திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
Published on

சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சிக்காக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து திடக்கழிவு செய்யும் முறையையும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்தும் பயிற்சி மேற்கொண்டனர்.

மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com