search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா"

    • கால்வின் மருத்துவமனை சார்பில் நடக்கிறது
    • இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையில் கால்வின் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவி ழாவை முன்னிட்டு பொது மக்கள் பயன்பெறும் வகை யில் ஆலய திருவிழாவின் அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்லும்பாதை அருகே இலவச கண் மருத்துவ முகாம் நடை பெறுகிறது.

    முகாமானது இன்று (25-ந்தேதி) முதல் 5-ம் நாள் திருவிழா வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 6-ம் நாள் திருவிழா முதல் திருவிழா வின் கடைசி நாள் வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை பெறுகிறது.

    இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

    மேலும் மருத்துவ குழுவினரால் கண் பரிசோதனை செய்யப் பட்டு பரிசோத னைக்கு பிறகு தேவைப்படும் நபர்க ளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கண் கண்ணாடி கள் வாங்கிக்கொள்ளலாம். மேலும் கண்புரை உள்ள வர்களுக்கு குறைந்த செல வில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் முகா மில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    • மாலை 6 மணிக்கு கொடி யேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது

    நாகர்கோவில் :

    கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா நாளை (24-ந்தேதி) பேராலய 11 நாள் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. நாளை காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு இறை மக்களும், 8 மணி திருப்பலியை அருகு விளை பங்கு இறை மக்களும் நிறைவேற்று கிறார்கள். மாலை 6 மணிக்கு கொடி யேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியை குமரி மாவட்ட போலீஸ் துறையினர் சிறப்பிக்கிறார்கள்.

    3-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறு கிறது. 9-ம் நாள் திருவிழா வான டிசம்பர் மாதம் 2-ந்தேதியன்று மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலை மையில் நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 10-வது நாளான 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற் கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்ப் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர யும் நடக் கிறது.

    8-ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்வும், புனித இஞ்ஞாசி யார், புனித சவேரியார், புனித தேவசகாயம் ஆகி யோரின் திருப்பண் பவனி, திருப்பண்டம் முத்தம் செய்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். தொ டர்ந்து அன்பின் விருந்து நடக்கிறது.

    திருவிழா எற்பாடுகளை பங்கு தந்தை பஸ்காலிஸ், உதவி பங்கு தந்தை ஜெனிஷ் கவின், கோட்டார் பங்குப்பே ரவை துணை தலைவர் ஜேசு ராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொரு ளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது.
    • திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இந்த திருவிழாவையொட்டி கூனவேலம்பட்டி புதூர், கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், ஆனைக்கட்டி பாளையம், குருக்கபுரம், ஆண்டகளூர்கேட், சக்தி நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 3 நாட்களும் அரிசி சோறு சாப்பிடவில்லை. தினை, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானிய வகைகளைத் தான் சாப்பிட்டு வந்தனர்.

    கோவிலில் பொங்கல் வைத்த பெண்கள் வெள்ளை சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்தனர். திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.

    பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    • விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
    • 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது

    விராலிமலை,

    தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்றாகும்.இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச் செய்த தலமாக விளங்கி வருகிறது. 

    திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை, திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம், ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம் என்ற பல்வேறு சிறப்புகளை கொண்டது இந்த கோவில்.

    அருணகிரிநாதரை முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிரி நாதர் வந்துள்ளார். வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம்.

    இங்கு பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இதன் பெருமைக்கு சான்று. மலைமேல் உள்ள சுப்பிமணியசுவாமி 6 முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்லித கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா, தை திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, பங்குனி உத்திர திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக, காலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

    அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் ஓம்,வேல், சேவல் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் பெற்று காப்பு கட்டி விரதத்தை தொடர்ந்தனர்.

    அதனை தொடர்ந்து தினமும்  காலையில் கேடயத்திலும் மற்றும் மாலையில் நாகம், பூதம் யானை, சிம்மம்  உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலாநடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி கஜமுக சூரன், 17-ந்தேதி சிம்மமுக சூரன் முருகனுடன் சூரன் போர் புரியும் நிகழ்வும் நடக்கிறது. தொடர்ந்து விழாவின் முக்திய நிகழ்ச்சியாக 18-ந் தேதி காலை பானுகோபன், மாலை 6 மணிக்கு சூரபத்பநாபன் வேடத்திலும் வந்து முருகனுடன் போர் புரியும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது.

    சூரனை வதம் செய்த பின் முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்திறார். இதையடுத்து 19-ந் தேதி மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுதிறது. தொடர்ந்து 20-ந்தேதி திருக்கல்யாண ஊர்வலமும், 21-ந் தேதி ஏகாந்த சேவையுடன் கந்த சஷ்டி விமா நிறைவடைகிறது விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், சிவாச்சாரியார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருதின்றனர்.

    • தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு.
    • விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2000 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் பேசுகையில் "இயற்கை முறையில் காய்கறிகளை விளைப்பது எப்படி? அதை மதிப்பு கூட்டுவது மற்றும் சந்தைப்படுத்துவது எப்படி" என்பது தொடர்பாக இந்த விழாவில் பேசப்பட்டுள்ளது.

    மேலும், ரசாயன விவசாயத்துக்கு நிகரான மகசூலை இயற்கை முறையில் எடுப்பது எப்படி என்பதை வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    மேலும், இன்று ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் இயற்கை விவசாயியாக மாறும் வகையில், மூன்று மாத பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளோம். கோவையில் உள்ள ஈஷா மாதிரி விவசாய பண்ணையில் இந்த மூன்று மாத பயிற்சி நடைபெற இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் விருப்பம் உள்ள இளைஞர்கள் அங்கேயே தங்கி மூன்று மாதம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி .ராமர் பேசுகையில் "நான் கமுதியில் 30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிரதான பயிராக மிளகாய் வற்றலை பயிரிட்டுள்ளேன். ஆண்டுக்கு 200 டன் மிளகாய் வற்றலை தரமான முறையில் உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்கிறேன். என்னை பார்த்து இன்று கிட்டதட்ட 400 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்" எனக் கூறினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் அவர்கள் நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், பல்லடம் விவசாயி பொன்முத்து இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து பேசினார். 

    அத்துடன், இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் பலர் இயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்புக் கூட்டி பொதுமக்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதற்காக 40 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பாரம்பரிய அரிசி, சிறு தானியம், தேன், கை வினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் நம் மரபு இசையை பேணி காக்க சவுண்ட் மணி அவர்கள் 80க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    அதனை தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் படையல் சிவா குழுவினருடன் இணைந்து அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் காய்கறி சாகுபடியை இயற்கை முறையில் செய்வது குறித்த கையேடும், பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    • ஆடி மாதம் முழுவதும் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
    • லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள்.

    ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும்.

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.

    எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி,

    மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட

    நல்ல கணவன் அமைவார்கள்.

    மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால்,

    குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    • நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.
    • நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி மாதம் தொடங்கியதும் மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும்.

    இதில் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று பெண்கள் தம் குடும்த்தார் மற்றும் உறவினர்களுடன் புத்தாடை அணிந்து,

    சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று,

    நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    இந்த தினத்தில் பெண்களால் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

    • ஆடி மாதம் பௌர்ணமி அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
    • ஹயக்ரீவரை வழிபட்டால், பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    ஆடி அமாவாசை

    தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசையாகும்.

    எனவே இந்த அமாவாசை மிக முக்கியம்.

    சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் பெண்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

    பெண்கள் அன்று கடலில் புனித நீராடி பித்ரு வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களைப் பெற முடியும்.

    ஆடி அமாவாசை தர்ப்பணத்தை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை.

    பெண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

    கல்வியில் ஜொலிப்பார்கள்

    ஆடி பவுர்ணமி

    ஆடி மாதம் பௌர்ணமி தினமும் விசேஷமானதுதான்.

    அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

    ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்

    பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    • இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.
    • பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை:

    தை மாதம் வரும் தை கிருத்திகை,

    கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

    மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

    இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

    ஆடிக்கிருத்திகை தினத்தன்று பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று

    புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

    குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    • நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.
    • அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.

    "அரியும் அரனும் ஒன்றே" என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன்,

    அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள்.

    அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி,

    ஈரப் புடவையுடன் கோவில் பிரகாரத்தில் படுத்து விடுவார்கள்.

    இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

    • திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
    • ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.

    ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து

    வழிபட்டால், பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    அம்மனுக்கு பிடித்தமான கூழ், கொழுக்கட்டையை படைத்து வழிபட்டால்

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

    மேலும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    துளசியை வழிபடுங்கள்...

    ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.

    ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துனமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால்

    குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,

    இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

    அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால்,

    பெண்களின் சாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    • ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
    • ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 20 குறிப்புகள் வருமாறு:

    1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

    2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

    3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டு தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

    4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

    7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

    8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது.

    எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

    9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

    10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

    11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது.

    எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

    13. ஆடி மாதம் சுக்ல தசமியில் "திக் தேவதா விரதம்" இருக்க வேண்டும்.

    அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

    14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

    15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

    18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள்.

    இதை அந்த பகுதி மக்கள் "ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு" என்று சொல்வார்கள்.

    19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும்.

    அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

    20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ×