search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalapathy Vijay"

    கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்? என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார். #KarthikSubbaraj
    ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் தங்களுக்கென ஒரு இமேஜ் வளர்த்திருக்கின்றனர். அவர்களை இயக்கும் இயக்குனர்களும் அந்தந்த ஹீரோக்களுக்கு ஏற்பவே கதை தயார் செய்கின்றனர்.

    விஜய்சேதுபதி நடித்த பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார்.



    பொங்கலையொட்டி வெளியான இந்த படம் ஹிட்டானது. இந்நிலையில் கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, ‘என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்?’ என்றதற்கு பதில் அளித்தார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, ’கமலை வைத்து வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தை இயக்குவேன். விஜய்யை வைத்து கேங்க்ஸ்டர் படமும், அஜித்தை வைத்து காமெடி படமும் இயக்குவேன்’ என்றார். கார்த்திக் சுப்புராஜின் இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    கேரளாவில் மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று எம்.எல்.ஏ பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Vijay #ThalapathyVijay #Mohanlal #Mammootty
    தமிழ் நடிகரான விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக கேரளாவில் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டிக்கு இணையான வரவேற்பு விஜய் படங்களுக்கும் உண்டு.

    தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படத்தின்போது விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட் அவுட்டை கேரளாவில் உள்ள கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் வைத்தனர்.

    கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்து வருகின்றனர்.

    பிறமொழி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து கேரளாவில் அதிகமான வரவேற்பு இருப்பதை கேரள திரையுலகினர் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில் கேரளாவில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவில் மலையாள நடிகர்களைவிட தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து விமர்சிக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த பூஞ்சார் தொகுதி எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ், ‘‘மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.சி.ஜார்ஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல நடிகரின் மகள் நடிக்க இருக்கிறார். #Vijay #Thalapathy63 #ThalapathyVijay
    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரியா அட்லி விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்களாக பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும் பொங்கல் பரிசு பைகளையும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் வழங்கி கவுரவப்படுத்தினர்.

    பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி பேசியது, ‘பத்திரிகையாளர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த விழாவில் சினிமாவில் கடை நிலை ஊழியர்களை அழைத்து கவுரவம் செய்வது மிக சிறப்பு. அந்த நிகழ்வில் என்னை அழைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.



    நடிகர் ரோபோ ஷங்கர் பேசும்போது, ‘பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து இது போன்ற விழாவை நடத்துவது ரொம்ப சிறப்பு. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திரைத்துறையில் கடை நிலை ஊழியர்களாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களை அழைத்து கவுரவம் செய்திருப்பது.

    நாங்க ஷூட்டிங் 9 மணிக்கு என்றால் ஸ்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் போய் மேக்கப் போட்டு ரெடியானா போதும். ஆனா புரொடக்‌ஷன்ல இருப்பவர்கள் அதிகாலையிலயே ஸ்பாட்டுக்கு வந்து வேலைய ஆரம்பிச்சிடனும். ஏன்னா நடிக்கிறவங்க வந்ததும் காபி இருக்கான்னு கேட்ட அது ரெடியா இருக்கும். அதே மாதிரி ஷூட்டிங் ராத்திரி எத்தனை மணிக்கு முடிஞ்சாலும் எல்லாத்தையும் சுத்தம் பண்ணி கொண்டு போய் சேர்க்க நடு ராத்திரி ஆகிடும். மறு நாள் அதிகாலை மறுபடியும் ஷூட்டிங் ஸ்பாட் வரணும். இடைப்பட்ட சில மணி நேரம் தான் அவங்க தூங்கும் நேரம்.

    இது போல உள்ளவர்களை அழைத்து கவுரவித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்துக்கு நன்றி. இந்த நல்ல விழாவில் ஒரு நல்ல தகவல் இயக்குனர் அட்லி அவர்கள் அனுமதியோடு சொல்றேன்.



    தளபதி விஜய் படத்தில் நடிக்கப் போறவங்க தேர்வு நடந்து வருது. 
    அதில் என் மகள் நடிக்க தேர்வாகி இருக்கிறார். முன்னாடியே பல வாய்ப்புகள் வந்த போது படிப்பு முக்கியம் என்று தவிர்த்தேன். 
    ஆனால் அட்லி - விஜய் கூட்டணியில் நடிக்க வாய்ப்பு வந்தால் விட முடியுமா. அதனால எப்ப தேதி கேப்பார்னு காத்திருக்கிறேன்’ என்றார்.

    சிறப்பு விருந்தினர்களுக்கு சங்க தலைவர் கவிதா நினைவு பரிசு வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் சஞ்சய் நன்றி கூறினார்.
    அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சியாளர் மூலம் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #Vijay #Vijay63
    நடிகர் விஜய், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    விளையாட்டு தொடர்பான இந்த படத்தில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். எனவே, பிரத்யேக பயிற்சியாளர் மூலம் அவரது உடல் அமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 



    கலை இயக்குநர் முத்துராஜ், படத்துக்கான செட் வேலைகளைத் தொடங்கிவிட்டார். வரும் 20ம் தேதி பூஜை போடப்பட்டு, 21ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ வரிசையில், இதுவும் தீபாவளிக்கு ரிலீசாகிறது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படம் விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். 

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 63’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 



    இந்த படத்தின் பூஜை ஜனவரி 20ம் தேதியும், படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதியும் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். #Vijay #ThalapathyVijay #JasonSanjay
    நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த நிலையில் சஞ்சய் இயக்கிய குறும்படம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது. ஜங்‌ஷன் என்று பெயரிடப்பட்ட அந்த குறும்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக அமைந்துள்ளது. தன்னை ராக்கிங் செய்யும் ரோகித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன்.

    ரோகித் வருகைக்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோகித் மீது அந்த வழியாக வந்த கார் மோதவே ஜேசன் அதிர்ச்சி அடைகிறார்.

    காரில் இருந்து இறங்கிய வாலிபர் கிரிக்கெட் மட்டையையும், ஜேசனையும் மாறி மாறி பார்த்தபோது தாக்கப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றும் நடக்கவில்லை. ரோகித்தை காப்பாற்றாமல் கிளம்பிச் சென்றுவிடுகிறார்.

    அந்த நபர் கிளம்பிய பிறகு ரோகித் அருகே வந்து பார்க்கும் ஜேசன் அதிர்ச்சியில் உறைகிறார். ஜேசன் சஞ்சயின் நண்பர்கள் இருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வது போன்று குறும்படம் முடிகிறது. குறும்படத்தில் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகமாக பேசுகிறார்கள். இந்த குறும்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
    ஐஏஆர்ஏ என்ற நிறுவனம் நடத்திய சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் நேரில் சென்று பெற்றிருக்கிறார். #Vijay #IARA #Mersal
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் பல்வேறு சாதனைகளை படைத்தது. 

    இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். 



    இதற்கான விருது விழா லண்டனில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் நேரில் கலந்துக் கொண்டு விருதை பெற்றிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

    இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.



    தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். #Sarkar
    சர்கார் திரைப்படம் தமிழ் நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. #Sarkar #Vijay #ThalapathyVijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது. விஜய் சிகரெட் பிடிக்கும் தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு தமிழக அரசின் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்தது. 

    இந்த புகைப்படம் புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றும், எனவே அதை அகற்ற வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் விஜய்யின் புகைப்பிடிக்கும் தோற்ற படத்தை ட்விட்டரில் இருந்து பட நிறுவனம் நீக்கியது. படம் திரைக்கு வந்த பிறகு அரசை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. 

    பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து தியேட்டர்களில் திரையிட்டு உள்ளனர். இப்போது கேரளாவிலும் சர்கார் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
    சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Thalapathy63
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்க இருக்கிறார் என்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் அதை உறுதி செய்திருக்கிறார்கள்.



    ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தில் மற்ற நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்சனை முடிந்தது என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #Sarkar #Vijay
    நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது.

    இப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரை அரங்குகளின் வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. 

    இதையடுத்து சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர்.



    காட்சிகள் நீக்கியதால் சர்கார் பிரச்சனை முடிந்தது என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 
    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கையில் நீக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay
    நடிகர் விஜய் நடித்த “சர்கார்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது.

    “சர்கார்” திரைப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரான “கோமளவல்லி” எனும் பெயர் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.

    மேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்றும், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட இலவச பொருட்களை அள்ளிப் போட்டு தீ வைப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றதால் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



    திரை அரங்குகளின் வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. நடிகர் விஜய்யின் கட்-அவுட்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாது காப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். 
    இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர். #Sarkar #Vijay
    ×