என் மலர்
இந்தியா

வாய்ப்பில்லை ராஜா.. தெலுங்கானா முதலமைச்சர் விவகாரத்தில் பா.ஜ.க.-வுக்கு ராகுல் காந்தி பதிலடி
- பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.
- கல்வகுர்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில் இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய கட்சிகள் அம்மாநிலத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு நடைபெற்ற பிரசாரா கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் குறித்த பா.ஜ.க. அறிவிப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பொது மக்களிடையே பேசிய அவர், தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்து இருந்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் கல்வகுர்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, "நீங்கள் இங்கு இரண்டு சதவீதம் வாக்குகளைத் தான் பெற போகின்றீர்கள். அப்புறம் எப்படி உங்களால் முதலமைச்சரை உருவாக்க முடியும்? உங்களால் அமெரிக்காவில் அதிபரையோ அல்லது தெலுங்கானாவில் முதலமைச்சரையோ உருவாக்க முடியாது," என்று தெரிவித்தார்.






