 146 முதல் 156 இடங்களில் வெற்றி

    பாஜக - 84 முதல் 94 இடங்களில் வெற்றி

    காங்கிரஸ் - 6 முதல் 10 இடங்களில் வெற்றி

    பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    சேலம்:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது

    2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.

    எனவே, யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும். பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.



    விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. மக்களின் நன்மைக்காகவே புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் தேவைப்படுகிறது. விபத்துக்களை தவிர்க்க இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சாலைகள் போடப்படுகின்றன. வெறும் 7 சதவீத விவசாயிகள் மட்டுமே சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்ப வேண்டாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
    குண்டூர்:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

    எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. துணை ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, ஒரே நாளில் 16 தேர்தல் கூட்டங்களில் நான் பேசுவது வழக்கம். இப்போது மக்களிடம் இருந்து விலகி விட்டேன். ஆனால், மதிக்கத்தக்க பதவியில் இருக்கிறேன். இப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாட் போலை (நிஜ தேர்தல்) நம்புங்கள்.

    சாதி, மதம், பணம் பார்த்து தேர்தலில் ‘சீட்’ கொடுப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெற கோடிக்கணக்கில் செலவளிப்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×