search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanga tamilselvan"

    தவறு செய்யாத தங்களுக்கு தகுதி நீக்க தண்டனையா? என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். #18mlascaseverdict #ThangaTamilselvan
    சென்னை:

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

    முதலில் கோர்ட்டு தீர்ப்பை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுகிறேன். அடுத்ததாக மறைந்த எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் வக்கீல், நீதிபதி குறித்து கருத்து கேட்டபோது 25 வருடமாக பொய்யே பேசி வாதாடிய வக்கீல் நீதிபதியானால் பொய்யை தவிர எதை சொல்வார் என்று சொல்வார்.

    இப்போது நானும் அதையே நினைத்து பார்க்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. கொறடா உத்தரவையும் மீறவில்லை. தவறு செய்யாத நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம். ஆனால் தவறு செய்த ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் துணை முதல்-அமைச்சராகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். நீதித்துறை தடம் மாறினால் நாடு கெட்டு போகும்.


    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? அல்லது மக்களை சந்திப்பதா? என்பது குறித்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் இன்று இரவு மதுரையில் ஆலோசனை நடத்துகிறோம். இது பற்றி அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18mlascaseverdict #ThangaTamilselvan
    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் முதலமைச்சரை மாற்றி விட்டு ஆட்சியை தொடருவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase #ThangaTamilselvan
    தென்காசி:

    தமிழக சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் திடீரென அங்கிருந்து ஐந்தருவியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கிசுப்பையாவின் மற்றொரு சொகுசு விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஐந்தருவியில் உள்ள விடுதியில் தங்கியுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இங்கு தான் இருப்போம். தீர்ப்பு வந்த பின்னர் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனை சந்திப்போம். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து வருகிற 10-ந்தேதி ஆண்டிப்பட்டி தொகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து மற்ற 16 தொகுதிகளிலும் நடக்கும். இறுதியாக ஆர்.கே. நகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். எங்களுக்கு ஆதரவாக மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள். வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் சில அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றிவிட்டு புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுத்து ஆட்சியை தொடருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase #ThangaTamilselvan
    ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் பெரிய மனிதர் ஆகிவிடலாம் என்பது தற்போது நாகரீகம் ஆகிவிட்டது என அமைச்சர் ஓஎஸ் மணியன் கூறியுள்ளார். #OSManian
    நெல்லை:

    தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை நெல்லை வந்தார். நெல்லை குறுக்குத்துறையில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழா வழிபாட்டில் அவர் கலந்துகொண்டார். பின்பு அவர் தாமிரபரணியில் புனித நீராடினார். இதன்பிறகு ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் பெரிய மனிதர் ஆகிவிடலாம் என்பது தற்போது நாகரீகம் ஆகிவிட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டும் அதுபோன்றதுதான். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பதவி விலக வேண்டும் என்றால் எவரும் பதவியில் இருக்க முடியாது.

    எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்புக்கு முன்பே குற்றாலம் செல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #OSManian
    அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியானதற்கும், தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Jayakumar #ThangaTamilSelvan #JayakumarAudio
    தென்காசி:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பழைய குற்றாலத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடத்தினோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் எந்தவித நலத்திட்ட பணிகளும் நடைபெறவில்லை. இதனை கண்டித்து அந்தந்த தொகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வருவதாக தெரிகிறது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வரும் என எதிர் பார்க்கிறோம். அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு நீராடுவதன் மூலம் இறைவன் அருள்புரிந்து எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என கருதுகிறோம். ஆகவே நாங்கள் அனைவரும் பாபநாசத்திற்கு சென்று நீராடுகிறோம்.

    புஷ்கர விழாவில் பங்கேற்று நீராடுவதற்காகவே குற்றாலம் வந்துள்ளோம். பாபநாசத்தில் நீராடிவிட்டு இன்றும், நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வெடுத்து விட்டு நாளை மறுநாள் ஊருக்கு திரும்பி செல்கிறோம்.



    அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியானதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக எங்கள் மீது புகார் கூறுகிறார்.

    தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் அந்த ஆடியோவை மாபியா கும்பல் வெளியிட்டுள்ளது என ஜெயக்குமார் கூறியிருக்கிறார். ஆனால் அந்த ஆடியோவை அவருடைய மாமியார் கும்பல் தான் வெளியிட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரின் மீது முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கிறார். ஆகவே அதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுத்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

    இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Jayakumar #ThangaTamilSelvan #JayakumarAudio

    முதல்வர் மீதான சி.பி.ஐ. வழக்குக்கு எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ThangaTamilselvan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. வும், கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ் செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    டி.டி.வி. தினகரன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஆர்.கே. தொகுதியில் நின்று வென்று காட்டுவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். டி.டி.வி. தினகரன் தான் ஏற்கனவே ஆர்.கே. தொகுதியில் நின்று வென்று எம்.எல்.ஏ. ஆகி விட்டார். பின்னர் எதற்காக மீண்டும் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த வேண்டும்.

    அமைச்சர் ஜெயக்குமார் உள்பட தமிழக அமைச்சர்கள் மூளை குழம்பி போய் உள்ளனர். டி.டி.வி தினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும். வர இருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலிலே போட்டியிட்டால் 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். நிச்சயம் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் இல்லை. தமிழகத்தில் ரெட் அலர்ட் மூலம் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தமிழக அரசு ரெட் அலர்ட் எச்சரிக்கை விட்டுள்ளது. தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. மட்டுமல்ல, தி.மு.க.வும் பயந்துள்ளது.

    முதல்வர் மீதான சி.பி.ஐ. வழக்குக்கு எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் டி.டி.வி. தினகரனை சந்தித்தார் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.


    இந்த நிலையில் வெளிப்படையாகவே தினகரனை சந்தித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்ட பின்னரும் அவர் மீது ஏன் அ.தி.மு.க.வினர் நடவடிக்கை எடுக்கவில்லை. தினகரனை சந்தித்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை இறக்கி விட்டு, தினகரனை முதலமைச்சர் ஆக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி எதுவும் செயல்படுத்தப்படவில்லை. புஷ்கர விழா நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்காக சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கீடு மக்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை.

    தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி வெறும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோரை மட்டுமே கொண்டு நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பு தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ThangaTamilselvan
    எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு கேட்டார் என டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். #OPS #EPS #TTVDhinakaran
    மதுரை:

    டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறினார். 

    ஒரு வாரத்திற்கு முன்பு, டிடிவி தினகரனின் நண்பரிடம் பன்னீர் செல்வம் நேரம் கேட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக, பேச வேண்டும் என நேரம் கேட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    மேலும், கடந்த ஆண்டும் தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு நடைபெற்ற இடத்தில், சிசிடிவி கேமராக்கள் இருந்திருக்கும் என்றும், உரிய நேரத்தில் ஆதாரத்தை கொடுப்போம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
    டி.டி.வி.தினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #TTVDhinakaran #ThangaTamilselvan

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருதாச்சலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 4 பேருக்கு சபாநாயகர் நோட்டுஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதற்கான காரணம் பற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவது ஆளும் கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    அதன்பிறகும் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் இருப்பது இவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. 4 பேரும் தினகரனை விட்டு பிரியமாட்டார்கள் என்பதால் இவர்களை பயமுறுத்தி எடப்பாடி பழனிசாமி பக்கம் இழுப்பதற்காகவே நோட்டீஸ் அனுப்ப போவதாக மிரட்டுகிறார்.


    தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இரு பக்கமும் ‘பேலன்ஸ்’ செய்வதால் அவர்களை கொறடா கண்டு கொள்ளவில்லை.

    இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த விசயத்தில் சர்வாதிகாரமாக எடுக்கும் முடிவுகள் சபாநாயகருக்கு கெட்ட பெயரைதான் ஏற்படுத்தும்.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வராததால் விடை தெரியாமல் தவிக்கிறோம். இப்போது இந்த வரிசையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களா? என்று நினைக்கிறபோது சினிமாவில் வரும் வசனம் போல் மறுபடியும் முதுலில் இருந்தா? என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #ThangaTamilselvan

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வருகிற 7-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்ட விழாவிற்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் 7-ந்தேதி நடைபெறும் கூட்டத்திற்கு டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அ.ம.மு.க. பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள். தொண்டர்கள் ஆதரவு, மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. இடைத்தேர்தல் நடந்தால் நல்லது. ஆனால் பாராளுமன்ற தேர்தலோடு தான் நடத்துவார்கள்.


    ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என விசாரணை கமி‌ஷன் அமைத்தனர். 1 வருடம் ஆகியும் விசாரணை நிறைவு பெறவில்லை. இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. டெபாசிட் காலியாகும்.

    இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கேட்டுள்ளோம். அது இல்லை என்றால் பேனா, தொப்பி உள்பட எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அணி காணாமல் போய் விடும் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami #Thiruparankundram
    மதுரை:

    மதுரை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இளைஞரணி சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இளைஞரணி செயலாளர் பிரதீப்ராம்குமார் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர்  தங்க தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஜெயபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதி படைத்தவர் சசிகலா. அவரது முயற்சியால்தான் தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திடம் சேர்ந்துகொண்டு கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்.

    மத்திய அரசின் அடிமைகளாக இருந்து கொண்டு தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் பா.ஜனதாவுக்கு ஜால்ரா அடிக்கும் அரசாக எடப்பாடி அரசு திகழ்ந்து வருகிறது. இந்த ஆட்சி மீது அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கோபம் கொண்டுள்ளனர்.


    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கமி‌ஷன் அடிக்கும் திட்டங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதற்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீரவேண்டும். அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். ஆனால் சிலர் பதவி சுகத்தில் இருந்து கொண்டு எங்களை விமர்சிக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தினகரன் அறிவிக்கும் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணி காணாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami #Thiruparankundram
    முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள் என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #ThangaTamilselvan #Edappadipalaniswami #ADMK
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களான நாங்கள் நட்புக்கு மதிப்பு கொடுத்து டி.டிவி.தினகரன் அணியில் இருக்கிறோம். முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள். ஊழல் வாதிகள். அனைத்து அமைச்சர்களும் ஊழல்களில் ஜொலிக்கின்றனர். ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் வீட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளார்கள்.


    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 3 மாதத்தில் முடியும் என்றனர். தற்போது கமி‌ஷன் அமைக்கப்பட்டு 1 வருடமாகி விட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மேற்கண்டவாறு தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #ThangaTamilselvan #Edappadipalaniswami #ADMK
    அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார். #ThangaTamilselvan #TNMinister #KadamburRaju
    தேனி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.வில் இணைய தூதுவிடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாரூர், இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும். அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் விட்டேன்.


    இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ குழம்பி போய் நான் அ.தி.மு.க.வில் இணைய தூது விடுவதாக கூறுகிறார். அ.தி.மு.க. என்பது மொட்டை கிணறு. மொட்டைக்கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம்.

    அ.தி.மு.க.வில் யாருக்கும் தலைமை பண்பு கிடையாது. அதனால் கட்சியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பது இல்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவர்களது இஷ்டத்துக்கு உளறி வருகிறார்கள்.

    ஆந்திராவில் பெட்ரோல்- டீசல் விலையில் ரூ. 2 குறைத்தது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும். மத்திய அரசிடம் வலியுறுத்தி விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசுக்கு துணிச்சல் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #TNMinister #KadamburRaju
    தங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில் அ.தி.மு.க.வினர் தற்போதே தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும். அதற்காக நிர்வாகிகள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கடந்த முறை பெற்ற வாக்கைவிட கூடுதல் வாக்குகளை நாம்பெற வேண்டும் என்றார்.

    அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த ஏ.கே.போஸ் சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். ஆனாலும் மக்கள் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தந்தார்கள். இப்போது அம்மா நம்மோடு இல்லை என்றாலும் விண்ணில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டிருக்கிறார். அவரது ஆசியால் அ.தி.மு.க. மீண்டும் திருப்பரங்குன்றத்தில் வெற்றி வாகைசூடும்.

    நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சகோதரர்கள் எப்படியாவது திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆர்.கே.நகரில் அசந்ததுபோல திருப்பரங்குன்றத்தில் அசரமாட்டோம்.


    தங்கத்தமிழ்செல்வன் 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை பார்த்து சவால் விடுகிறார். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நாம் (அ.தி.மு.க. வினர்) அனைவரும் அவர்கள் பக்கம் வர தயாரா? என கேட்கிறார். மேலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டால் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடுவதாகவும் கூறுகிறார். அவர் இருக்கும் இடம் அப்படி. அவர் நம்மை பார்த்து சவால் விடவில்லை என்றால் அவர் அங்கே இருக்க முடியாது.

    தங்கத்தமிழ்செல்வனின் சவாலை நாங்களும் ஏற்கிறோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறப்போவது உறுதி. எனவே அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு இங்கே வந்து சேருவதைவிட தேர்தலுக்கு முன்பே தங்கத்தமிழ்செல்வன் போன்றவர்கள் வந்து சேர்ந்து விட்டால் அவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும்.

    இந்த இயக்கம் ஏழை- எளிய மக்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம்.

    இந்த இயக்கத்தை எவராலும் வீழ்த்தமுடியாது. அப்படி வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள். இதுதான் வரலாறு.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan
    ×