மின் வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

அனுமதி இன்றி மின் இணைப்பு கொடுத்தார் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் மோசடி
மின் வாரிய ஊழியர் சஸ்பெண்ட்
Published on

ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது வீட்டிற்கு மின்சார இணைப்பு வசதி கோரி அப்பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் பரிசீலனை நிலையில் இருந்ததால், உரிய அனுமதி வழங்கப்படமல் இருந்து வந்தது. இந்நிலையில் வடிவேலுவின் வீட்டிற்கு மின் வாரிய ஊழியர் முருகேசன் மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறார்.இதற்காக அவரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வின் போது, அந்த மின்சார இணைப்புக்கு உரிய அனுமதி இல்லாமல் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com