என் மலர்
செய்திகள்

X
ஒரேயொரு டி20- இங்கிலாந்து சுழலில் சிக்கி 30 ரன்னில் தோல்வியை சந்தித்தது இலங்கை
By
மாலை மலர்28 Oct 2018 8:42 AM IST (Updated: 28 Oct 2018 8:42 AM IST)

கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் ஜேசய் ராய் அதிரடியால் இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலக்கை பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பட்லர் 13 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்னிலும், மோர்கன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

ஆனால் தொடக்க வீரர் ஜேசன் ராய் 36 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தா்ர. பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களும், மோயீன் அலி 27 ரன்களும், ஜோ டென்லி 20 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (3), குசால் மெண்டிஸ் (1) சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கேப்டன் திசாரா பெரேரா மட்டும் தாக்குப்பிடித்து 31 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 57 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ டென்லி நான்கு விக்கெட்டுக்களும், அடில் ரஷித் மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.
இதனால் இங்கிலாந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Next Story
×
X