search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி ஆசிரியர்"

    • லட்சுமணன் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.
    • வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள மணக்கோடு நல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.

    இவர் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி பாபநாசத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இருவரும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை மற்றும் 48,000 பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது, தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வலங்கை மான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்தை வலங்கைமான் போலீசார் பார்வையிட்டனர்.

    பின்னர் திருவாரூர் மாவட்ட கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகள் பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து வலங்கை மான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர்.

    இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார்.

    கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

    போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார்.
    • சிவஞானசுந்தரம் தங்கியிருந்த அறையில் துர்நாற்றம் வீசியது.

    திருப்பூர் :

    திருப்பூர், காந்தி நகர், லட்சுமி தியேட்டர் ரோடுபகுதியை சேர்ந்தவர் சிவஞான சுந்தரம், ( வயது 50). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார். இதனால் ஆசிரியர் சிவஞானசுந்தரம் மட்டும் தனியாக தங்கி இருந்து பள்ளிக்கு சென்று இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று துர்நாற்றம் வீசியது.இது குறித்து அக்கம் பக்கத்தினர் வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கதவை உடைத்துபார்த்த போது அங்கு ஆசிரியர் சிவஞானசுந்தரம் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதிவைக்கப்பட்டிருந்து. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
    • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்

    பர்வானி:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

    • சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுங்கள் என்று ஆசிரியர் கூறியுள்ளார்.
    • ஆசிரியர் தன் மீது புகார் அளித்தால், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என அனைவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அருகேயுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார்.

    இந்த நிலையில், பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்களிடம் இந்த வயதில் காதலிக்காமல் எந்த வயதில் காதலிப்பது என்றும், அதேபோல் சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் நடந்து செல்லும்போது, அவர்களை ஆபாசமாக சித்தரித்து, சக மாணவர்களிடம் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக பள்ளியில் பயின்று வரும் மாணவன் ஒருவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டுள்ளார்.

    அதன்பேரில் இன்று காலை பள்ளிக்கு சென்ற பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் 10-ம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து குறிப்பிட்ட ஆசிரியர் முன்னிலையில் விசாரித்தனர்.

    ஆசிரியர் நடந்துகொண்ட விதம் உண்மை என்று தெரிந்ததையடுத்து காவல் நிலையம், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் அளிக்கக்கூறி தலைமை ஆசிரியரிடம் ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

    இந்த விவகாரம் பெரியதாக செல்வதை அறிந்த சில்மிஷ ஆசிரியர் தன் மீது புகார் அளித்தால், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என அனைவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து ஒன்று கூடி பேசிய ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி மாணவிகளின் நலன் கருதி, நாளை முதல் இப்பள்ளியில் அந்த ஆசிரியர் பணி செய்யக்கூடாது என்றும், பணி ஓய்வு பெறும் வரை பள்ளிக்கு வரக்கூடாது என்றும் கூறி விட்டு சென்று விட்டனர். இதற்கு அந்த ஆசிரியரும் ஒப்புக்கொண்டார்.

    இச்சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • தோழி வீட்டில் நகை திருடிய பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
    • செந்தில் நாயகி, தான் வாங்கிய 9 பவுன் 4 கிராம் தங்க நகையை ரெய்னா பேகத்திடம் காண்பித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சங்கர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி செந்தில் நாயகி (வயது51). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவருடன் மதுரை தலை விரித்தான்சந்து பகுதியைச் சேர்ந்த அகமத்ராஜா மனைவி உமா மகேஸ்வரி என்ற ரெய்னாபேகம்(32) ஆசிரியையாக பணியாற்று கிறார். இருவரும் கடந்த 8 வருடங்களாக சினேகிதியாக உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரெய்னா பேகம் லேப்டாப் கொடுப்பதற்காக திருமங்கலத்தில் உள்ள செந்தில்நாயகி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது செந்தில் நாயகி, தான் வாங்கிய 9 பவுன் 4 கிராம் தங்க நகையை ரெய்னா பேகத்திடம் காண்பித்துள்ளார்.

    மறுநாள் காலையில் வீட்டின் படுக்கையறை பீரோவில் இருந்த நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்நாயகி, தோழி ரெய்னா பேகத்திடம் நகை குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் செந்தில் நாயகி புகார் கொடுத்தார். அதில் நகை திருட்டு தொடர்பாக ரெய்னா பேகம் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் செந்தில்நாயகியின் நகையை திருடியது ரெய்னா பேகம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×