search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiruchendur"

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக மன்ற கூட்டம் நடந்தது.
    • நாசரேத் ஜெ.ஜெ.நிறுவனத்தின் தளவாட சேவைகள் தொடர்பான ஆலோசகர் பேரின்பராஜ் ‘தளவாட வேலை தொடர்பான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக மன்ற கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ஜெயசுபா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நாசரேத் ஜெ.ஜெ.நிறுவனத்தின் தளவாட சேவைகள் தொடர்பான ஆலோசகர், பயிற்சியாளர் மற்றும் உரிமையாளரான பேரின்பராஜ் 'தளவாட வேலை தொடர்பான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசினார்.

    அப்போது, பொருட்களை எவ்வாறு பண்டக சாலையில் சேகரிப்பது, சரக்குகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான செயல்பாடுகள் மற்றும் பொருட்களை எவ்வாறு கையாண்டு விநியோகிப்பது என்பது குறித்து விளக்கினார். பின்னர் 3-ம் ஆண்டு மாணவி ராஜதேவி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர்கள் தமிழ்செல்வி, கமலச்செல்வி, வணிகவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியர்கள் மாரியம்மாள், சந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 17வயதுக்குட்பட்ட கைப்பந்து போட்டியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக் தகுதி பெற்றுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி தூத்துக்குடி காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் குறு வட்ட அளவில் 17வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான கைப்பந்து போட்டிக் தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார்.
    • மேலும் ‘கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்’ மற்றும் ‘பைதான்’ கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 'தொழில் வளர்ச்சி செறிவூட்டல் திட்டம்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் (பொறுப்பு) அனிதா வரவேற்று பேசினார். தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார். மேலும் 'கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்' மற்றும் 'பைதான்' கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஒருங்கிணைப்பாளர் இந்துமதி நன்றி கூறினார்.

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக கணித அறிவியல் பள்ளி கவுரவ பேராசிரியர் மருதை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 'சி.எஸ்.ஐ.ஆர். தேர்வில் சிக்கல் தீர்க்கும் நுட்பம்' என்ற தலைப்பில் பேசினார். ஆதித்தனார் கல்லூரி கணிதத்துறை பசுங்கிளி பாண்டியன், அக்கல்லூரியின் கணிதத்துறை முன்னாள் பேராசிரியர் ராபர்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் முதுகலை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவி அஷ்டலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தங்கம், உஷா பரமேஸ்வரி, வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • திருச்செந்தூர் கோவிலில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய சிலை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையாக நவராத்திரி திருவிழாவை 10 நாள்கள் அம்மனுக்கு உகந்த நாட்களாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நட்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விரதமிருந்து தெய்வங்கள், மனிதன், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றை சிறிய சிலை பொம்மைகளாக வடிவமைத்து கொலுவாக அடுக்கி வைத்து நாள்தோறும் பூஜை செய்வது வழக்கமாகும். அதே போல கோவில்களிலும் கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்பிரகாரத்தில் 5 அடுக்குகள் கொண்ட செட்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரிசையாக 5 இடங்களில் வண்ண வண்ண சுவாமி, அம்மன், தேச தலைவர்கள் உள்ளிட்ட பொம்மைகளால் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய சிலை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 மகாதேவர் சன்னிதி முன்பு தெப்பம் வைத்து முளைப்பாரியும் வளர்க்கப்படுகிறது. பக்தர்கள் கொலுவை பார்த்து வழிபடும் வகையில் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், ‘மாறி வருகின்ற இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், 'மாறி வருகின்ற இந்தியா' என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் வடிவேல் அர்ஜூனன், ஹரியானா மத்திய பல்கலைக்கழக பேராசிரியை லாங்காய் ஹிமானிங்கன், ஹிமாசலப்பிரதேச அரசு கல்லூரி பேராசிரியர் சந்தீப்குமார் தாக்கர், மும்பை எஸ்.என்.டீ.டி. கலை மற்றும் எஸ்.சி.பி. வணிகவியல் பெண்கள் கல்லூரி பேராசிரியர் கிஷோர் காதம் ஆகியோர் பேசினர். முன்னதாக பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கணேசன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். கருத்தரங்க செயலர் அசோகன், கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். நிறைவு நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் பேசினார். இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் 203 பேர் பங்கேற்றனர். இதில் 59 மாணவர்கள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முதுகலை பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
    • வடிகால் கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு வரு கிறது. எனவே உடனடியாக அவற்றை சரி செய்து சுகாதாரத்தை பேண வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் சிறுவர் பூங்கா அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணியிடம் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் நகராட்சி யாக தரம் உயர்த்த ப்பட்டு ள்ளது. மேலும் கோவில் நகர மாக இருப்பதாலும் குழந்தைகள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதி யாக சிறப்பு அம்சங்களுடன் சிறுவர் பூங்கா அமைத்து அதில் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் நடை பயிற்சி செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும், நகராட்சி சார்பில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுக ளிலும் குடிநீர் வரும் நேரத்தை கரும்பலகை வைத்து அதன் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும், திருச்செந்தூர் மேல்பகுதியில் தோப்பூரில் இருந்து ஜீவா நகர் வரை செல்லும் ஆவுடையார் குளம் வடிநீர் கால்வாயில் கழிவுநீர் கலக்கப்பட்டும், குப்பைகள் கொட்டப்பட்டும் வருகிறது.

    அந்த பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செ ந்தூர் நகராட்சி அலுவலகம் ஆகியவைகள் உள்ளன. இதனால் வடிகால் கால்வா யில் கொ சுக்கள் உற்பத்தியாகி கொசு தொ ல்லை மற்றும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு வரு கிறது. எனவே உடன டியாக அவற்றை சரி செய்து சுகா தாரத்தை பேண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

    • ஆதித்தனார் கல்லூரியில் "பனை வளம் காப்போம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் சார்பாக பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட அணி 43 மற்றும் 44-வது அணிகளின் சார்பில் "பனை வளம் காப்போம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணிதிட்ட அணி எண் 44-ன் திட்ட அலுவலர் சத்தியலெட்சுமி வரவேற்று பேசினார்.

    இதில் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனர் டாக்டர். கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை மரங்களின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் சார்பாக பனைவிதைகள் விதைக்கப்பட்டது. நாட்டு நலப்பணிதிட்ட அணி எண் 43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின்படி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • ஆடுகள் பகலில் அந்த பகுதியில் மேய்ச்சல் முடித்து நேற்று முன்தினம் இரவு வீட்டு காம்பவுண்டில் உள்ள பட்டியில் அடைத்திருந்தார்.
    • இதே போல் இவரது பட்டியில் உள்ள ஆடுகள் பலமுறை திருட்டு போய் உள்ளது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சோலைகுடியிருப்பை சேர்ந்தவர் ஜெபராஜ் தனசிங் (வயது57). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக 25ஆடுகள் உள்ளன.இந்த ஆடுகள் பகலில் அந்த பகுதியில் மேய்ச்சல் முடித்து நேற்று முன்தினம் இரவு வீட்டு காம்பவுண்டில் உள்ள பட்டியில் அடைத்திருந்தார். அதிகாலையில் ஜெபராஜ் தனசிங் எழுந்து பட்டியில் உள்ள ஆடுகளை பார்க்க சென்றார்.அப்போது அங்கு பட்டியில் இருந்த 11ஆடுகளை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் மதிப்பு சுமார் ரூ. 70ஆயிரம் இருக்கும். இதே போல் இவரது பட்டியில் உள்ள ஆடுகள் பலமுறை திருட்டு போய் உள்ளது. தொடர்ந்து மர்ம நபர் ஆடுகளை திருடி செல்வதாக புகார் செய்துள்ளார்.

    இதே போல் இவரது தோட்டத்தில் நிறுத்தி இருந்த மண்ணை சமப்படுத்தும் கருவி மற்றும் இரும்பு சக்கரம் ஆகியவற்றையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதை கண்டுபிடித்து தருமாறும் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.35ஆயிரம் இருக்கும்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆடுகள் மற்றும் மண்ணை சமப்படுத்தும் கருவியை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கி 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பானு, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன், வெள்ளூர் பஞ்சாயத்து தலைவர் குமார் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.
    • சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளை முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அணி எண்.45, சாகசக்கலை மன்றம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.

    இந்த பயிலரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பே.மருதையா பாண்டியன் வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளை முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் பேராசிரியர்கள் உமா ஜெயந்தி, கருப்பசாமி, திலீப்குமார், முதுகலை பொருளியல் மாணவர்கள் செல்வம், ஞானஅபினாஷ், மாணவச்செயலாளர்கள் சுடலைமணி, சஞ்சய் மற்றும் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சாகசக்கலை மன்ற இயக்குனர் சிவஇளங்கோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர், சாகசக்கலைமன்ற இயக்குனர் மற்றும் மாணவர்கள் ெசய்திருந்தனர்.

    மேலும், கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்றம் சார்பாக சிந்தனை திறனும் மாணவர்களின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. பொருளியல் மன்ற துணைத்தலைவர் பேராசிரியர் சிவஇளங்கோ வரவேற்று பேசினார். ரெக்காரியோ சொத்துக்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவன நெல்லை மண்டல தலைவர் தேவபிரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தினமும் செய்தித்தாள் வாசிப்பதன் அவசியத்தையும், வேைலவாய்ப்பிற்கு தேவையான அனைத்து திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மாணவச் செயலாளர் சாமுவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மருதையா பாண்டியன், உமாஜெயந்தி மற்றும் மூன்றாமாண்டு பொருளியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி, பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள், பொருளியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    • 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் 28-ம் ஆண்டு பயின்றோர் கழக விழா நடந்தது. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ஆல்வின் வரவேற்று பேசினார். பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    கல்லூரி முன்னாள் மாணவியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி உயிரியல் துறை உதவி பேராசிரியையுமான காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கலை மற்றும் நடன உதவி பேராசிரியை சுஜாவதி மற்றும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். பயின்றோர் கழக பேரவை செயலாளர் தேவதாசன் பூமன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்களாக ஆல்வின், உமா செயலாற்றினர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • 12-ம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இயற்பியல் துறை மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சி வகுப்பில் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபைதார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 77 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இயற்பியலை இலகுவான முறையில் ஆர்வமுடன் கற்கும் விதமாக கடந்த 2 நாட்களாக செய்முறை மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 12-ம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இயற்பியல் துறை மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபைதார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 77 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பின்னர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவிற்கு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் ஜோ ஜாக்குலின் அமலியா வரவேற்று பேசினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர்கள் கற்பகவல்லி, வசுமதி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

    ×