என் மலர்

  செய்திகள்

  கிணத்துக்கடவில் ஒரே மொபட்டில் 4 பேர் பயணம்- வேன் மோதி 2 பேர் பலி
  X

  கிணத்துக்கடவில் ஒரே மொபட்டில் 4 பேர் பயணம்- வேன் மோதி 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிணத்துக்கடவில் மொபட் மீது வேன் மோதிய விபத்தில 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  கிணத்துக்கடவு:

  கோவை மேட்டுப் பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி வயது (49). இவரும் திருப்பூர் மாவட்டம் உடுமலை கணபதிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி மாசிலாமணி (35), கிணத்துக்கடவு கொண்டம்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவைசேர்ந்த ராஜன் (45), கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுச்சாமி (55) ஆகிய 4 பேரும் ஒரே மொபட்டில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டியில் உள்ள ராஜன் வீட்டிற்கு கிளம்பினார்கள். மொபட்டை மாசிலாமணி ஓட்டினார்.

  கொண்டம்பட்டி ரோட்டில் சென்றபோது எதிரேவந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானர். படுகாயம் அடைந்த ராஜன், ஆறுச்சாமி, மாசிலாமணி ஆகியோர் உயிருக்கு போராடினர்.

  தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர்குமார், ராஜன். ஏட்டு ரத்தினசாமி ஆகியோர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கோவை, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  ஆறுச்சாமி, மாசிலாமணி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இது குறித்து கிணத்து க்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் நெகமம் சேரிபாளையத்தை சேர்ந்த மகேஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×