search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Competitive Examinations"

    • குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டி தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது.

    குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி மற்றும குரூப் சி தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.

    105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் பதவி) தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி நடைபெறுகிறது.

    605 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் அல்லாத பதவி) தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறுகிறது.

    730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- டிப்ளமோ/ஐடிஐ நிலை தேர்வு நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

    50 பணியிடங்களுக்கான வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் தரம் II (முதன்மை) தேர்வு வரும் டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது.b 

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காலி பணி இடங்களுக்கான அரசுப்பணியாளர் 1089 நில அளவையர், வரைவாளர் தேர்விற்கும், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நில அளவையர், வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும், மருந்தாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும்  விண்ணப்பிக்கலாம்.

    அதனை தொடர்ந்து, இத்தேர்வுகளுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வாணையத்தால் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நில அளவையர், வரைவாளர் அல்லது மருந்தாளர் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×