search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC"

    • போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல் நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்வருகிற 15-ந் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள்14-ந் தேதி –க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நேரடியாக நடத்தப்படுகிறது.
    • பயிற்சியின் போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    குரூப்-4 தேர்வு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வை நடத்துகிறது. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் (ஓ.சி.) 18 வயது முதல் 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், எஸ்.சி-எஸ்.டி. பிரிவினர் 18 முதல் 42 வயது வரையிலும் எழுதலாம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்த அனைத்து பிரிவினரும் இந்த தேர்வை 60 வயது வரையிலும் எழுதலாம்.

    பயிற்சி வகுப்புகள்

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 எழுத்துத்தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 18-ந்தேதி முதல் தொடங்கி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி வரை நேரடியாக நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். பயிற்சியின் போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். அனுபவமிக்க வல்லுனர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,000 ஆகும்.

    விடுதிகள்

    பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. விடுதியில் தங்கிப்படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7,700 பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூ.7,000-க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி அல்லது ஐ.ஓ.பி.-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாக பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ் அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது.

    தொலைபேசி எண்கள்

    இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரான்சிஸ் ரெஜீ லா தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசுப்பணியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பது நியாயமில்லை.
    • தற்காலிகப் பணியோ, ஒப்பந்த அடிப்படையிலான பணியோ வழங்காமல் அரசுப்பணியாக வழங்கினால் தான் அது அரசுப்பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயனளிக்கும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் சுமார் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் குரூப் 4 பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

    குறிப்பாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசுப்பணியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பது நியாயமில்லை. தற்காலிகப் பணியோ, ஒப்பந்த அடிப்படையிலான பணியோ வழங்காமல் அரசுப்பணியாக வழங்கினால் தான் அது அரசுப்பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயனளிக்கும்.

    எனவே தமிழக அரசு, குரூப் 4-க்கான பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் அரசுத்துறையில் பணி வழங்கவும், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்பவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு 1½ லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெ டுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்வு எழுதியவர்களால் கடந்த இரு மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு தி.மு.க. அரசின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    மாறாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வகை பணிகளுக்கும் சேர்த்து 10,000 பேர் கூட தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.

    நான்காம் தொகுதி பணிக்கான தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அரசுத்துறைகளின் தேவையையும் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு 1½ லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.
    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா ராமசாமியாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன்படி 761 ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான தகுதியாக கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    அந்த வகையில் நாங்கள் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்று உள்ளதால், ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இந்த பணிக்கு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்கள் தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    விதிமுறைகளின்படியும், அரசு ஊழியர்கள் சட்டத்தின்படியும் இந்த நடைமுறை சட்டவிரோதமானது. இதனால் எங்களை போன்ற பலரின் அரசு வேலை கனவாகவே போய்விடுகிறது. எனவே சட்டப்படி ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரோடு இன்ஸ்பெக்டர் பணி வழங்கவும், டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர். இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    எனவே கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மனுதாரர்கள் தான் ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள். எனவே அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.
    • வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணகுமார் மதுரை ஐகோர்ட்டில தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்துள்ளேன். 21.7.2022 அன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு 92 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது.

    முதல்நிலை தேர்வு கடந்த 19.11.2022 அன்று நடந்தது. இந்த சூழ்நிலையில் முதல்நிலை தேர்வு முடிந்து 10 நாட்களுக்கு பிறகு 28.11.2022 அன்று உத்தேச வினா விடை வெளி யிடப்பட்டது. அதில் தவறு கள் இருந்தால் இது குறித்து 7 நாட்களில்க்குடி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து நான் 5.12.2023 அன்று நான் 19 கேள்விகளின் விடை தவ றாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்று ஆதாரத்து டன் விண்ணப்பித்தேன். உத்தேச வினா-விடை குறித்து என்னுடைய ஆட்சே பனை குறித்து வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்க வில்லை.

    இந்த நிலையில் 28.04.2023 அன்று முதல்நிலை தேர்வு முடிவு கள் டி.என்.பி.எஸ்.சி.யால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். நான் தேர்வு செய்யப்படவில்லை. குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கோரப்பட்டனர்.

    எனவே உத்தேச வினாவிடை குறித்து என்னுடைய ஆட்சேபனை குறித்து வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்காமல் முதல் நிலை தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டு உள்ள தால் என் போன்றோர் முதன்மை தேர்வுக்கு தகுதிபெற வில்லை. இது போல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே உத்தேச வினா-விடை குறித்து என் போன்றோரின் ஆட்சே பனை குறித்து வல்லுநர் குழுவின் இறுதி வினா விடை பட்டியல் வெளியிட வேண்டும், அதன் பிறகு குரூப்-1 முதன்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.

    92 பணியிடங்களுக்கு நடந்த குரூப்-1 முதன் நிலை தேர்வின் முடிவுகள் 28.4.2023 அன்று வெளி யிடப்பட்டது. இந்த முடிவு களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

    தேர்வில் கேட்கப்பட்ட வினாவிற்கான விடைகளை இறுதி செய்யும் வல்லுநர் குழுவை, டி.என்.பி.எஸ்.சி. நியமிக்காமல் உயர்கல்வி துறை நியமிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 3,080 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
    • விண்ணப்பித்தவர்களில் 1,310 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சாலை ஆய்வாளர் பணிக்கு 825 காலி இடங்களுக்கு எழுத்து தேர்வு இன்று நடை பெற்றது.

    நெல்லை

    எழுத்து தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என 2 நிலைகளில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 9 பள்ளிகளில் உள்ள 11 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை எழுதுவ தற்காக 3,080 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதில் 1,770 பேர் தேர்வு எழுதினார்கள். இது 57.4 சதவீதமாகும். விண்ணப் பித்தவர்களில் 1,310 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    தேர்வை கண்காணிக்க துணை தாசில்தார் நிலை யில் 5 சுற்றுக்குழு அலு வலர்கள் மற்றும் தேர்வு நடவடிக்கை களை பதிவு செய்ய 12 வீடியோ கிராபர்கள், ஒரு அறைக்கு ஒரு அலுவலர் வீதம் 11 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் தேர்வை கண்காணித்தனர். தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் 2 மணி நேரத்திற்கு முன்பு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • டி.என்.பி.எஸ்.சி.யை துண்டாடக் கூடாது.
    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், இன்னொரு அமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயலாம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மைக்காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 6000 முதல் 7000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது. இது தேர்வாணையத்திற்கு எந்தவித பணிச்சுமையையும் ஏற்படுத்தாது.

    ஆவின், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது. அப்போது கூட அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பணிச்சுமை எதுவும் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது இப்போது புதிய வாரியம் அமைக்க வேண்டிய தேவை என்ன?

    டி.என்.பி.எஸ்.சி.யை துண்டாடக் கூடாது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயராணியின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
    • விசாரணை நடத்தி 6 மாதங்களில் உரிய முடிவை மாவட்டத்தில் குழு எடுக்க வேண்டும்.

    சென்னை:

    கடந்த 1996-97-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கேற்று, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர், கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி, பட்டியலினத்தவர் சாதிச்சான்று பெற்றிருந்தார்.

    பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் சமர்ப்பித்த சாதிச் சான்றுக்கு பதில், தந்தை பெயரில் பெற்ற சாதிச்சான்றை சமர்ப்பிக்கும்படி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து ஜெயராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய சாதிச் சான்றிதழ் செல்லத்தக்கது என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், திலகவதி அமர்வு, பட்டியலினத்தவர்கள் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது.

    அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய கூறும்.

    அதேசமயம், ஜெயராணியின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும். அதன் மீது விசாரணை நடத்தி 6 மாதங்களில் உரிய முடிவை மாவட்டத்தில் குழு எடுக்க வேண்டும்.

    இந்த குழுவின் விசாரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை ஜெயராணி வழங்கலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.

    • முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் இந்த பதவிகளுக்கான தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • தமிழகம் முழுவதும் 1,080 தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி நடத்தப்பட்டது.

    சென்னை:

    குரூப்-1 பதவிகளில் வரும் 18 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிக வரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

    முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் இந்த பதவிகளுக்கான தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. ஹால்டிக்கெட்டை வழங்கியது. இவர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 1,080 தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி நடத்தப்பட்டது.

    மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே தேர்வை எதிர்கொண்டனர். ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன் பிறகு, மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போடப்பட்டது. அந்த மாதத்திலாவது தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

    அதன்படி, 92 பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் எழுதிய குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளமுடியும் என்றும், தேர்வர்களுக்கு அவர்கள் பதிவு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.

    ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் எழுதியதில், ஒரு பணியிடத்துக்கு 20 பேர் வீதம் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, அந்த பட்டியலில் 2 ஆயிரத்து 162 பேர் இடம் பெற்று இருக்கின்றனர்.

    முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களை அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் 92 பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 162 பேர் போட்டியிட உள்ளனர்.

    முதன்மை தேர்வை பொறுத்தவரையில், வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள், அதற்கடுத்தபடியாக நேர்முக தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறும் தேர்வர்களுக்கு தகுந்த பணியிடங்கள் வழங்கப்பட உள்ளன.

    • குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும்.
    • குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    இதேபோல் குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 5446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    ஜூன் மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
    தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.

    மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

    5 நாட்களில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியான விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் எனவும்  கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஜூன் மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்.. காவல்துறை குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாறவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    ×