search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training Courses"

    • கிளார்க் பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் 28 வயது வரை யிலும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் எழுதலாம்.
    • வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    வங்கி அதிகாரி, கிளார்க் தேர்வு

    இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சானல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ள்ளது. வங்கி அதிகாரி பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 33 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயது வரையிலும் எழுதலாம்.

    கிளார்க் பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் 28 வயது வரை யிலும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் எழுதலாம்.

    நேரடி பயிற்சி வகுப்புகள்

    இந்த வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்து கிறது. இப்பயிற்சி வகுப்பு கள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, மொத்தம் 25 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பயிற்சியின்போது மாதிரித்தேர்வுகளும் நடத்த ப்படும். இப்பயிற்சி வகுப்பு கள் அனுபவமிக்க வல்லு னர்களால் நடத்தப் படுகிறது.

    பயிற்சி வகுப்புகள் தின மும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ. 7,000 ஆகும்.

    தங்கும் விடுதி வசதி

    பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ. 7,700-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூ. 7,000-க்கான வங்கி வரைவோலை (கனரா வங்கி அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச் செந்தூர்-628216, தூத்துக்குடி மாவ ட்டம்' என்ற முகவரிக்கு தங்களது புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்க ளுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாகவும் இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம்.

    அதன்பின்னர் பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ. 7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் விவரங்கள் பெற 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொsலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.

    • போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல் நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்வருகிற 15-ந் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள்14-ந் தேதி –க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
    • துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சிக்காக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து திடக்கழிவு செய்யும் முறையையும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்தும் பயிற்சி மேற்கொண்டனர்.

    மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கையில் மத்திய அரசின் போட்டி தேர்வுக்்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
    • மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அலுவலக மயில்கேட் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள SSC CuSL போட்டித் தேர்வுக்கான அறிவிப்பில் சுமார் 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ேதர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். 4.1.2023 ஆகும். இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    அவ்வாறு விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு கல்விச்சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் வரும் பட்சத்தில் மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து தரப்படும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (14-ந் தேதி) முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த அலுவலகத்தின் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. சீரான இடைவெளியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பை குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள tamlianducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பெயரை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து இந்த இணையதளத்தில் மத்திய-மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வு களுக்கான பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காலி பணி இடங்களுக்கான அரசுப்பணியாளர் 1089 நில அளவையர், வரைவாளர் தேர்விற்கும், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நில அளவையர், வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும், மருந்தாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும்  விண்ணப்பிக்கலாம்.

    அதனை தொடர்ந்து, இத்தேர்வுகளுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வாணையத்தால் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நில அளவையர், வரைவாளர் அல்லது மருந்தாளர் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×