search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van accident"

    • டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூரில் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இந்த ஷூ கம்பெனியில் கலவை அருகே உள்ள பாலி, ராந்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

    வேலை செய்யும் தொழிலாளர்களை ஷூ கம்பெனி வேன் மூலம் தினமும் கம்பெனிக்கு அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை ஆற்காடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் கம்பெனிக்கு சொந்தமான வேனில் 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களை ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    வேன் முள்ளுவாடி கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் வேனை இடது பக்கம் திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் வந்த ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் கீதா, சிவகுமாரி, சாந்தி, வெண்ணிலா, நந்தினி, கவிதா வேன் டிரைவர் சூர்யா, லோகேஸ்வரன், சிவலிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து கலவை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை அருகே சாலையை கடந்த அய்யப்ப பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மேட்டு துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவபண்டாரம். இவரது மனைவி நல்லமுத்து(வயது65). இவரது உறவினர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த பேச்சிமுத்து(23). இவர்கள் தங்கள் உறவினர்களுடன் நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    பின்பு இன்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பினர். வேன் செங்கோட்டை அருகே கேசவபுரம் பகுதியில் வந்தபோது வேனில் இருந்தவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கீழே இறங்கினர். வேனை டிரைவர் ரோட்டு ஓரமாக நிறுத்தினார். வேனில் இருந்து இறங்கிய பக்தர்கள் சாலையை கடந்து சென்றனர்.

    அப்போது அந்தவழியே காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கேரளா நோக்கி சென்றது. எதிர்பாராதவிதமாக வேன் ரோட்டை கடந்த பக்தர்கள் மீது மோதியது. இதில் நல்லமுத்து, பேச்சிமுத்து உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி  போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். பேச்சிமுத்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பேச்சிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கிணத்துக்கடவில் மொபட் மீது வேன் மோதிய விபத்தில 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை மேட்டுப் பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி வயது (49). இவரும் திருப்பூர் மாவட்டம் உடுமலை கணபதிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி மாசிலாமணி (35), கிணத்துக்கடவு கொண்டம்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவைசேர்ந்த ராஜன் (45), கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுச்சாமி (55) ஆகிய 4 பேரும் ஒரே மொபட்டில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டியில் உள்ள ராஜன் வீட்டிற்கு கிளம்பினார்கள். மொபட்டை மாசிலாமணி ஓட்டினார்.

    கொண்டம்பட்டி ரோட்டில் சென்றபோது எதிரேவந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானர். படுகாயம் அடைந்த ராஜன், ஆறுச்சாமி, மாசிலாமணி ஆகியோர் உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர்குமார், ராஜன். ஏட்டு ரத்தினசாமி ஆகியோர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கோவை, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆறுச்சாமி, மாசிலாமணி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கிணத்து க்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் நெகமம் சேரிபாளையத்தை சேர்ந்த மகேஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் இருந்து தேனி சென்ற பால் வேன் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியானார்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் பெரியசாமி (வயது 27). இவர் மதுரை ஆவின் நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். தினமும் அதிகாலையில் மதுரையில் இருந்து தேனிக்கு சென்று பாலை கொண்டு வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று நள்ளிரவு பெரியசாமி வேனில் தேனிக்கு புறப்பட்டார். உசிலம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் நடுரோட்டில் வேன் தலை குப்புற கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த டிரைவர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். வேனில் இருந்த உதவியாளர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மேலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 20 பேர் கொல்லிமலைக்கு வேனில் சுற்றுலா சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். வேனை சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று காலை 9 மணியளவில் வேன் மேலூர் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டயர் வெடித்ததால் வேன் தாறுமாறாக ஓடி ரோட்டில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்.

    உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசாரும், டோல்கேட் விபத்து வாகன மீட்பு பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினரும் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த பெண்கள் உள்பட 15 பேரை மேலூர், சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பரமக்குடியில் தனியார் பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவத்தில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், மாணவ-மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி பாரதிநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகள் சாருலதா (வயது 20). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி பஸ்சில் பரமக்குடிக்கு வந்த இவர் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தனியார் மெட்ரிக் பள்ளி வேன் மோதியதில் சாருலதா படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நேற்று காலை மாணவி சாருலதாவின் உடல் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது அங்கு குவிந்திருந்த உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தனியார் பள்ளி வேன் டிரைவர் செல்போன் பேசியபடி வந்து விபத்தை ஏற்படுத்தியதை கண்டித்தும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவி சாருலதாவின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு வந்த பரமக்குடி தாசில்தார் பரமசிவன், போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மதுரை-பரமக்குடி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சாலை மறியலால் பரமக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பரமக்குடி வருவாய் துறை அலுவலகத்தில் தாசில்தார் பரமசிவன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு மாணவி சாருலதாவின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
    மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

    பாப்பாக்குடி மரபட்டறை அருகே வந்த போது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குபதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பார்வதி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). லாரி டிரைவர் மனைவி பெயர் மல்லிகா (24). மைதிலி (8) என்ற ஒரு மகளும் பிரதீப்குமார் (6) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு 9.15 மணியளவில் பாஸ்கர் தனது மகனுடன் சத்தியமங்கலம் சென்று விட்டு சிக்கரசம்பாளையம் சென்று கொண்டிருந்தார்.

    சத்தியமங்கலம் அருகே கள்ளுக்கடை பிரிவில் வந்தபோது தாளவாடியிலிருந்து திருப்பூர் நோக்கி காய்கறிகள் ஏற்றி கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது.

    இதில் இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் பலியான தந்தை-மகன் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாதயாத்திரை சென்ற தொழிலாளி வேன் மோதி மகன் கண் முன்பே பரிதாபமாக இறந்தார்.

    சாத்தூர்:

    சிவகாசி நாரணாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 42) கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மகனுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக குழுவினருடன் நேற்று புறப்பட்டார். நள்ளிரவு சாத்தூர் ஓடைப்பட்டி வந்த பாதயாத்திரை குழுவினர் அங்குள்ள விநாயகர் கோவிலில் தங்கினர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    சுப்புராஜ் தனது மகனுடன் நடந்து சென்றனர். சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டியபட்டி விலக்கில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டெம்போ வேன் எதிர் பாராத விதமாக சுப்புராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புராஜ் ரத்த வெள்ளத்தில் மகன் கண் முன்பே பரிதாபமாக இறந்தார். சுப்புராஜ் உடலை பார்த்து மகன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தி சென்ற வேன் டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பையா என்பவர் கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது வேன் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் பூர்ணம்மாள் (வயது 65). நேற்று இரவு இவர் அருகில் உள்ள ஓட்டலுக்கு புறப்பட்டார். ஓட்டலுக்கு செல்ல சாலையை கடக்கும் போது கரடிவாவியில் இருந்து வந்த வேன் பூர்ணம்மாள் மீது மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூர்ணம்மாள் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புளியங்குடி அருகே வேன் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள மலையடிகுறிச்சி காலசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி இவரது மகன் கோட்டூர்சாமி (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று காலை கோட்டூர்சாமி மலையடிகுறிச்சி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் ஆலையில் வேலை செய்யும் ஆட்களை ஏற்றி வந்த வேன் கோட்டூர்சாமி மீது மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட கோட்டூர்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 

    இது குறித்து தகவலறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோட்டூர்சாமி உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    உத்தமபாளையம் அருகே பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக சூர்யா தனது நண்பர்கள் காதர் மைதீன் (வயது 29). சுருளி மஸ்தான் (39) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மினி வேன் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது இதில் காதர் மைதீன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்து 3 மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. சுருளி மஸ்தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

    சூர்யா படுகாயங்களுடன் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் மினி வேன் டிரைவர் தங்கமாயன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். #tamilnews
    ×