என் மலர்
நீங்கள் தேடியது "tag 113367"
சேலம் அஸ்தம்பட்டி, சின்னபுதூரில் ஓட்டல் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி சின்ன புதூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மேற்கு மாம்பலத்தில் பிரபல நகைக்கடை மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் பாண்டி பஜாரில் உள்ள பிரபல தங்க நகை கடையில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
பணி முடிந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார் மன வேதனையில் இருந்தார். இதுபற்றி மனைவி கேட்டபோது கடையில் பிரச்சினை என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் அறைக்குள் சென்ற ரவிக்குமார் திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கூச்சலிட்டார். தகவல் அறிந்ததும் குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களாக கடையில் உள்ள பிரச்சினை குறித்து ரவிக்குமார் மனைவியிடம் கூறி புலம்பி வந்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவிக்குமாரின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? அவருக்கும் கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே மோதல் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.