அரசு வேலை வாங்கி தருவதாக தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி

பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.போலீசார் அருண்குமார் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
அரசு வேலை வாங்கி தருவதாக தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி
Published on

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரபால், இவரது மனைவி சவுதாமணி (43), முதுநிலை பட்டதாரி ஆசிரியையான இவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

இவரிடம் சென்னையை சேர்ந்த அருண்குமார் என்பவர் தொடர்பு கொண்டார். தொடர்ந்து சவுதாமணியின் வீட்டிற்கு வந்த அருண்குமார் அரசு பள்ளியில் அவருக்கு ஆசிரியை பணி வாங்கி தருவதாகவும், அவரது கணவரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளர் பணி வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார்.

இதனை நம்பிய சவுதாமணி, அருண்குமாருக்கு கூகுள் பே மூலம் கடந்த 2021 மற்றும் 22-ம் ஆண்டுகளில் ரூ. 12 லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாயை 15 தவணைகளாக அனுப்பி உள்ளார். ஆனால் அவர் கூறிய படி இதுவரை வேலை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சவுதாமணி சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய அம்மாப்பேட்டை போலீசார் அருண்குமார் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com