டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு வெளியீடு

8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.கடந்த தேர்தலில் பாஜக டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)
அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)
Published on

டெல்லி மாநகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

ஆஜ் தக் செய்தி நிறுவனம்:-

ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களில் வெற்றி

பாஜக - 69 முதல் 91 இடங்களில் வெற்றி

காங்கிரஸ் - 3 முதல் 7 இடங்களில் வெற்றி

நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்:-

ஆம் ஆத்மி - 159 முதல் 175 இடங்களில் வெற்றி

பாஜக - 70 முதல் 92 இடங்களில் வெற்றி

காங்கிரஸ் - 4 முதல் 7 இடங்களில் வெற்றி

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்:-

ஆம் ஆத்மி - 146 முதல் 156 இடங்களில் வெற்றி

பாஜக - 84 முதல் 94 இடங்களில் வெற்றி

காங்கிரஸ் - 6 முதல் 10 இடங்களில் வெற்றி

பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com