search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspend"

    • கரூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்
    • ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

    கரூர்,

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கழகத்தின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சி.சுப்பிரமணியன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவராக கே.கனகராஜ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனுமதி இன்றி மின் இணைப்பு கொடுத்தார்
    • விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் மோசடி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது வீட்டிற்கு மின்சார இணைப்பு வசதி கோரி அப்பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் பரிசீலனை நிலையில் இருந்ததால், உரிய அனுமதி வழங்கப்படமல் இருந்து வந்தது. இந்நிலையில் வடிவேலுவின் வீட்டிற்கு மின் வாரிய ஊழியர் முருகேசன் மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறார்.இதற்காக அவரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வின் போது, அந்த மின்சார இணைப்புக்கு உரிய அனுமதி இல்லாமல் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • கூடுதல் கலெக்டர் உத்தரவு
    • வீடுகள் கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டமடவு ஊராட்சியில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடுதல் கலெக்டர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ள திடீரென சென்றார். அப்போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 வீடுகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டதும் சில வீடுகளுக்கு கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கட்டமடுவு ஊராட்சி செயலாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் வாசு உள்ளிட்டவர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    • கஞ்சா கடத்திய வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையை அடுத்த கத்தக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயரவிவர்மா. இவர் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கோவிலூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயரவிவர்மா மற்றும் இருவர் பயணம் செய்த சொகுசுக்காரை வல்லத்திராக்கோட்டை பகுதியில் போலீசார் சோதனை யிட்டபோது அவரது காரில் 1.700 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஜெயரவிவர்மா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வரும் சூழலில், துறை ரீதியான நடவடிக்கையாக, ஜெயரவிவர்மாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


    • காவல் உதவி ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது.
    • உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.

    நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, நாமக்கல்லை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் சேரில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார். போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார். இதனை வீடியோ பதிவு செய்தவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோர் வைரலானது.

    காவல் உதவி ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.

    • நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
    • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்

    பர்வானி:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

    • அரக்கோணம் கோட்டாட்சியர் உத்தரவு
    • நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலுார், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    இங்கு, நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.இந்த நிலையில் வேலூர் வ சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல் பாண்டியன் மேல்பாக்கம் நிர்வாக கிராம அலுவலர் குமரவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர். குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக

    போலியாக அடங்கல் சீட்டு கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியுள்ளார்.

    இதனால் அவர்கள் கைத செய்யப்பட் டுள்ளனர். இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமரவேலை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்வதாக அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா உத்தரவிட்டுள்ளார்.

    • தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    தீபாவளி பண்டிகையையொட்டி அரசு சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ராசிபுரத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் தீபாவளி பண்டிகைக்கு நாமக்கல் தீயணைப்பு துறையை சேர்ந்த திருமுகம் என்பவர் இனாம் கேட்டதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இைதயடுத்து திருமுகத்தை சஸ்பெண்டு செய்து தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.

    • பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்.

    உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

    உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பின்னர் பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்னதாகவே வீடு திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
    • அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.

    மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் இறந்த விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். உரிய சிகிச்சை தரவில்லை என உறவினர்கள் புகார் கூறிய நிலையில், சரியான மருத்துவம் பார்க்கப்பட்டதாக அரசின் குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மின் கட்டணத்தை கையாடல் செய்தார்
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மின்வாரிய அலுவலகத்தில் வாடிக்கை யாளர்களின் மின்சார கட்டணத்தை வசூலிக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தை வரவு வைக்காமல் இருந்தார்.

    காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணம் செலுத்தும் போது கம்ப்யூட்டரில் சர்வேயர் வேலை செய்யவில்லை என கூறி பணத்தை பெற்றுக் கொண்டு வெங்கடேசன் வரவு வைக்காமல் இருந்து உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் மின் இணைப்பு துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது காவேரிப்பட்டு பகுதியில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று மின் இணைப்பு துண்டிக்க சென்றனர்.

    அப்போது தான் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு வீட்டின் உரிமையாளர் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான ரசீது தரவில்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    இதனால் வீட்டின் உரிமையாளர் மின் வாரிய ஊழியர் முறைகேடு செய்தது குறித்து புகார் தெரிவித்தார். விசாரணையில் மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் வாடிக்கை யாளர் பணத்தை பெற்றுக் கொண்டு வரவு வைத்து ரசீது வழங்கவில்லை என தெரியவந்தது.

    இதனையெடுத்து வாணியம்பாடி செயற்பொ றியாளர் பாஷா முகமது உடனடியாக வெங்க டேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட்.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சமூக நலத்துறை நடவடிக்கை.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர், ராணிப்பேட்டையில் உள்ள ஆண்கள் அரசு பள்ளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மையத்தின் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்தது.

    ×