என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்பிபி"
- மறைந்த எஸ்பிபி-யின் 77வது பிறந்தநாளான இன்று பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
- இவரை நினைவுகூர்ந்து நடிகர் கமல் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 16 இந்திய மொழிகளில் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை தன்வசம் படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தன்னுடைய குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த எஸ்.பி.பி, ஜூன் 4ம் தேதி 1946 வருடம் பிறந்தார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி செப்டெம்பர் 25ம் தேதி மறைந்தார்.

எஸ்பிபி
இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பியின் பிறந்தநாளான இன்று திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பியின் பிறந்தநாளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல், அவரது நினைவுகளை பதிவிட்டுள்ளார்.

எஸ்பிபி - கமல்
அதில், இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார்.
- எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அறிவிப்பு.
- பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படுகிறது.
மேலும், "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவரது இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






