என் மலர்
சினிமா

குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். #Vijay #ThalapathyVijay #JasonSanjay
நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கிய குறும்படம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது. ஜங்ஷன் என்று பெயரிடப்பட்ட அந்த குறும்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக அமைந்துள்ளது. தன்னை ராக்கிங் செய்யும் ரோகித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன்.
ரோகித் வருகைக்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோகித் மீது அந்த வழியாக வந்த கார் மோதவே ஜேசன் அதிர்ச்சி அடைகிறார்.
காரில் இருந்து இறங்கிய வாலிபர் கிரிக்கெட் மட்டையையும், ஜேசனையும் மாறி மாறி பார்த்தபோது தாக்கப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றும் நடக்கவில்லை. ரோகித்தை காப்பாற்றாமல் கிளம்பிச் சென்றுவிடுகிறார்.
அந்த நபர் கிளம்பிய பிறகு ரோகித் அருகே வந்து பார்க்கும் ஜேசன் அதிர்ச்சியில் உறைகிறார். ஜேசன் சஞ்சயின் நண்பர்கள் இருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வது போன்று குறும்படம் முடிகிறது. குறும்படத்தில் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகமாக பேசுகிறார்கள். இந்த குறும்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
Next Story






