search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20 cricket"

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகம். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 6.30 மணிக்கு சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தெர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகமாகியுள்ளனர். புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 5. மணிஷ் பாண்டே, 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. குல்தீப் யாதவ், 9. உமேஷ் யாதவ் 10. பும்ரா, 11. கலீல் அஹமது.
    டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா புதிய சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது. #INDvWI #RohitSharma
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

    இதேபோல் 20 ஓவர் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழி நடத்துகிறார். டோனி நீக்கப்பட்டதால் அவர் இடத்தில் ரிசப்பண்ட் விளையாடுவார்.

    3 போட்டிக்கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்துள்ளவர் மார்டின் கப்தில். நியூசிலாந்தை சேர்ந்த அவர் 73 இன்னிங்சில் 2271 ரன் எடுத்துள்ளார். சராசரி 34.40 ஆகும். இரண்டு சதமும், 14 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 105 ரன் எடுத்துள்ளார்.

    ரோகித் சர்மா 77 இன்னிங்சில் 2086 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார். சராசரி 32.59 ஆகும். 3 சதமும், 15 அரை சதமும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 118 ரன் குவித்துள்ளார்.



    கப்திலின் சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்த ரோகித் சர்மாவுக்கு 186 ரன்களே தேவை. தொடக்க வீரரான அவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் ரோகித் சர்மா 389 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்தார்.

    மேலும் வீராட் கோலி 20 ஓவர் தொடரில் ஆடாததால் அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோலி 20 ஓவர் ஆட்டத்தில் 2102 ரன் எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். அவரை முந்த ரோகித் சர்மாவுக்கு 17 ரன்களே தேவை. இன்றைய ஆட்டத்திலேயே அவர் கோலியை முந்தி அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். கப்திலையும் முந்தி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைக்க ரோகித்சர்மாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன்? என்பதற்கு பதில் அளித்த கேப்டன் கோலி, ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கவே அவர் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார். #ViratKohli #T20Cricket #Dhoni
    திருவனந்தபுரம்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

    இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தபோது, ஆச்சரியம் அடைந்தேன். நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு தானாகவே கிடைத்தது. முந்தைய ஆட்டத்தில் அவர்கள் 2-வது பேட்டிங் செய்து குறைந்த ரன்களில் வீழ்ந்தனர். அதனால் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து, கணிசமாக ரன்கள் குவித்து நெருக்கடி கொடுக்கலாம் என்ற நினைப்பில் முதலில் பேட்டிங் முடிவுக்கு வந்திருக்கலாம். எங்களுக்கு இது ஒரு திருப்திகரமான ஆட்டமாக அமைந்தது. எல்லா சிறப்பும் பவுலர்களையே சாரும்.

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன். நீக்கம் முடிவு எடுப்பதற்கு முன்பாக தேர்வாளர்கள் முதலில் அவரிடம் தான் பேசியிருக்கிறார்கள். எனவே அது குறித்து நான் இங்கு உட்கார்ந்து பேசுவதற்கு அவசியம் இருப்பதாக தெரியவில்லை. டோனி சம்பந்தமாக தேர்வாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மை அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.



    டோனி இன்னும் இந்த அணியில் முக்கியமான வீரராகத் தான் இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரிஷாப் பான்ட் போன்ற இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று டோனி கருதுகிறார்.

    ஒரு நாள் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த கோணத்தில் பார்த்தால் அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. மற்றவர்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை.

    இவ்வாறு கோலி கூறினார். #ViratKohli #T20Cricket   #Dhoni

    அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனியின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. #MSDhoni
    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பிங்கில் அசத்தும் டோனியால், ரன் குவிப்பில் முன்பு மாதிரி ஜொலிக்க முடியவில்லை. இதனால்தான் அவரை கழற்றி விட வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

    அவருக்கு பதிலாக 21 வயது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் 37 வயதான டோனியின் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் சொல்கிறார்கள். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்று தந்து வரலாறு படைத்த டோனி இதுவரை 93 இருவது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,487 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 54 கேட்ச், 33 ஸ்டம்பிங் செய்திருக்கிறார்.

    அடுத்த ஆண்டு (2019) மே இறுதியில் தொடங்கும் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை வரை ஆட வேண்டும் என்பதுதான் டோனியின் திட்டமாகும். ஆனால் அவர் போதிய பார்மில் இல்லாததால் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஒரு சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

    சச்சின் தெண்டுல்கருக்கு இந்த மாதிரி நெருக்கடி ஏற்பட்டபோது ஒரு நாள் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டு, சில காலம் டெஸ்டில் மட்டும் நீடித்தார். அவரது பாணியில் டோனி, 20 ஓவர் போட்டியை மறந்துவிட்டு, ஒரு நாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. டோனி ஏற்கனவே 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

    தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும்போது, ‘20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவரது 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்து விட்டதாக சொல்ல முடியாது. 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சில வீரர்களை பழக்கப்படுத்த விரும்புகிறோம்’ என்றார்.



    இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘அடுத்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடக்கிறது. அதுவரை டோனி விளையாடப்போவதில்லை. அப்படி இருக்கும்போது அவர் தொடர்ந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஏன் விளையாட வேண்டும்.

    இந்த விவகாரத்தை தேர்வு குழுவினரும், அணி நிர்வாகமும் சரியாக ஆலோசித்து முடிவு எடுத்து இருக்கிறார்கள். அணியின் தேர்வு குழு கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர். அதனால் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் தேர்வு குழுவினர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை’’ என்றார்.
    கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் ஜேசய் ராய் அதிரடியால் இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலக்கை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பட்லர் 13 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்னிலும், மோர்கன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.



    ஆனால் தொடக்க வீரர் ஜேசன் ராய் 36 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தா்ர. பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களும், மோயீன் அலி 27 ரன்களும், ஜோ டென்லி 20 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (3),  குசால் மெண்டிஸ் (1) சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.



    கேப்டன் திசாரா பெரேரா மட்டும் தாக்குப்பிடித்து 31 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 57 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ டென்லி நான்கு விக்கெட்டுக்களும், அடில் ரஷித் மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.

    இதனால் இங்கிலாந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    துபாயில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் கடந்த 24-ந்தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பாபர் ஆசம் (45), முகமகது ஹபீஷ் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

    பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது, டிஆர்கி ஷார்ட் (2), ஆரோன் பிஞ்ச் (3), கிறிஸ் லின் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.



    இதனால் ஆஸ்திரேலியா ரன் குவிக்க திணறியது. மேக்ஸ்வெல் மட்டும் தாக்குப்பிடித்து 37 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 21 ரன்னும், கவுல்டர்-நைல் 27 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியாவால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடர 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நாளை நடக்கிறது.
    20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால், 130 புள்ளிகளுடன் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறும். #PAKvAUS
    அபுதாபி:

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி (123 புள்ளிகள்) இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால், 130 புள்ளிகளுடன் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறும். மாறாக ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பாகிஸ்தான் அணியால் (132 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்க முடியும். ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றால் இந்திய அணியை (124 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடிக்கும்.  #PAKvAUS
    ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது டு பிளிசிஸ் டுமினியை டாஸ் சுண்டச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார். #SAvZIM
    தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 போட்டி கடந்த 9-ந்தேதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. பொதுவாக கிரிக்கெட் போட்டியின்போது போட்டியை நடத்தும் அணியின் கேப்டன் டாஸ் சுண்ட, வெளிநாட்டு அணி கேப்டன் ஹெட் அல்லது டெய்ல் என டாஸ் கேட்பார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருக்கும் டு பிளிசிஸ் கடந்த ஆறு போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், மாறுதலுக்காக ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத டுமினியை டாஸ் சுண்ட அழைத்தார். டுமினி டாஸ் சுண்ட ஜிம்பாப்வே அணி கேப்டன் என்ன விழ வேண்டும் என்ற விருப்பதை தெரிவித்தார்.

    இதில் டு பிளிசிஸ் டாஸ் வென்றார். பொதுவாக ஐசிசி போட்டி நடுவர் பார்வையில் டாஸ் சுண்டப்படும். கேப்டன் வரமுடியாத நிலை ஏற்பட்டால் துணைக் கேப்டன் டாஸ் சுண்டலாம்.

    ஆனால் டு பிளிசிஸ் டுமியை வைத்து டாஸ் சுண்ட வைத்தார். இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நான் என்ன செய்தனோ, அதை விரும்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் சில சுவராஸ்யமான வேடிக்கைகள் நிகழ வேண்டும். அது இங்கே இருந்து தொடங்கியுள்ளது’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற டி20 போட்டியில் 12 வயது சிறுவன் 62 பந்தில் 202 ரன்கள் குவித்துள்ளார். #T20Cricket
    தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று டி20 போட்டியில் பிரைம்ரோஸ் ஹப் அணிக்காக 12 வயது சிறுவன் கீரன் பொவர்ஸ் விளையாடினார். இவர் 62 பந்தில் 202 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் வங்காளதேசம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #BANvWI #T20
    வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி லவுடர்ஹில்லில் இன்று நடந்தது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேசம் 48 ரன்னுக்கு 3 விக்கெட்(7.4 ஓவர்) இழந்தது. அதன்பின் தமிம் இக்பால் -‌ ஷகிப்அல் ஹசன் ஜோடி சிறப்பாக விளையாடியது. அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன் எடுத்தது. தமிம் இக்பால் 74 ரன்னும், ‌ஷகிப்-அல்ஹசன் 60 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட்இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 159 ரன்களே எடுக்க முடிந்தது.

    இதனால் வங்காளதேசம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இருந்தது.

    3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. #BANvWI #T20
    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. #ENGvIND
    மான்செஸ்டர்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) மான்செஸ்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை வென்ற கையுடன் இந்த போட்டியில் இந்திய அணி களம் காணுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரை வென்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் களம் இறங்கும்.

    இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானதாகும். எனவே இந்த போட்டி தொடர் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

    20 ஓவர் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 5 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணி 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

    இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், டேவிட் வில்லி, டேவிட் மலான். #ENGvIND
    அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது. #IREvIND #INDvIRE
    டப்ளின்:

    அயர்லாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (97 ரன்), ஷிகர் தவான் (74 ரன்) ஜோடி அயர்லாந்தின் பந்து வீச்சை பின்னியெடுத்து அணி 200 ரன்களை கடக்க வித்திட்டனர்.

    அதன் பிறகு களம் இறங்கிய சிறிய அணியான அயர்லாந்து இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சுழற்பந்து வீச்சு கூட்டணி குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை அள்ளினர்.இந்த நிலையில் இந்தியா- அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதிலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘மிடில் வரிசையில் நாங்கள் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்கப்போகிறோம். அடுத்து வரும் இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளிலும் இது தொடரும்’ என்றார். முதல் ஆட்டத்தில் சேர்க்கப்படாத தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது. கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணி வீரர்களை பொறுத்தவரை முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள்.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #IREvIND #INDvIRE 
    ×