search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prime ministers museum"

    • அனைத்து குடிமக்களிடம் பெருமித உணர்வை இந்த அருங்காட்சியகம் ஏற்படுத்துகிறது.
    • அனைத்து மக்களும் டெல்லியில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை காண வேண்டும்

    தலைநகர் டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தில் முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜவஹர்லால் நேரு தொடங்கி, மன்மோகன்சிங் வரையிலான 14 பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளையும், அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதையும் இந்த அருங்காட்சியகம் சித்தரிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி பொது மக்கள் பார்வைக்காக இது திறக்கப்பட்டது.

    இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவரது மனைவி உஷா ஆகியோர் இன்று முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    இந்தியாவின் அரசியல் பயணம் குறித்த ஒலி-ஒளி காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, பிரதமர்களின் அருங்காட்சியகம் அனைத்து குடிமக்களிடமும் பெருமித உணர்வை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

    பின்னர் அங்கிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் அவர் தமது கருத்துக்களை பதிவிட்டார். அதில் நமது தேசிய தலைமையில் பன்முகத்தன்மை மதிக்கப்பட்டதை இந்த அருங்காட்சியகம் வெளிப்படுத்துகிறது.

    நமது தேசத்தின் வறுமையை, எழுத்தறிவின்மையை எதிர்த்த போராட்டத்தில் இருந்து விண்வெளி ஆய்வு புதிய உச்சங்களை தொட்டது வரையிலான மாற்றங்களின் அனுபவத்தை குடிமக்கள் உணரும் வகையில் இதில் உள்ள கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளர்.

    அனைவரும் இந்த அருங்காட்சியகத்தை காண வேண்டும் என்றும் அதன் மூலம் ஊக்கத்தையும், பெருமிதத்தையும் உணர வேண்டும் என்றும் பிரதமர்களின் அருங்காட்சியக அனுபவம் குறித்து தமது முகநூலில் வெங்கையா நாயுடு பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவை வடிவமைப்பதில் முன்னாள் பிரதமர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரும் வகையில் டெல்லியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு மத்திய மந்திரிகள் இன்று அடிக்கல் நாட்டினர். #PrimeMinistersMuseum #TeenMurtiEstate
    புதுடெல்லி:

    சுதந்திரம் பெற்ற பின்னர் நமது நாட்டின் பிரதமர்களாக பல தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். இவர்களில் சிலர் மட்டுமே இன்று உயிருடன் உள்ளனர். பலர் மறைந்து விட்டதால் அவர்களின் பெருமைகள் மற்றும் நாடு அவர்களால் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை இன்றைய தலைமுறையினர் அறிய முடியவதில்லை.

    இந்த குறையை போக்கும் வகையில் டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டது.

    இந்நிலையில், தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்த அருங்காட்சியகம் கட்டிட பணிகளுக்கு மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர். #PrimeMinistersMuseum #TeenMurtiEstate
    ×