search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை"

    சேலம் அஸ்தம்பட்டி, சின்னபுதூரில் ஓட்டல் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி சின்ன புதூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள  ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்?  என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    ஒட்டன்சத்திரத்தில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்த வங்கி மேலாளரின் மனைவி பலியானார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஒட்டன்சத்திரம்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(59). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மாபட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமாகோமதி(55). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஆத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் தான் ஓய்வுபெற்ற பணத்தில் கடனை கட்டினார். இருந்தபோதும் கடன் முழுவதும் அடையவில்லை. மேலும் இவருக்கு டயாலிசிஸ் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துராமலிங்கம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி உணவில் விஷம் கலந்து கணவன்-மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் சாப்பிட்டனர். மேலும் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்களுக்கும் அதனை கொடுத்தனர். இதில் ஒரு நாய் உயிரிழந்தது. மற்றொரு நாய் குரைத்துக்கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்தனர். கதவு திறக்கப்படாமல் இருந்ததால் ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே உமாகோமதி இறந்த நிலையில் கிடந்தார். முத்துராமலிங்கம் மற்றும் அவரது மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் உமாகோமதியின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் வீட்டில் இருந்த செல்போன், டைரி உள்ளிட்டவைகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிலர்மலை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது27), கட்டிட தொழிலாளி.இவரது மனைவி சூர்யா (23). பாபு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பாபுவின் சொந்த ஊரான பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளைத்தூரில் தனது பெரியப்பா வீடு அருகே வாடகை வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தனர். 

    கடந்த 1-ந் தேதி பாபுவின் மனைவி சூர்யா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது தனது கணவர் வீட்டில் துப்பட்டாவால் தொங்கிக்கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அவரை  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தகவல்‌ அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இலங்கை அகதிகள் முகாமில் பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜனின் மனைவி வனிதா கணவரிடம்  கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இதனால் மனமுடைந்த ராஜன் கடந்த 1-ந் தேதி அதிக அளவில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை உடைத்து  கழுத்தில் குத்தி உள்ளார். 

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த  ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை பகுதியில் குடும்ப பிரச்சினையால் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    மதுரை

    மதுரை பழங்காநத்தம், முத்துமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வைரகண்ணன் மனைவி நாகசித்ரா (வயது 22). இவருக்கும் கணவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகசித்ரா சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும்  அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அலங்காநல்லூர் அடுத்த கல்லானை, ஆதித்தனார் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). இவரது மனைவி ரேவதி. பிரவீன்குமார் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

    இதனைத்தொடர்ந்து அவர் நேற்று கூடல்புதூருக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் கூடல்நகர் பாலம் அடியில் விஷம் குடித்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (62). இவருக்கு வயோதிகம் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மூர்த்தி சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி எஸ்.கே. நகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது89). இவர் அப்பகுதியில் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
     
    இவரது மகன் வெங்கடேசன் (59)  தன் மனைவி இறந்துவிட்ட நிலையில் தரை தளத்தில் தனியாக வசித்து வருகிறார்.

    இன்று அதிகாலை முதியவர் ராமநாதன் தனது வீட்டிற்குள் டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாடியில் இருந்து தீ புகை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் மகன் வெங்கடேசன் ஆகியோர் மாடிக்குச் சென்றனர். அங்கு கதவு  உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.  

    கதவை உடைத்து பார்த்தபோது அங்கு கருகிய நிலையில் ராமநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள்  அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நடத்தினர். 
    கொளத்தூரில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் அடுத்த செந்தில் நகர் பஸ் நிலையம் அருகில் வசித்து வந்தவர் சாய் கோவிந்த் (வயது29). என்ஜினீயரான இவர் வேளச்சேரியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். இந்தநிலையில் இன்று காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்குபோராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சாய் கோவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாய் கோவிந்தின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரிந்தது. இதனால், கடும் மன அழுத்தத்தில் இருந்த சாய் கோவிந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    ×