search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana Assembly election"

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற நவம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகும்.

    தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நிஷமாபாத் மாவட்டம் அர்மூர் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக அவர் வேனில் சென்றார் அப்போது, வேன் டிரைவர் திடீரென பிரேக்கை பிடித்தார்.

    இதை எதிர்பாராத அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்களின் சிலர் கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.
    • கல்வகுர்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய கட்சிகள் அம்மாநிலத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு நடைபெற்ற பிரசாரா கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் குறித்த பா.ஜ.க. அறிவிப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பொது மக்களிடையே பேசிய அவர், தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்து இருந்தார்.

    தெலுங்கானா மாநிலத்தின் கல்வகுர்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, "நீங்கள் இங்கு இரண்டு சதவீதம் வாக்குகளைத் தான் பெற போகின்றீர்கள். அப்புறம் எப்படி உங்களால் முதலமைச்சரை உருவாக்க முடியும்? உங்களால் அமெரிக்காவில் அதிபரையோ அல்லது தெலுங்கானாவில் முதலமைச்சரையோ உருவாக்க முடியாது," என்று தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி, சென்னூர் தொகுதியில் தனது மகன் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதனால் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதையடுத்து, அவர் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார்.

    • வாரங்கல் ரமணா பேட்டையை சேர்ந்த லயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
    • பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா தலைவர் பிரவீன் குமார் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    இதில் முதல் முறையாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வாரங்கல் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திருநங்கை லயா என்பவர் போட்டியிடுகிறார்.

    வாரங்கல் ரமணா பேட்டையை சேர்ந்த லயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள கால் சென்டரில் ஆபரேட்டராக பணியாற்றினார்.

    அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி உள்ளார். தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த அவர் கட்சியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் . மேலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா தலைவர் பிரவீன் குமார் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து லயாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

    அவர் வீடு வீடாகச் சென்று பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளை விளக்கி கூறி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    தெலுங்கானாவில் முதன்முறையாக திருநங்கை போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கி உள்ளது.
    • வருகிற 3-ந்தேதி அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது.

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கு ராஷ்ட்ர சமிதி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கி உள்ளது.

    தமிழகத்தில் இருந்து 7 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு 7 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்களை தேர்வு செய்து நியமித்துள்ளார்கள்.

    ஜகீராபாத் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் முன்னாள் மத்திய சென்னை மாவட்ட தலைவருமான ரங்கபாஷ்யம் கம்மாரெட்டி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு அந்தோல் தொகுதி, முகமது அலிசமீர் பன்ஸ்வாடா தொகுதி, அன்பு வீரமணி ஜுக்கல் தொகுதி, சலீம் சேட் நாராயண்கட் தொகுதி, மோகன் வெங்கடேசன் எல்லா ரெட்டி தொகுதி, பழனியப்பன் ஜகீராபாத் தொகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    வருகிற 3-ந்தேதி அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது. அதை தொடர்ந்து தேர்தல் வரை தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.

    • தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
    • கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் முதல் கட்டமாக 55 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பாரத் ராஷ்டிரிய சமீதி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மும்முனை போட்டி நிலவு கிறது. இதேபோல ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் களத்தில் நிற்கிறது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த 15-ம் தேதி வெளியிட்டது. 55 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    பாரத் ராஷ்ட்ரிய சமீதி அனைத்து தொகுதிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து இருந்தது. பா.ஜ.க. 52 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதில் 45 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது. அவர் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அசாருதீன் ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. (2009- 2014) ஆகி இருந்தார்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவரான அவருக்கு தற்போது எம்.எல்.ஏ. தேர்தலில் சீட் கிடைத்துள்ளது.

    முன்னாள் எம்.பி.க்கள் மது கவுட் யாக்ஷி, பொன்னம் பிரபாகர், சீனிவாஸ், மறைந்த நாட்டுப்புற பாடகர் கதாரின் மகள் வெண்ணேலா ஆகியோருக்கும் தேர்தலில் டிக்கெட் கிடைத்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தனியார் டி.வி. நேரலை விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தியது. இதில் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ. விவேகானந்தர் மற்றும் பா.ஜ.க வேட்பாளரான குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் பங்கேற்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த விவேகானந்தர் எம்.எல்.ஏ, பா.ஜ.க வேட்பாளரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் கையால் குத்தினார்.

    இதனை நேரடியாக பார்த்த பல்லாயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி கூறுகையில், விவேகானந்தர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இல்லை என்றால் பா.ஜ.க. சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது.
    • பா.ஜ.க. முதல் கட்டமாக 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

    ஆளும் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

    தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாஜகவும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. போத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி சோயம் பாபு ராவும், அரவிந்த் தர்மபுரி கொரூட்லா தொகுதியிலும், சஞ்சய் குமார் பண்டி கரிம் நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவி வருகிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்

    இதுதொடர்பாக கவிதா கூறுகையில், ராகுல் காந்தி காட்டு சிங்கம் அல்ல; அவர் ஒரு காகிதப் புலி. ஏனென்றால், யார், எதை எழுதி கொடுத்தாலும், அதைத்தான் படித்துவிட்டுப் போவார். உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார். இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள் அல்லது கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

    • 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலுக்காக மட்டுமே வருபவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கவிதா கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று தெலுங்கானா வருகிறார்கள். அவர்கள் உத்தரவாதம் அளித்து பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவரை தேர்தல் காந்தி என்றே அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும்.
    • ரூ.400 விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சித் தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.

    'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்.

    சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக அதிகரிக்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.4 ஆயிரத்து 16-ல் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்படும்.

    விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    நிச்சயமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தனிநபர் வருமானம், மின்சார பயன்பாடு ஆகியவற்றில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    • மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்திலிருந்து 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் புதிதாக உருவானது.

    அப்போது மாநில பிரிவினைக்கு பெரும் பங்கு வகித்த சந்திரசேகர ராவ் கட்சி 63 இடங்களை கைபற்றி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு பின்னர் 2018-ம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களை பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    இந்த நிலையில் நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார்.

    அவருக்கு ராசியான இடமாக கருதப்படும் ஹீஸ்னாபபாத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை வருகிற 15-ந்தேதி தொடங்குகிறார். அன்று காலை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

    வழக்கம் போல காமரெட்டி பகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னதாக கோனை பள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி வேட்பாளர்களுக்கு பி-படிவங்களையும் அவர் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.

    இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×