search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வாரிய ஊழியர் சஸ்பெண்டு
    X

    மின்வாரிய ஊழியர் சஸ்பெண்டு

    • மின் கட்டணத்தை கையாடல் செய்தார்
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மின்வாரிய அலுவலகத்தில் வாடிக்கை யாளர்களின் மின்சார கட்டணத்தை வசூலிக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தை வரவு வைக்காமல் இருந்தார்.

    காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணம் செலுத்தும் போது கம்ப்யூட்டரில் சர்வேயர் வேலை செய்யவில்லை என கூறி பணத்தை பெற்றுக் கொண்டு வெங்கடேசன் வரவு வைக்காமல் இருந்து உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் மின் இணைப்பு துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது காவேரிப்பட்டு பகுதியில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று மின் இணைப்பு துண்டிக்க சென்றனர்.

    அப்போது தான் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு வீட்டின் உரிமையாளர் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான ரசீது தரவில்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    இதனால் வீட்டின் உரிமையாளர் மின் வாரிய ஊழியர் முறைகேடு செய்தது குறித்து புகார் தெரிவித்தார். விசாரணையில் மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் வாடிக்கை யாளர் பணத்தை பெற்றுக் கொண்டு வரவு வைத்து ரசீது வழங்கவில்லை என தெரியவந்தது.

    இதனையெடுத்து வாணியம்பாடி செயற்பொ றியாளர் பாஷா முகமது உடனடியாக வெங்க டேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×