என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்காளர் பட்டியல் திருத்த பணிச் சுமையால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
    X

    வாக்காளர் பட்டியல் திருத்த பணிச் சுமையால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை

    • 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

    கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பையன்னூர் அருகே ஏவுனுக்கு கண்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் தொடங்கிய நிலையில் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அனீஸ் ராஜ் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே நேற்று முன்தினத்துக்குள் அனைத்து வாக்காளர்களிடமும் கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும் என்று அனீஸ் ஜார்ஜூக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார். இருப்பினும் கொடுத்த கால அவகாசத்துக்குள் அவரால் 200 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனீஸ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்து போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனது மகன் நள்ளிரவு 2 மணி வரை வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அதீத பணி அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஜார்ஜ்ஜின் தந்தை தெரிவித்தார். இந்த ச,சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாநில தேர்தல் ஆணையர் விளக்கம் கேட்டுள்ளார்.

    Next Story
    ×