என் மலர்
நீங்கள் தேடியது "SPB"
- மறைந்த எஸ்பிபி-யின் 77வது பிறந்தநாளான இன்று பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
- இவரை நினைவுகூர்ந்து நடிகர் கமல் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 16 இந்திய மொழிகளில் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை தன்வசம் படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தன்னுடைய குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த எஸ்.பி.பி, ஜூன் 4ம் தேதி 1946 வருடம் பிறந்தார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி செப்டெம்பர் 25ம் தேதி மறைந்தார்.

எஸ்பிபி
இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பியின் பிறந்தநாளான இன்று திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பியின் பிறந்தநாளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல், அவரது நினைவுகளை பதிவிட்டுள்ளார்.

எஸ்பிபி - கமல்
அதில், இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார்.
- எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அறிவிப்பு.
- பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படுகிறது.
மேலும், "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவரது இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட கோரிக்கை.
- கோரிக்கையை ஏற்று அரசு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டியுள்ளது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் சரண் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப்பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு உள்ளிட்டோர் மற்றும் எஸ்.பி.பி. குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
- இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம்.
- இந்திய கலாச்சாரத்தை எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வது அவருக்கு செலுத்தும் அஞ்சலி
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை குறித்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
எஸ் பி பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகவும் திகழ்ந்தார். அவர் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு எப்போதும் உந்துசக்தியாக இருப்பார்.
இந்திய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வதும் வழிகாட்டுவதும்தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதற்கும் அப்பால் அவர் இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, நடிகராகத் திகழ்ந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமது ஊக்கமளிக்கும் வார்த்தைகளாலும், அன்பாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தவர்.
எஸ் பி.பி.மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் எளிமையையும் கொண்டவர். அவரது குணங்களால் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இவரது ஆளுமையைக் கட்டமைப்பதில் இவரின் தந்தை சாம்பமூர்த்தி மிக முக்கிய பங்கு வகித்தார்.
இந்தியாவை மென்மையான சக்தியாக முன்னிறுத்தியதில் இந்திய கலாச்சாரத்திற்கும், இசைக்கும், திரைப்படங்களுக்கும், நூல்களுக்கும் மிகப்பெரும் பங்கு உண்டு. இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், எஸ்பிபி சகோதரியும், பாடகியுமான எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பி.சரண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.








